Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்!
 ................................................................
சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன்
 ................................................................
சுஷ்மாவிடம் கதறிய காரைக்கால் மீனவ பெண்கள்!
 ................................................................
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (18:57 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (19:12 IST)


மேடையில் எச்.ராஜா - அலைபேசியில் கல்யாணராமன்: 
வைரமுத்து மீதான அருவருக்கத்தக்க மிரட்டலுக்கு
 மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்கவிஞர் வைரமுத்து ’’தமிழை ஆண்டாள்’’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஆண்டாள் பற்றி அவர் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டன.  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வைரமுத்துவை கடுமையாக எச்சரித்தார்.  இதனால் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ’’வன்முறையைத் தூண்டும் எச். ராஜாவுக்கு கண்டனம்’’ என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கண்டன தீர்மானம்:
“தமிழை ஆண்டாள்” என்ற கவிஞர் வைரமுத்துவின் தினமணி கட்டுரையை முன்வைத்து பாஜகவின் தேசிய செயலாளர்  எச். ராஜா,  வைரமுத்து அவர்களையும், கம்யூனிஸ்ட்டுகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளையும், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களையும் அநாகரீகமான முறையில் அவதூறு செய்ததோடு வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார். மிகக் கடுமையான முறையில் தனிநபர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான எச். ராஜாவின் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதற்கு முன்னரும்  எச். ராஜா இதுபோன்று சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற, சமூகப் பதட்டத்தை உருவாக்குகிற பல பேச்சுக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது பேச்சு மாற்றுக் கருத்துள்ள படைப்புகள், பேச்சுக்கள் ஆகியவற்றை முன்வைப்போருக்கு எதிரான நேரடியான மிரட்டலாகவே அமைந்திருக்கிறது. மாற்றுக் கருத்துக்களை ஆரோக்கியமாக விவாதிப்பதற்கு பதிலாக கொலைவெறியைத் தூண்டும் வகையில் அவர் தொடர்ச்சியாக பேசி வருவதை திட்டமிட்ட முறையில் தமிழகத்தில் சாதி, மத மோதலை உருவாக்குவதற்கு வழிவகுப்பதாக உள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன், நடிகர் விஜய், இப்போது கவிஞர் வைரமுத்து என்று அவரது வன்முறை பேச்சும், கொலைவெறி மிரட்டல்களும் அத்துமீறி தொடர்வது இதை திட்டமிட்டே அவர் செய்து வருகிறார் என்பதன் வெளிப்பாடே ஆகும். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு தனிநபர்களுக்கு இடையே நடந்த மோதலை இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதல் போன்று சித்தரிக்க அவர் முயற்சித்தார். 

இதேபோன்று பாஜகவைச் சார்ந்த  கல்யாணராமனும் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவை அலைபேசியில் அழைத்து அருவருக்கத்தக்க முறையில் மிரட்டியுள்ளார். எனவே, அவர்களது இத்தகைய வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை கண்டிப்பதோடு, தமிழக அரசு உரிய முறையில் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது’’


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : ராஜகோபாலன். Date :1/13/2018 12:01:52 PM
பாரதிய ஜனதா கட்சியின் எச்ச.ராஜாவிற்கும், கோயில்களுக்கும்.., ஆகம விதிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது...?!? தமிழர்கள் கோயிலை கட்டினார்கள்.., ஆகம விதிகளை கொண்டார்கள்.., ஆடுமாடுகளை மேய்த்தவாறு.., நாடு நாடாக சுற்றியவர்களுக்கு ஏது கடவுள்..?!? இருப்பதெல்லாம் துஷ்ட அக்னி தேவதைகள் தானே., அதற்கான.., ஆடு மாடுகளை பலியிட்டு.! பூசிக்கும்.!! வழி முறை தானே., இவர்களுடையது..!!! அதனை தானே.! தமிழர்களுக்கு தாரைவார்த்து கொடுத்து.., கெடுத்து, பெரும் கோயில்களை ஆக்கிரமித்து, சுவைத்து.., கொழுத்து கும்மாளமிட்டு உள்ளார்கள் ..?? தமிழ் கோதை ஒரு பெண்பாற் கவி..!, வைரமும் ஒரு கவி..! இடையே நீ யார்..!? புத்தருக்கு முன் வரை மாமிசம் உட்கொண்ட நீச்சன் யார்.?? இன்றும் வடக்கு, மலைசாரலில், சமவெளி நிலமின்மையால்.., கொல்கத்தாவில் வெறும் ஆறுகளாய் இருப்பதால்.., மாமிசம் உண்கிறார்களே..ஒரு வர்க்கம்..?? நாடோடிகளுக்கு தெரியாதா..?!? தமிழனுக்கு., இந்த பிரபஞ்சத்தில் ஒருவன் சொல்லி கொடுக்க.. எதுவுமே இல்லை..!?! தமிழர் கலாச்சாரத்தை குட்டிச்சுவர் ஆக்கியதே மாமா குரூப்தான்..?? நம்மவரும்.. அக்னி'யில், குடில்களை சும்மா.. கொளுத்தும் கயவர் உண்டு.!?
Name : Paatali Country : India Date :1/13/2018 8:25:45 AM
ஹிந்துக்கள் வணக்க தெய்வங்களை நிந்திப்பது மட்டும் கண்டனத்துக்குரியது இல்லையா தெய்வத்தை காட்டிலும் இங்கே கவிஞ்சனுக்கு தான் மரியாதையா ? அற்ப மானுடன் அறிவுக்கு எட்டாத பல விடயங்கள் அறிவியல் சார் இலக்கணங்களை அப்பாற்பட்டு நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றது என்று நான் கூறவில்லை அதே அறிவியலின் இயற்பியலின் ஐன்ஸ்டின் கூறி இருக்கின்றார்கள் .திராவிட இயக்கங்களுக்கு ஒரு சமூகத்தின் மீது உள்ள கோபத்தை அந்த சமூகம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் ஆனால் ஹிந்து மதம் என்னமோ அந்த சமூகத்தினுடையது என்று எடுத்துக்கொண்டு மற்ற சமூகம் நம்பும் ஆண்டவர்களை இகழ்ந்து கூறுவது ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது .பொதுவுடைமை பேசும் பல தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் சாதியிலேயே பெண்கொடுத்து பெண் எடுக்கிட்ன்றான் வெளியே சாதி இல்லை என்பான் இதை எல்லாம் நம்ப இங்கே யாரும் தயார் இல்லை . ஆண்டாளை அவதூறாக பேசியதை இங்கே எச் ராஜா மட்டுமல்ல அந்த ஆண்டவனை நம்பும் அனைவருமே எதிர்க்குறாங்க .தொடர்ந்து ஹிந்துமதத்தை ஹிந்து தெய்வங்களை அவமதித்தல் அதன் விளைவுகள் மாற்று சித்தாந்தவாதிகளுக்கு மிகுந்த பாதிப்பை உண்டுபண்ணும் இது நிச்சயம் .
Name : Ratnavel Servai Date :1/12/2018 9:37:17 PM
ஆமாம் கனிமொழி அவர்கள் திராவிட கழக பொறுக்கிகள் மாநாட்டில் திருப்பதி கோவிலை பற்றி பேசியதை ஏனைய்யா எல்லோரும் மறைத்து திடீர். பயமா ? ஹிந்து ஓட்டுகள் திருடர் முன்னேற்ற கழகத்தை விட்டு அப்படியே போய் விடும் என்ற பயமா ? பயம் இருந்தால் சரிதான்
Name : karikalan1 Country : United Kingdom Date :1/12/2018 9:30:38 PM
திராவிட கட்சிக்கு சோம்பு தூக்கும் வைரமுத்துவுக்கு இதட்கு சீமானும் பாரதிராசாவும் ஆதரவு செய்கினம்.....இப்படி நமது சைவ வைஷ்ணவ கோயில்களை இடிப்போம் என்று சொன்ன திருமாவளவனை ஏதட்கு இவர்கள் எதிர்க்கவில்லை.......எச் ராஜா ஒரு லூசு என்பது எல்லோருக்கும் தெரியும்.....அவன் சும்மா இந்து என்று எங்களுடன் வந்து ஓட்டுகிறான்....
Name : lenin france Country : France Date :1/12/2018 9:25:56 PM
எச்.ராஜா நல்லவர் தான். ஆனால் அவரின் ஆயிரம் அகோரி நாக்குகள் தான் வெட்டி வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு தான் திராவிட அரசியல் தேவைப்படுகிறது திராவிட மாவீரர்கள் தேவைப்படுகிறார்கள்.
Name : pathman Country : United States Date :1/12/2018 8:54:55 PM
புனிதமான கம்யூனிசம் இந்தியாவில் உள்ள சவுக்கிரகிகளால் அதன் புனிதம் இழந்துள்ளது.இதற்கு கண்டனம் தெரிவிக்கும் போலி கம்யூனிஸ்ட்டுகள் திருமாவளவன் கோவில்களை இடிக்க வேண்டும் என்று சொன்ன பொது எங்கிருந்தார்கள்.பல ஆண்டு காலமாக கம்யூனிசம் பேசிக்கொண்டு ஒரு தேர்தலிலும் தனித்து போட்டி இட வக்கில்லை.
Name : தான்தோன்றிப்புலவர் Country : Taiwan, Province of China Date :1/12/2018 7:59:35 PM
மதவெறியைத் தூண்டும் மக்கட்பதடிகளின் கொலைவெறி இலக்குகள் (1) மாற்றுமதத்தவர்கள், (2) பகுத்தறிவாளர்கள், (3) மக்களுக்காகப் போராடுபவர்கள், (5) முற்போக்கு எழுத்தாளர்கள், (6) பேச்சாளர்கள், (7) கலைஞர்கள் ஆகியோரே! அம்மக்கட்பதடிகள் மதவெறியுடன் பேசுவதன்மூலம் இளையதலைமுறையினர் செம்மறியாடுகள்போல் இந்துமதவெறியுடன் எழுந்து தங்கள் கைக்கருவிகளாகப் பயன்படுவர் என்று மண்ணுளிப்பாம்பு கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதுபோல் ஆசைப்படுகிறார்கள்! ஆனால் தமிழர்கள் பகுத்தறிவாளர்கள்! வேலையற்ற வீணர்களுமல்லர்! மதவெறியர்களின் வரம்புமீறிய அறிவுக்குருட்டு பேச்சுகள் உறுதியாக மதரீதியான மோதல்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்தாது என்பது திண்ணமென்றாலும், அந்த மதவெறியர்களுக்கு எதிரான (அவர்களே எதிர்பாராத) ஜாதி எழுச்சிகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை! மதவெறியர்களுக்கெதிரான அவ்வெழுச்சிகள் தெருச்சண்டைகளாக மாறிவிடாவிட்டாலும் தமிழ் மக்களின் உள்ளங்களில் கனன்றுகொண்டிருக்கும் என்பது திண்ணம்! தாங்களே தங்கள் தலைகளில் மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளும் மதவெறியர்களைத் திருத்தவும் முடியாது, திருத்தவேண்டிய தேவையும் அறிவுடையோருக்கு இல்லை!