Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
சிறப்பு செய்திகள்
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, ஜனவரி 2018 (12:22 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜனவரி 2018 (12:22 IST)


‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
-பாயும் வழக்குகள்! தொடரும் மிரட்டல்கள்!
மிழை ஆண்டாள் கட்டுரை சர்ச்சையாகிவிட்ட நிலையில், வருத்தம் தெரிவித்தும், விளக்கம் அளித்தும்கூட கவிஞர் வைரமுத்துவை விடமாட்டார்கள் போலும்! சட்டம் ஒருபுறம் தன் கடமையைச் செய்கிறது. இன்னொருபுறம், பக்தர்கள் என்ற பெயரில் மிரட்டல் விடுத்த வண்ணம் இருக்கிறது ஒரு கூட்டம்.  

ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வைரமுத்து மீது ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. சென்னையில், கொளத்தூரிலும், சிந்தாதிரிப்பேட்டையிலும் மேலும் இரண்டு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. 

‘வைரமுத்து எழுதிய எழுத்துக்கும், பேசிய பேச்சுக்கும் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?’ என்று அவர் மீதான வழக்கில் போடப்பட்டிருக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் குறித்து வலைத்தளங்களில் ஆளாளுக்கு பதிவுகள் போட்டிருக்கின்றனர்.பிரிவு 153-A பிரகாரம், உள்நோக்கத்துடன் தனது பேச்சாலோ, எழுத்தாலோ, மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே பகையை மூட்டியது அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். பிரிவு 295 A பிரகாரம், தனது பேச்சாலோ, எழுத்தாலோ, இந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நிரூபணமானால், 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 

பிரிவு 505 (1) பிரகாரம், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கட்டுரையை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். சட்டரீதியாக, வைரமுத்துவுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும் என்றெண்ணியோ என்னவோ, சிலர் போராட்டங்கள் நடத்தியவண்ணம் உள்ளனர். ஒரு கூட்டம் வீதியில் இறங்கிப் போராடுகிறது என்றால், இன்னொரு கூட்டம் வலைத்தளங்களில், பழைய விவகாரங்களை தூசு தட்டி பதிவு செய்கிறது. இத்தைகைய பதிவுகளில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், அறிஞர் அண்ணா, கி.வீரமணி, தாமரைக்கனி போன்றவர்கள் குறித்த விஷயங்கள் உள்ளன. ‘இன்றைக்கு முத்துராமலிங்கத் தேவர் உயிரோடு இல்லை. தாமரைக்கனியும் மறைந்துவிட்டார். அந்தக் காலத்திலும் மதுரை மீனாட்சி குறித்தும், இதே ஆண்டாள் குறித்தும் கீழ்த்தரமாகப் பேசினார்கள். அதற்கு கடவுள் நம்பிக்கையாளர்கள் தந்த பதிலடி கடுமையானது. தெய்வங்களை அவதூறாகப் பேசியவர்களுக்கு,  தங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாதபடி பாடம் கற்பித்தனர். வைரமுத்துவுக்கும் இது நடந்தே தீரும்.’ என்கிற ரீதியில், வன்முறையைத் தூண்டும் விதத்தில் அந்தப் பதிவுகள் உள்ளன. 20-7-1982-இல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே,  தாமரைக்கனி ஆட்கள் கி.வீரமணியைத் தாக்கிய விவகாரத்தில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்றவர்கள் எச்.ராஜாவின் வன்முறைப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தாலும்,  கலக்கத்திலேயே இருக்கிறார்  வைரமுத்து.    ‘தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிகமிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. தேவரடியார் அல்லது தேவதாசி என்பது திருப்பெயர்களே ஆகும். என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.’ என்று  உருக்கத்துடன் விளக்கம் அளிக்கிறார்.  

‘ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான். என்னைப் புரிந்துகொள்ளுங்கள்.’ என்று இவ்வளவு தூரம் வைரமுத்து இறங்கிவந்து வருத்தம் தெரிவித்த நிலையிலும், ‘விட்டேனா பார்!’ என்று கலகம் செய்பவர்களை என்னவென்று சொல்வது?

-சி.என்.இராமகிருஷ்ணன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(18)
Name : karikalan1 Country : United Kingdom Date :1/17/2018 9:23:51 PM
மூளை உள்ளவர்கள் ஆண்டாளை போய் போலீஸ் ஸ்டேஷனிலே முறையிட சொல்வார்களா? ஆண்டாள் எந்த நூற்றாண்டில் இருந்தவர் என்பதுகூட தெரியவில்லை....திராவிடம் பற்றி பேசுபவர்கள் ஒன்றை மனதில் கொள்ளவேண்டும்.....திராவிடம் என்பது பொய்..பரப்புரை செய்து தமிழின அடையாளத்தை இல்லாமல் செய்ய உருவாக்கப்பட்ட்து....தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.....இப்போதெல்லாம் நம் சைவ வைஷ்ணவ சமயங்களை கேலி செய்வது பாஷன் ஆகிவிட்ட்து.....
Name : S.Govindarajan Date :1/17/2018 6:13:20 PM
சூப்பர் உசா என்ன மாதிரி டான்ஸ் ஆடுவார் என்று சொல்ல முடியுமா?
Name : Ponnuraj Date :1/17/2018 12:18:28 PM
அதிகாரம் கையில் இருப்பதால் தேவையில்லாத பிரச்னையை ஊதி பெரிதாக்குகிறார்கள். இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. மதம் என்கின்ற உணர்வுபூர்வமான செயல்பாடுகளில் பிரச்னை செய்தவர்களின் நிலையை நாடே அறியும்.
Name : RAMRAJ Date :1/16/2018 7:30:17 PM
இந்த தேவர் பெருமகனார் இருந்திருந்தால் இன்றைக்கு இதுபோல் பேசுவார்களா.ஏற்கனவே அண்ணாதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர மூக்குத்தி எதற்கு எனக்கேட்ட அண்ணாதுரை உயிர் தப்பினால் போதும் என அங்கிருந்து ஓடிவந்தார்.
Name : Tamilselvan Country : United States Date :1/16/2018 6:36:29 PM
வைரமுத்து மன்னிப்பு கேட்பது தான் தான் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும். அவர் மன்னிப்பு கேட்க தயங்குவது மிக மிக தவறு. அவர் அதற்கு உரிய விலையை விரைவில் கொடுப்பார்.
Name : Superusa Country : United States Date :1/16/2018 4:26:47 PM
ஆயிரம் வருடமாக நம்மை குரங்கு என்று ஒரு புத்தகமே போட்டு அந்த ராமாயணமே இறை நூல் என்று கூறுவதை அப்போ என்னன்னு சொல்றது? ஒரே ஒரு உண்மை வார்த்தைக்கு ஏன் இவனுங்க? தாசியாக ஊழியம் பார்க்க வந்தவர்கள்தானே பார்ப்பன பெண்கள்! அவர்கள் ஆடும் பரதநாட்டியம் என்பது சதிர் ஆட்டம் என்று தானே அழைக்கப்பட்டது! பரதநாட்டியம் ஒவ்வொவொரு முத்திரையும் செக்ஸ் போஸைதானே குறிக்கும்! இவனுங்க குரங்குன்னு சொன்னதுக்கு எவ்வளவு கெட்ட வார்த்தைகள் நாமும் பேசலாம்!
Name : arabuthamilan Country : Bahrain Date :1/16/2018 12:30:47 PM
இவனுக கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. எச்ச.ராஜா என்ன...ஆண்டாளுக்கு பினாமியா? ஆண்டாளை பேசினத்துக்கு ஆண்டாள் ஒண்ணும் சொல்லவில்லை. இவனுக எதுக்கு குமிறிக்கொண்டு இருக்கானுங்க. அப்படி உங்க ஆண்டாளுக்கு ரோஷம் மானம் சூடு சொரணை இருக்குன்னா அவளே போயி காவல் நிலயத்தில் புகார் கொடுக்கட்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம். கடவுளை (?) வைத்தே அரசியல் பண்ணும் கயவர்கள் நம் இந்தியாவில் இருப்பதால் தான் இந்தியா இன்னும் பின் தங்கிய நிலைமையில் இருக்கிறது. மூளை உள்ளவர்கள் சிந்திப்பார்களாக.
Name : V.K.SELVAKUMAR. Country : Australia Date :1/16/2018 9:35:53 AM
கர்நாடகாவில் இன்னும் தேவதாசி முறை இருக்கிறதா? அது எச் ராசா விற்குத் தெரியாது என்று நினைக்கிறோம். பிஜேபி கும் தெரியாது, மோடிக்கும் தெரியாது என்று நினைக்கிறோம். இதை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் மிகுந்த தன்மான முள்ளவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வதால் நடவடிக்கை ஏதாவது எடுப்பார்கள். https://timesofindia.indiatimes.com/india/Devadasi-system-still-exists-in-Telangana-AP-says-report/articleshow/46337859.cms , https://scroll.in/article/852319/is-the-devadasi-system-still-followed-in-southern-india
Name : நிலா Country : Canada Date :1/15/2018 1:03:27 PM
ராமர் பிள்ளையார் சிலைகளை உடைத்து போராட்டம் நடத்திய பெரியார் வாழ்ந்த மண்ணின் நிலை தலைகீழாக மாறிவிட்டது . ஆண்டாள் வைத்து கேவலமான அரசியல் செய்கின்றார்கள். ஒரு மேற்கோள் காட்டியதற்கு இவ்வளவு ஆவேசப்படுகின்றவர்கள் கர்நாடகாவில் இன்னும் தேவதாசி முறை இருக்கின்றதே அதை மாறறலாமே? ஆன்மீகம் வேறு மத அரசியல் வேறு.. மதவாதிகள் ஆன்மீகத்தின் எதிரிகள்.. தமிழ் சைவர்களும் வைணவர்களும் சேர்ந்து இந்து மத வெறியர்களை விரட்டியடித்து ஆன்மீகத்தை காப்பாற்ற வேண்டும்.
Name : john Country : Bahrain Date :1/15/2018 11:49:16 AM
இதுதான் உங்க ஆன்மீக அரசியலோ
Name : john Country : Bahrain Date :1/15/2018 11:45:35 AM
Yes. Let case come to court, let court decide people கோ. It looks like padmavathi film case in the north.
Name : baala Date :1/15/2018 9:42:42 AM
எப்படியாவது உங்களுக்கு அரசியல் நடத்தணும் அதற்க்கு மக்களை தவறாக வழி நடத்துவது
Name : inba madurai Country : Indonesia Date :1/14/2018 11:50:09 PM
S.Govindarajan என்ற வாசகர் வைரமுத்து விவகாரத்தையும் ஒய்.ஜி.மகேந்திரனின் மன்னிப்பையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார். பிலால் மாலிக் என்னும் முஸ்லீம் இளைஞர்தான் சுவாதியைக் கொலை செய்தார் என்ற பதிவை ஒய்.ஜி.மகேந்திரன் முகநூலில் ஷேர் செய்திருந்தார். அது அப்பட்டமான கொலைப்பழி. அதனாலேயே, தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டார் ஒய்.ஜி.மகேந்திரன். வைரமுத்து விவகாரம் அப்படி கிடையாது. தகுந்த விளக்கம் அளித்து வருத்தமும் தெரிவித்திருக்கிறார். யார் தவறு செய்தாலும் தவறுதான். சரியாகிவிடாது. மிரட்டல் அஸ்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவன் என் பென்சிலைத் திருடினான்; நானும் திருடினேன் என்கிற ரீதியில் கருத்து பதிவிடுவது சரிதானா? அப்சல் குருவும் இஸ்லாமியர்தான். இந்தியாவில் தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவை ஊடகங்கள் கொண்டாடவா செய்தன?
Name : PINAKA Date :1/14/2018 10:25:17 PM
விடாதே..! பிடித்து தொங்கு...??? எல்லா மன்னர்கள் காலத்திலும் செய்தது தானே...??? தமிழகத்தில் எட்டையப்பன்கள் இருக்கும் வரை.., உங்கள் காட்டில் மழை தான்...??? பேராசை பெரு நஷ்ட்டம் என எம் முன்னோர்கள் கூறி உள்ளனர்...???
Name : S.Govindarajan Date :1/14/2018 7:08:22 PM
சி.என் .ராமகிருஷ்ணன் அவர்களே,வைரமுத்து தாம் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இருந்தால் பிரச்சனை தீர்ந்து இருக்கும்.மனித நேய மக்கள் கட்சி ,ஒய் .ஜி மஹேந்திரன் ஒரு செய்தியை ஷேர் செய்ததற்காக போராட்டம் நடத்தி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியது.அப்போதெல்லாம் நீங்கள் வாய் திறக்கவில்லை.இப்போது வைரமுத்து அவர்களுக்கு வக்காலத்து வாங்க வருகிறீர்கள்.சமீப காலமாக வீரமணி, , திருமா,வைரமுத்து,வீரபாண்டியன்,என்று சிலர் தொடர்ந்து இந்து மதத்தையும் இந்துக்களையும் இழிவு படுத்துவதையே வேலையாக கொண்டுள்ளார்கள்.எவ்வளவு காலம்தான் பொறுக்க முடியும்?.சில பத்த்ரிக்கைகள் வேறு இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.,(நக்கீரன் உட்பட ) வேறு மதங்களை இவ்வாறு இழிவுபடுத்த முடியுமா? கூறுங்கள்.
Name : pathman Country : United States Date :1/14/2018 5:58:13 PM
அத்துடன் மீண்டும் ஆயுதம் தூக்க நேரிடும் என்று சொன்ன "என் உயிரினும் இனிய தமிழ் மக்களே" என்று தனது படங்கள் ஓடுவதற்ககா நடிக்கும் பாரதி ராஜாவின் மேலும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு போடவும்.இந்திய ஒற்றுமை பற்றி பேசுபவர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்க்கின்றார்.சோனியாவை புகழ்கின்றார்.
Name : S PANDIARAJAN Country : India Date :1/14/2018 4:04:21 PM
இந்து என்ற வேஷத்தில் எச்ச ராஜா போன்றவர்கள் தூண்டி விடும் போக்கு வன்மையாக கண்டிக்க தக்கது
Name : JP Date :1/14/2018 1:19:50 PM
எச்ச ராஜா மற்ற மதங்களை குறித்து பேசாத வார்த்தைகளா... அவன் பேசியது எல்லாம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காதா! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் RSS கூட்டம் தமிழகத்தில் ஆதி வாங்கியே சாகப்போகின்றது... முக்கியமாக அந்த மத காரர்களே அடித்து நொறுக்கப்போகின்றார்கள்.