Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
தமிழகம்
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்!
 ................................................................
வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா!
 ................................................................
66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்!
 ................................................................
டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்!
 ................................................................
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
 ................................................................
கடும் வாக்குவாதம் - கூட்டத்தின் பாதியிலேயே சென்ற கலெக்டர்
 ................................................................
சாப்பாட்டுக்காக கேட் ஏறி குதிக்கும் அவலம்
 ................................................................
காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
வைரமுத்து கருத்து சர்ச்சை போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகிறதா? பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (11:46 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (11:57 IST)

வைரமுத்துவை மிரட்டலாம் என்று கனவுகூட காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை!கவிஞர் வைரமுத்துவை மிரட்டலாம், என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவுகூட காண வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து. தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார். அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறிமுறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்தரித்தவை. நீண்ட நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்த தலைமுறையின் சிந்தனைக்கு கருவூலமாக்கித் தரும் அவரது தமிழ்ப் பணி இன்னும் பல நூறாண்டுகளுக்குப் போற்றப்படும்.

தென்பாண்டிக் கடல் முத்தாக ஒளிவீசும் வைரமாக தமிழ்த் தாய்க்குக் கிடைத்த ஒப்பற்ற புகழ் அணிதான் வைரமுத்து. அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக செந்தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றி வருகிற இலக்கிய பணி நன்றிக்குரியதாகும். வைரமுத்து தனி மனிதரல்ல; தமிழர்களின் சொத்து. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் போற்றத்தகும் ஆண்டாளையும் அவர் தந்த பாடல்களை மிக உன்னதமாகச் சித்தரித்துள்ளார்.

மணிமுடி வேந்தர்களின் அரணாக வளர்ந்த தமிழையே ஆண்டாள்; தமிழ் மொழியையே ஆட்சி புரிந்தாள் என்று தலைப்பிட்டு அவர் எழுதினார். விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்து குறித்து அச்செந்தமிழ்க் கவிஞன் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது கருத்தை விமர்சிப்பது, அது தவறு எனக் கூறுவது ஒவ்வொருவர் உரிமையாகும். ஆனால், கவிஞர் வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும் உயிருக்கே உலை வைப்போம் என்று கூச்சலிடுவதும் கண்டனத்திற்குரியதாகும்.

தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவுகூட காண வேண்டாம் என வைகோ தெரிவித்துள்ளார்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : S.Govindarajan Date :1/13/2018 6:24:45 PM
இந்து மதத்தை ஆளாளுக்கு இழிவு படுத்தலாம் என்று வைகோவும் கனவு கான் வேண்டாம்.இந்துக்கள் விழித்தட்டுக்கொண்டார்கள்.தக்க பதிலடி கொடுப்பார்கள்.
Name : karikalan1 Country : United Kingdom Date :1/13/2018 3:21:59 PM
வைகோ தேவையில்லாமல் அந்த வைரமுத்துவை யாரோ பயமுறுத்தியதாக ரீல் விடுறார்....எனக்கு தெரிந்து யாரும் வைரமுத்துவை பயமுறுத்தவில்லை...எதிர்ப்பு தெரிவிக்கிறோம்......இவர் திமுகவின் கொள்கைகளை பரப்ப தமிழர்களை ஏமாற்றவே முயல்கிறார்.....ஐவரும் திருமாவளவன் போன்று ஒரு ஈன பிறவியே.....ஒரு காலத்தில் இவர் மீது நன்மதிப்பு வைத்திருந்தேன் ....எல்லாவற்றையும் பாழாக்கிவிடடார் இந்த சந்தர்ப்பவாத அரசியல் வாதி....வைரமுத்துவ ஆதரிக்கும் இவர் கோடிக்கணக்கான வைஷ்ணவர்களையும் சைவர்களும் மனா உளைச்சலுக்கு என்ன சொல்ல போகிறார்.....இவர்களின் முழு நோக்கமும்....தமிழர்களின் சைவ வைஷ்ணவத்தை கீழ்த்தரமாக பேசி Thamilanai இழிவு செய்வதே....துரோக கும்பல்.....
Name : தமிழ். Date :1/13/2018 1:47:42 PM
சென்றாயன்..! நீங்க சவால் விட்டதெல்லாம் ஏற்கனவே.., போனவாரம், முடிந்த கதை..?!?!? அதெப்படி நீங்கள்... சொல்லி வைத்த மாதிரி.., அதிமுக நடிகர் ஆனந்தராஜ் கூறிய பழைய ஒரே ஒரு பட சினிமா நடிகரை ஒத்து .., ஒரு தனி ரூட்டில்... இரண்டு சைக்கோ போலவே..... எக்குத்தப்பா போறீங்க...?!?!? நாம் கட்டிய.., நம்முடைய கோயில் வேலைக்காக.., நம் உபயோகத்திற்காக, நாம் தூக்கிப்போட்டதில் வளர்ந்த.., இவர்களுக்கு.., இவ்வளவு தூரம் இடம் கொடுக்கலாமா...?!?!?! விறைப்பாக கத்தி என்ன பயன்...??? அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள் சென்றாயன்..?
Name : Thondan Country : India Date :1/13/2018 1:42:06 PM
திரு வைகோ அவர்கள் எச் ராஜா அவர்கள் பேசியதை சுட்டி காட்டுகின்றாரா என்று தெரியவில்லை ராஜா அவர்கள் வைரமுத்துவின் பிறப்பை விமர்சித்தாரே ஒழிய உயிருக்கு ஊரு விளைவிப்பதாக பேசியதாக தெரியவில்லை இவராக இதுபோன்று எதையாவது கிளப்பிவிட்டு அதில் அரசியல் ஆதாயம் கிடைக்காதா என்று எதிலும் சாதிக்க முடியாத திரு வை கோபால்சாமி அவர்கள் பிதற்றுகின்றார்கள்.இவர் தாய் கட்சியான திமுகவை விட்டு துரத்தப்பட்டதும் கலைஞ்சரை எவ்வாறு தூற்றினார் என்று தமிழகம் அறியும் ஆனால் இன்றோ திரு ஸ்டாலினை போன்று ஒருவர் கிடையாது என்று ஆர்கேநகரின் திமுக பெரும் வெற்றிக்கு பாடுபட்டதாக எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்.தமிழக அரசியலில் சந்தர்ப்பவாதிகள் இந்த வைகோ ,திருமா ,இடதுசாரி தலைவர்கள் .