Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்!
 ................................................................
சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன்
 ................................................................
சுஷ்மாவிடம் கதறிய காரைக்கால் மீனவ பெண்கள்!
 ................................................................
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (22:6 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (23:33 IST)


தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் 
மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை: 
வைரமுத்து விளக்கம்கவிஞர் வைரமுத்து ’’தமிழை ஆண்டாள்’’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஆண்டாள் பற்றி அவர் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டன.  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வைரமுத்துவை கடுமையாக எச்சரித்தார்.  இதனால் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ, மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.   

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர்,  ’’தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பரப்பப்பட்டும் இருக்கிறது.  அருள் கூர்ந்து அந்தக்கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும்.  அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று.  குறிப்பாக என்னைத் தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கிற எத்தனையோ தாயுள்ளங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்று என் மனம் துடிக்கிறது.

தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை.  கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக்கொண்ட உயர்ந்த பெண்களூக்கே தேவரடியார் அல்லது தேவதாசி என்ற திருப்பெயர்கள் வழங்கப்பட்டு வந்தன.  அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவர்கள்.  பின்னாளில் தேவதாசி என்ற உயர்பொருள் நிலவுடைமைச் சமூகத்தால்  பொருள் மாற்றம் பெற்றது.  பழங்காலத்தில் நறுமணத்தை மட்டுமே குறித்த நாற்றம் என்ற சொல், பிற்காலத்தில் துர்நாற்றம் என்றே திரிந்துவிட்டது.  அப்படித்தான் ஆண்டாள் காலத்தில் உயர்பொருளில் வழங்கப்பட்ட சொல் பிற்காலத்தில் பொருள் மாற்றம் பெற்றுவிட்டது.  பிற்காலப் பொருளைக்கொண்டு அக்காலச் சொல்லைப் புரிந்துகொள்ளக்கூடாது.

ஆண்டாளைப்பற்றி மூன்று மாதங்கள் அரிய நூல்களை படித்து தகவல் திரட்டிய நான் சுபாஷ் சந்திர மாலிக் தொகுத்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்க ழகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரை தொகுப்பு நூலையும் படித்தேன்.  

அந்த கட்டுரையில் உள்ள ஒரே ஒரு வரியைத்தான் நான் மேற்கோளாக எடுத்தாண்டிருந்தேன்.  அவர்கள் தேவதாசியை எப்படி உயர்ந்த பொருளீல் கொண்டிருந்தார்களோ நானும் அதே உயர்ந்த பொருளில்தான் கையாண்டிருக்கிறேன்.  இதைப்புரிந்துகொண்டால் எவர் மனமும் புண்படவேண்டிய அவசியம் இல்லை.  நாற்பத்தாறு ஆண்டுகளாக தமிழோடு வாழ்ந்து வருகிற நான் என்னை உயர்த்திய தமிழ்ச்சமூகத்தை புண்படுத்துவேனா?  ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான்.  இதைப்புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எல்லோருக்கும் என் அன்பான வேண்டுகோள்.’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

- கதிரவன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(9)
Name : தமிழ் தமிழர் Country : Australia Date :1/14/2018 7:55:07 PM
கடந்த வருடம், கேரளாவில் கிறிஸ்த்துவ பேராசிரியர் ஒருவர், நபிகள் குறித்த எதிர்மறையான கேள்விகளை, வினாத்தாளில் வடிவமைத்தார் என்று கூறி முஸ்லீம் இளைஞர்கள் சிலர் அவரது கையை துண்டாக வெட்டி விட்டனர். இந்துக்கள் அப்படி அல்ல ! மிகுந்த சகிப்பு தன்மை உடையவர்கள். அமைதியையும், சமாதானத்தையும் விரும்புபவர்கள். திரு.வைரமுத்து அவர்கள், தி.க. திரு.வீரமணி / மே 17 இயக்கம் திரு.திருமுருகன் காந்தி / பெ.தி.க. திரு.கோவை ராமகிருஷ்ணன் போல இருந்திருந்தால், பொதுமக்கள், அவர்களது பேச்சையோ, அவர்களையோ, ஒரு பொருட்டாக கூட, மதித்து இருக்க மாட்டார்கள். ஆனால் திரு.வைரமுத்து அவர்கள் சமுதாயத்தில் மதிப்பு மிக்க கவிஞர் ! அப்படிப் பட்டவர் பேசும் பேச்சுக்கள் பெரும்பான்மை மக்களால் கவனிக்க தக்கவை ! திரு.வைரமுத்து, கீழ்கண்டவாறு, அறிக்கை விட்டு இந்த பிரச்சினையை அமைதியாக தீர்க்கலாமே ??? // வைணவத்தின் தூண்களாகிய பன்னிரு ஆழ்வார்களில், பெண் ஆழ்வாராக போற்றப்படும், ஆண்டாள் தாயாரை தவறாக குறிப்பிட வேண்டுமென்ற கடுகளவு "உள்நோக்கம்" கூட இந்த வைரமுத்துவுக்கு கிடையாது. எனது சொற்பொழிவின் ஒரு பகுதி, எந்த பக்தரையாவது காயப் படுத்தி இருந்தால்,
Name : Brito Country : Indonesia Date :1/14/2018 4:35:33 PM
Podddannnggggaaa
Name : pathman Country : United States Date :1/14/2018 9:50:58 AM
என்னவாயிருந்தால் என்ன.தமிழ் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது குசும்புக்கு தானே இந்த விடயத்தை எடுத்தீர்.ரஜொனியை பஸ்ஸை தமிழன் மாதிரி பாட்டு எழுதுவார்.தி.மு.க வுக்காக ரஜினி அரசியலுக்கு வருவதை மறைமுகமாக எதிர்ப்பீர்.
Name : rajan Date :1/14/2018 7:13:58 AM
மானமற்ற தமிழ் கூட்டத்துக்கு தங்கள் விளக்கம் புரியாது. வெல்க தமிழ் !!!
Name : Jeyam Date :1/14/2018 4:51:19 AM
தமிழன் சொன்னால் குற்றம் . மற்றவன் சொன்னால் .......................வரலாற்று குறிப்பு ?
Name : Jeyam Date :1/14/2018 4:51:00 AM
தமிழன் சொன்னால் குற்றம் . மற்றவன் சொன்னால் .......................வரலாற்று குறிப்பு ?
Name : ondi.udayakumar tamilnadu [coimbatore] Date :1/14/2018 1:22:02 AM
யார் ஆண்டாள் , ஆதி முகவனின் மறுஉருவச்சொல் அடையாளம் ,குறிப்பிட்ட அடைமொழியன்றோ , குறிப்பிட்ட மதமென்றால் , ஆதிமுகம் அங்கமெங்கே ,எதிர்ப்பின் அடையாளம் ,ஆதிக்கும் அங்கமே , எவரும் எதிர்க்கலாம் ,பதிலின் அருகதை வேண்டும் , தண்டனை எவருக்கும் அருகதை இல்லை ,ஆதி முகனையும் சேர்ந்து , சொல் அடையாளம் எவருக்கும் உண்டு , ஆண்டாளின் முழுமை வேண்டும் , அதைத்தான் ஆண்டாளும் எதிர் பார்ப்பாள் , வைரமுத்து அவர்களின் , ஆண்டாளின் வரிகளுக்கு ,எதிர் மறையின் வரிகள் வேண்டும் , மன்னிப்பின் அடையாளம் யாருக்கு தேவை , நீதியின் தண்டனை அவமானமே , விடைகாண மறுத்த அவமானசொல் , தேவதாசிகள் கோவிலின் அங்கமன்றோ , ஆதியும் அங்கமும் ஒன்றே , வையிரமான ,முத்தின் வரிகளில் , ஆதிமுக கடவுளின் இணையாம் , தேவதாசிகளில் ஆண்டாளாம் , தமிழ் கவியின் வரிகளில் ஆண்டாளின் பெருமைகள் திவ்வியம் பரவட்டுமே , வாழ்க கவி .
Name : karikalan1 Country : United Kingdom Date :1/14/2018 12:14:22 AM
சீமானும் பாரதிராஜாவும் வைரமுத்துவை காப்பாற்றுவதை விட என்போன்ற பல கோடி வைஷ்ணவர்கள் உணர்ச்சிக்கும் சைவர்களின் உணர்ச்சிக்கும் மதிப்பளித்து வைரமுத்துவை கண்டித்திருக்க வேண்டும்.....உதாரணம்..உவமானம் ..உவமேயங்களுக்கெல்லாம் ....நம் மதத்திலுள்ள விஷயஙஹகளை பொது இடத்தில் விமர்சிக்க கூடாது......யார் வேண்டுமானாலும் ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம் ....அது அமெரிக்காவிலோ....எங்கேயோ....அதெல்லாம் உண்மையென்று எடுத்துக்கொள்ள தேவையில்லை.....சீமான் தமிழர்களின் சைவம் Vaishnava சமயங்களை பாதுகாக்க வேண்டும் ...அதுதான் தமிழர் சமயங்கள்.....அவை வேறு யாருடைய சமயங்களும் அல்ல...
Name : Kumar Country : Australia Date :1/13/2018 11:28:38 PM
இதுக்கு நீங்க விளக்கமே குடுத்து இருக்க வேண்டாம். அப்போ எதுக்காக பக்தர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு அதை சொன்னீர்கள்? தெரிந்து தானே சொல்லி இருக்குறீர்கள் அப்பறோம் எதுக்கு இப்போ இப்படி?