Add1
logo
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு! || மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்! ||
சிறப்பு செய்திகள்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, ஜனவரி 2018 (1:52 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜனவரி 2018 (10:6 IST)

நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன? வாழ்வதற்கு அவசியமானது உணவு. அதை அளித்த  இயற்கைக்கு  நன்றி செலுத்தும் விதமாக தை ஒன்றாம் நாள்(ஜனவரி 14 அல்லது 15)  உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை போன்றே இந்தியா முழுவதும் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அதெல்லாம் என்ன பண்டிகை, ஏன் கொண்டாடப்படுகிறது என்று பார்ப்போம்.  

ஆந்திரா மற்றும் தெலுங்கானா "சங்கிராந்தி" என்ற பெயரில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொண்டாடப்படுகிறது. நாம் இனிப்பு மற்றும் வெண் பொங்கல் வைப்பதை போலவே இவர்கள் அப்பளம்(அதிரசம் போல)  காரம், இனிப்பு என்று வகை, வகையாக கடவுளுக்கு படைத்துவிட்டு தாங்களும் சாப்பிடுகின்றனர். வீட்டின் முன் கோலம் போடுவது, பூக்களால் அலங்காரம் செய்வது என்று அப்படியே பொங்கல் பண்டிகை போலவே கொண்டாடப்படுகிறது.  

அஸ்ஸாம் "மாக் பிஹு" என்ற பெயரில் அஸ்ஸாமில் கொண்டாடப்படுகிறது. இதுவும் அறுவடைக்கான பண்டிகைதான். மூங்கில் இலைகளை கொண்டு கீற்று நெய்து அதனை அன்று இரவு எரித்துவிடுவர். கிடா சண்டை போல் அங்கு எருமை மாட்டு சண்டை நடக்கும்.

பிஹார் "கிச்சடி" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வெல்லத்தை வைத்து தயாரிக்கப்படும் லட்டுதான் இந்த பண்டிகையின் ஸ்பெஷல். 

குஜராத் "உத்தராயன்" எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது உலக பேமஸ், காரணம் இங்கு இந்த பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் பட்டம் விடும் விழா. உலகில் பல நாடுகளில் இருந்து வந்து இங்கு வித விதமாக பட்டம் விட்டுச்செல்கின்றனர்.

கர்நாடகா மாடுகளை அலங்கரித்து, நவதானியங்களில் உணவு, வித, விதமான காய்கறிகளில் கூட்டு, பொரியல் செய்து குடும்பத்துடன் சேர்ந்து உண்ணுவதுதான் "மஹர் சங்கிராந்தி".

இந்தியாவில் நிறைய மாநிலங்களில் இந்த பண்டிகையெல்லாம் "மஹர் சங்கிராந்தி" என்ற பெயரில்தான் அழைக்கப்படுகிறது. நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அன்று அறுவடைக்காகவும், இயற்கையை வழிபடும் வகையிலும் கொண்டாடுகின்றன. 

-சந்தோஷ் குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :