Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்!
 ................................................................
சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன்
 ................................................................
சுஷ்மாவிடம் கதறிய காரைக்கால் மீனவ பெண்கள்!
 ................................................................
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (21:17 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (21:25 IST)


எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில்
 கைது செய்ய வேண்டும் :
 திருமாவளவன் வலியுறுத்தல்

வைரமுத்துவின் ஆண்டாள் கட்டுரை மற்றும் அது குறித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சு தொடர்பான சர்ச்சை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:’’கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள்காட்டியிருந்தார். ஆனால் அந்த கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை. அந்த கட்டுரையை சாக்காக வைத்துக்கொண்டு ஆண்டாளை அவதூறு செய்துவிட்டார் என கவிஞர் வைரமுத்துவின் மீது எச்.ராஜா பழிபோட்டு அநாகரிகமாக பேசிவருகிறார். எச்.ராஜாவின் பேச்சு சாதி – மதவெறியை கொண்டதாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் உள்ளது.  இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே  தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசிப் பதற்றத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரி இயக்கங்களை அவதூறு செய்தார். நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்தார். தற்போது கவிஞர் வைரமுத்துவும், அவரது கட்டுரையை வெளியிட்ட நாளேடும் வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு செய்துள்ளார்.

என்னையும் எமது கட்சியையும் இதே போல அவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததையும் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதையும் நாடறியும்.

எச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியபோது மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இடதுசாரிகளை இழிவு செய்தபோது ஏனையோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகளை வம்புக்கு இழுத்தபோது ஓரிருவரைத்தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் மவுனம் காத்தனர். அரசும் வேடிக்கை பார்த்தது. அதனால் தான் மேலும் மேலும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவர் பேசிவருகிறார்.

 எச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

இத்தகைய வெறுப்புப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும் எனவே தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.’’தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : S.Govindarajan Date :1/13/2018 11:28:31 AM
திருமா இந்துக்களுக்கு எதிராக ,ஆலயங்களுக்கு எதிராக பேசுபவர்.வீரமணியின் கையாள்.இவர் உபதேசம் செய்ய வருகிறார்.
Name : Paatali Country : India Date :1/13/2018 11:20:33 AM
திருவாளர் pinaka ஆண்டாள் கற்பனையானால் அவர்கள் அருள்செய்த திருப்பல்லாண்டு எங்கிருந்து வந்தது ? மருத்துவரை பற்றி இங்கே பேச எந்த தலைவனுக்கு அருகதை இல்லை .
Name : pathman Country : United States Date :1/13/2018 11:02:03 AM
சசிகலா பொதுச்செயலாளர் என அறிவித்தவுடன் வெறும் பெட்டியுடன் போயெர்ஸ் தோட்டம் சென்று ஒன்றும் கிடைக்கவில்லை.பிப்பு தினகரன் பக்கம் தலையை நீட்டி இறுதியில் தி.மு.க வுடன் கூட்டு வைத்து மூக்குடைபட்டது போதாதா.இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்ற இந்த ஆளை எந்த சட்ட்தில் கைது செய்வது.அமெரிக்காவில் ஆண்டாளை பற்றி ஆராச்சி யாரும் நடத்தவில்லை என்கின்றார்கள்.வைரமுத்து ஆதாரம் காட்டுவாரா?
Name : Ratnavel Servai Date :1/13/2018 9:28:10 AM
வைரமுத்து அவர்களே நபி என்ற முஹம்மதுவின் அசிங்கங்களை, அவலங்களை எழுதுவாயா? கனிமொழி அம்மா - திருப்பதி பற்றி பேசுகிறீர். ஏன் மெக்காவில் வருடா வருடம் ஹஜ் போகும் பொழுது, நெரிசலில் செத்து கொண்டு இருக்கிறார்கள் 2015 இல் ஆயிரக்கணக்கானூர் இறந்தார்கள். ஏன் அல்லாஹ் காப்பாற்றவில்லை. போன வருடம் அமெரிக்காவில், கருப்பர் இன சர்ச்சில் நடந்த துப்பாக்கி சூட்டில் (வெள்ளையர் செய்தது) 27 பேர் இறந்தனர். இத்தாலியில் சர்ச்சில் பிராத்தனை செய்து கொண்டு இருந்த பொழுது நில
Name : PINAKA Date :1/13/2018 9:17:03 AM
இந்திய நாட்டின் ஒறுமைப்பாட்டிற்காக எச்ச ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தவேண்டும் என்பது வேறு விஷயம்..??? ஆனால்.., தமிழனாக உடனிருந்து.., "கட்டுரையின் தலைப்புக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் ஆண்டாள் குறித்த கற்பனை மற்றும் யூகங்களை கவிஞர் திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது" என ராமதாஸ் தெரிவித்து.., அத்துடன் கொலைகார கொடூரனாக மாறி, "வைரமுத்து குறிப்பிட்டு இருப்பதைப் பார்க்கும் போது, இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படும் என்பதை அறிந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது" என்று தானே கற்பனையாக ஏற்றி.., வத்தி வைக்கும் வழி வந்த.., தமிழின துரோகி.., கலப்பட புத்திக்காரர்களை, என்ன செய்வது..?!?!? ஆண்டாள் கதையே கற்பனையாகத்தானே இருக்கிறது..??? டாக்டருக்கு படித்த ஒருவனுக்கு இது தெரியாதா...?!?!?
Name : Paatali Country : India Date :1/13/2018 8:16:49 AM
இதுவரை வாய் திறக்காத திருமாவளவன் எச் ராஜா அவர்கள் மதுரையில் நடந்த ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்டாள் பற்றி தவறாக கட்டுரை எழுதிய வைரமுத்துவை கண்டித்து பேசினார் அதனூடே கலப்பு திருமணம் பற்றியும் பேசினார் உடனே திருமாவளவனுக்கு கோவம் வந்துவிட்டது திருமாவளவனுக்கு வைரமுத்து மீது அக்கறையோ ஒரு தெய்வத்தை இகழ்ந்து கூரியத்தின்மீதோ அல்ல கலப்பு மனம் என்றதும் இவருக்கு கோவம் வருகின்றது நான் கேட்க்கிறேன் நீ தான் பவுத்தத்துக்கு மாறிவிட்டாயே இன்னும் ஏன் அந்த ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலையை சூட்டிக்கொண்ட அந்த பகவான் திருமால்வளவன் பெயரை தாங்கிக்கொண்டு இருக்கின்றாய் ?! பவுத்த பெயர்கள் தான் எண்ணற்ற பெயர்கள் இருக்கின்றனவே அதனை ஏற்றுக்கொள்ளவேண்டியது தானே ?!.தலித்துக்கள் எல்லாம் உயர்சாதியில் மட்டுமே பெண்கேட்ப்பது தான் கலப்பு திருமணத்தின் இலக்கணமா? தலித்துக்களை காட்டிலும் கீழ்நிலையில் உள்ள பட்டியல் இனம் நிறைய இருக்கின்றதே ? பெரியாரிடம் பேசும் தலைவர்கள் இதனை திருமாவளவனுக்கு எடுத்துக்கூறலாமே .?!
Name : Bals Date :1/12/2018 11:27:30 PM
You can speak anything about Hindus. .we must keep quiet..it's not happen here after ..
Name : PINAKA Date :1/12/2018 10:34:00 PM
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் எச்ச ராஜாவின் சைக்கோ ஆட்டங்களை.., பொறுத்துக்கொள்ளலாம்...??? ஜெயிலுக்கு அனுப்பினால் அங்கு.., என்ன நடக்குமோ...??? எதற்கு ரிஸ்க் எடுக்கவேண்டும் பிரதர்....!!! நச்சுப்பாம்புடை பாழுங்கிணறாகிய..., மருத்துவரை உதாசீனப்படுத்துவது போல.., படுத்தினால்... போதுமே.., தானாகவே அழிவானே...!!! அவனை போன்றோர் இருந்தால் தான் பாஜக அழியும் என்று தெரியாதா...???pinaka.
Name : karikalan1 Country : United Kingdom Date :1/12/2018 9:46:53 PM
அப்போ திருமாவளவன் சைவ வைஷ்ணவ கோயில்களை இடிப்பது பற்றி பேசியது மட்டும் மத வெறுப்பை காடடவில்லையா.....திருமாவை எந்த சடடத்தில் கைது செய்வது......எச் ராஜா பேசியது தப்பு....அவரை ஒருபொழுதும் ஆதரிக்க மாட்டேன் .....
Name : ramasamy padiachi Date :1/12/2018 9:29:58 PM
உன்னை முதலில் கைது செய்ய வேண்டும் . துலகர்களுடன் கை கோர்த்து கொண்டு அராஜகம் செய்கிறாய்,