Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்!
 ................................................................
சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன்
 ................................................................
சுஷ்மாவிடம் கதறிய காரைக்கால் மீனவ பெண்கள்!
 ................................................................
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (17:47 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (17:47 IST)


பாகிஸ்தானில் மனிதநேயம் எங்கே போனது? - மகளுடன் செய்தி வாசித்த தாய்!

பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக, தன் சொந்த மகளுடன் செய்தி வாசிப்பாளர் செய்தி வாசித்த சம்பவம் நடந்துள்ளது.

இந்திய எல்லையும், பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பகுதியுமான காசூரில், கடந்த வாரம் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சிறுமியின் படுகொலையைத் தொடர்ந்து உருவான கலவரத்தை அடக்க காவல்துறையினர் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர்.



இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, சமா எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பேசிய கிரண் நாஜ் எனும் செய்தி வாசிப்பாளர் செய்தி ஒன்றை வாசித்தார். அப்போது அவர் தம் சொந்த மகளை மடியில் உட்கார வைத்திருந்தார். ‘நான் இன்று கிரண் நாஜ் அல்ல. இன்று நான் ஒரு தாய். அதனால்தான் என் மகளை மடியில் உட்கார வைத்திருக்கிறேன். கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் சவப்பெட்டி மிகக்கடுமையாக கனக்கிறது. ஒட்டுமொத்த பாகிஸ்தானும் அந்த சவப்பெட்டியின் எடை முன் மண்டியிட்டுக் கிடக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் பூதம்தான் அந்தக் குழந்தையைக் கொன்று குப்பையில் வீசியிருக்கிறது. அதில் அவள் சாகவில்லை. மாறாக ஒட்டுமொத்த பாகிஸ்தான் சமூகமும் கொடூரமாக செத்துள்ளது. உண்மையில், அவளுக்கு உங்கள் நீதி தேவையில்லை. அவள் தீர்ப்பு நாளில் தான் புரிந்த தவறுகள் குறித்து கடவுளிடம் கேள்விகளை எழுப்பிக் கொள்வாள்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும் காசூர் பகுதியில் 12 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : pathman Country : United States Date :1/13/2018 11:06:45 AM
இந்தியா இது பற்றி பேசலாமா? பாகிஸ்தானை விட பலமடங்கு அநியாயங்கள் நடக்குது.
Name : karikalan1 Country : United Kingdom Date :1/13/2018 4:23:03 AM
அரசன் அன்று கொல்வான்.....தெய்வம் நின்று கொல்லும்......