Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்!
 ................................................................
சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன்
 ................................................................
சுஷ்மாவிடம் கதறிய காரைக்கால் மீனவ பெண்கள்!
 ................................................................
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (23:57 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜனவரி 2018 (0:23 IST)

ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் கமல் சுற்றுப்பயணம்


தீவிர அரசியலில் இறங்கப்போகும் நடிகர் கமலஹாசன் அதற்கான முன்னறிவிப்பை செய்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ’’ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். சுற்றுப்பயணங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.  

கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கைது!


சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் நாதுராம் குஜராத்தில்  கைது செய்யப்பட்டான்.  தலைமறைவாக இருந்த நாதுராமை ராஜஸ்தான் போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்.

தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் உயர்ந்த பொருளில்
 வழங்கப்பட்டவார்த்தை: வைரமுத்து விளக்கம்


  ’’தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பரப்பப்பட்டும் இருக்கிறது.   தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை.  கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக்கொண்ட உயர்ந்த பெண்களுக்கே தேவரடியார் அல்லது தேவதாசி என்ற திருப்பெயர்கள் வழங்கப்பட்டு வந்தன.  அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவர்கள்.  பின்னாளில் தேவதாசி என்ற உயர்பொருள் நிலவுடைமைச் சமூகத்தால்  பொருள் மாற்றம் பெற்றது.  பழங்காலத்தில் நறுமணத்தை மட்டுமே குறித்த நாற்றம் என்ற சொல், பிற்காலத்தில் துர்நாற்றம் என்றே திரிந்துவிட்டது.  அப்படித்தான் ஆண்டாள் காலத்தில் உயர்பொருளில் வழங்கப்பட்ட சொல் பிற்காலத்தில் பொருள் மாற்றம் பெற்றுவிட்டது.  பிற்காலப் பொருளைக்கொண்டு அக்காலச் சொல்லைப் புரிந்துகொள்ளக்கூடாது’’ என்று விளக்கம் அளித்துள்ளார் கவிஞர் வைரமுத்து

எடப்பாடியின் கோரிக்கையை நிராகரித்தார் சித்தராமையா


தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து முதல்வரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
கர்நாடகாவிற்கு தேவையான தண்ணீர் குறைவாக இருப்பதால் காவிரியில் நீர் திறக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதில் தெரிவித்துள்ளார்.  மேலும், அடுத்த மாதம் காவிரி வழக்கில் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.  

சசிகலா தரப்பு கோரிக்கையை நிராகரித்த ஆறுமுகசாமி!


 ஜெ. மரணம் தொடர்பான வழக்கில் சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, அவர் அளித்த மனுவில்,  ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போர் குறித்த பட்டியலை விசாரணை ஆணையம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், விசாரணை முடிந்ததும் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.  அனைவரிடமும் விசாரித்த பிறகு கடைசியில் குறுக்கு விசாரணை நடத்தினால் வழக்கு முடிவதற்கு 15 ஆண்டுகள் ஆகும் என்று சசிகலா தரப்பு கோரிக்கையை விசாரணை ஆணைய தலைவரான நீதிபதி ஆறுமுகசாமி நிராகரித்துள்ளார். 

சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும்: நடிகர் விஜய்


சென்னையில் நடைபெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில் 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது. விருதை பெற்ற விஜய் பேசியபோது,  ‘’சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால் பிரச்னைகளை சந்தித்த மெர்சல் படம் வெளியீட்டின் போது ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள். சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன். மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை


சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரிபவன் அருகில் பைகிராப்ட்ஸ் தெருவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில்  இன்று காலை 7.45 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  திடீர் என்று சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்கள் டெல்லியில் இருந்து வந்திருந்தனர். சோதனை நடந்த போது ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மருமகள் ஸ்ரீநிதி, பேத்தி ஆகியோர் இருந்தனர். ப.சிதம்பரம் டெல்லியில் இருந்தார். கார்த்தி சிதம்பரம் சிவகங்கை சென்றிருந்தார்.  சோதனையின் போது ப.சிதம்பரத்தின் வீட்டு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. காலை 10.45 மணிக்கு இந்த சோதனை முடிந்தது. மொத்தம் 3 மணி நேரம் சோதனை நடந்தது. ப.சிதம்பரத்தின் பூர்வீக வீடு காரைக்குடியில் உள்ளது. அங்கும் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நுங்கம்பாக்கம் எல்ரோடா கட்டிடத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் அலுவலகத்திலும், டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்ட நாடகம் - ப. சிதம்பரம்


அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்டட நாடகம்; சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை  என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   அமலாக்கத்துறையின் நாடகத்தை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை.  டெல்லியில் உள்ள இல்லத்தில் படுக்கை அறை மற்றும் சமையல் அறையில் சோதனை நடந்தது.   கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கைகளை எடுத்துச் சென்றுள்ளனர் என்று கூறியுள்ளார். 

கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்து 4 மாணவர்கள் உயிரிழப்பு! 


மகாராஷ்டிர மாநிலத்தில் 40 பள்ளி குழந்தைகளுடன் கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலத்தின் தஹானு பகுதியில், பர்னகா கடற்கரையில் இருந்து பள்ளி மாணவர்கள் 40 பேருடன் கடலுக்குள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த மாணவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையின் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியின்போது 4 மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டதாகவும், 32 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிகிறது. மீதமுள்ள மாணவர்களை மீட்கும் பணியில் மீட்புகுழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தஹானு கடற்கரையில் இருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் காலை 11.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

சாலையோரம் பெட்டிக் கடைகள் வைக்க ஆதார் அவசியம்: ஐகோர்ட் 


சென்னையில் சாலையோரங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி கோரி வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சென்னையில் சாலையோரம் பெட்டிக் கடைகள் வைப்பதற்கு கண்டிப்பாக ஆதார் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.

தொகுப்பு: கதிரவன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :