Add1
logo
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி || வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! ||
தமிழகம்
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
 ................................................................
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ)
 ................................................................
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
 ................................................................
பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்!
 ................................................................
வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான்
 ................................................................
வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி!
 ................................................................
அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்!
 ................................................................
எலுமிச்சைப் பழங்களின் வரத்து அதிகம் - விலையோ வீழ்ச்சி.. அதிர்ச்சியில் விவசாயிகள்!
 ................................................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடங்கிய "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"
 ................................................................
சென்னையில் ராணுவ பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
 ................................................................
மொத்த சனத்துக்கும் அல்வா கொடுத்துவரும் மோடி: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
பட்டப் பகலில் ரசீது அடித்து கொள்ளை: உரிமையை கேட்டால் ரவுடிகளை ஏவி மிரட்டும் திரையரங்குகள்!
 ................................................................
எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்
 ................................................................
டி.டி.வி. பேனரை தூக்கி எறிந்த போலீசார்
 ................................................................
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தை 700 தொழிலாளர்கள் முற்றுகை (படங்கள்)
 ................................................................
தினமும்தொந்தரவு! கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!
 ................................................................
டெல்லியில் தமிழக உயர்கல்வி மாணவர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லை: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (19:10 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (19:34 IST)

திராவிடர் திருநாள் - 15, 16ல் 
 பறையாட்டம் - ஒயிலாட்டம் - உரியாட்டம் 

பொங்கல் திருநாள் விழா குறித்து திராவிடர்  கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் திராவிடர் திருநாள் பண்பாட்டுத் திருவிழா _ தமிழ்ப் புத்தாண்டு _ பொங்கல் விழா 2018 ஜனவரி 15, 16 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் பறையாட்டம், ஒயிலாட்டம், கழியாட்டம் உள்ளிட்ட பல்வேறு மகிழ்ச்சி பொங்கும் விழா நடைபெறவுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ‘பெரியார் விருது - 2018’ சாதனையாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 24 ஆம் ஆண்டு விழாவாகவும், பெரியார் நூலக வாசகர் வட்டம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஆகியவை இணைந்து இத்திராவிடர் திருநாள் விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

‘தமிழ்இசை வரலாறு தொல்தமிழர் இசைக் கருவிகள்’ ஒளிப்படக் கண்காட்சி. இரண்டு நாட்களும் மாலை 4 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணி வரை நடைபெறும் இவ்விழாவில், ‘தமிழ்இசை வரலாறு தொல்தமிழர் இசைக் கருவிகள்’ ஒளிப்படக் கண்காட்சி அமைக்கப்படவிருக்கிறது.

அலங்காநல்லூர் இரா.வேலு ஆசானின் சமர்கலைக் குழு வழங்கும் பறையிசை, கரகாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், ஒயிலாட்டம், கழியாட்டம், மக்களிசைப் பாடல்கள் ஆகியவை இடம்பெறும். மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்லைக்கழக பேராசிரியர் நல்லசிவம் குழுவினர் வழங்கும் பண்ணிசை, நாட்டுப்புற இசைக் கலைஞர் அறிவுமானன் குழுவினரின் நாட்டுப்புற இசைப் பாடல்கள், சிலம்பாட்டம், உரியாட்டம் உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் ஆகியவையும் உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளன.

இவ்விழாக்களில், 15ஆம் தேதி கவிக்கோ அப்துல்ரகுமான், பேராசிரியர் பு.இராசதுரை படங்களையும், 16ஆம் தேதி தமிழறிஞர் மணவை முஸ்தபா, இயக்குநர்-நடிகர் மணிவண்ணன் ஆகியோரின்  படங்களையும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  திறந்து வைக்கிறார்.

'பெரியார் விருது - 2018'

2018 ஆம் ஆண்டிற்கான ‘பெரியார் விருது’ பெறவுள்ள

 இயக்குநர் - நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், 
‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய் சேதுபதி, 
மாரத்தான் வீரர் சைதை மா.சுப்பிரமணியன், 
திரைப்பட இயக்குநர் கோபி நயினார், 
இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன்,
‘இன்னிசை ஏந்தல்’ திருபுவனம் ஆத்மநாதன், 
கவிஞர் செவ்வியன், 
பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், 
ஓவியர் ஹாசிப்கான், 
கவிஞர் சல்மா, 
ஓவியர் அபராஜிதன் 

ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். 

கவிஞர் ஈரோடு தமிழன்பன் பாராட்டுரை வழங்குகிறார்

இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், மற்றும் பலர் பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றனர். 

விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.’’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :