Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
தமிழகம்
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்)
 ................................................................
இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
 ................................................................
தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்)
 ................................................................
ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல்
 ................................................................
எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு! த.பெ.திகவினர் கைது!(படங்கள்)
 ................................................................
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
 ................................................................
தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
 ................................................................
நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி
 ................................................................
ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட்
 ................................................................
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி!
 ................................................................
கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி
 ................................................................
கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்!
 ................................................................
மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி
 ................................................................
சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்!
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி 11வது நாள்!
 ................................................................
பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
 ................................................................
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (16:13 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (17:25 IST)

லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுக - ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாமக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஊழலை ஒழிப்பதற்கான அமைப்பை உருவாக்குவதை தமிழக அரசு தட்டிக் கழிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படாதது பற்றி முதல்வர் பழனிச்சாமி அளித்த விளக்கங்கள் அபத்தமானவை; ஏற்றுக்கொள்ள முடியாதவை. 2013-ஆம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகவும், அதனால் முதன்மை சட்டத்துடன் முரண்பாடு ஏற்படாத வகையில், மத்திய அரசு செய்யவுள்ள திருத்தங்களை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது அலைகள் ஓய்ந்த பின்னர் கடலில் குளிக்கலாம் என்கிறார். இது எப்படி சாத்தியமில்லையோ, அதேபோல் தமிழகத்தில் லோக் ஆயுக்தா வருவதும் சாத்தியமில்லை என்பது தான் இதன் பொருளாகும்.

லோக்பால் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்கள் என்னென்ன? என்பதை மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. அவை தொழில்நுட்பம் சார்ந்தவையே தவிர, லோக்பால் சட்டத்தின் அடிப்படையை மாற்றும் தன்மை கொண்டவை அல்ல. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாத நிலையில்,  லோக்பால் தேர்வுக்குழுவின் உறுப்பினராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு பதிலாக மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பெரியக் கட்சியின் தலைவர் என்று மாற்றுவதற்காக   லோக்பால் சட்டத்தின் 4(1)(C) பிரிவிலும், அரசு ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிப்பதற்காக 44-ஆவது பிரிவிலும்  மட்டுமே திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. இதற்கான சட்டத்திருத்த முன்வரைவு மக்களவையில் கடந்த 27.07.2016 அன்று நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றக் குழுவின் ஆய்வில் உள்ளது. அடுத்தக் கூட்டத் தொடரில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படக்கூடும். ஒருவாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்,  லோக்பால் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிவிட்ட நிலையில், அதற்காக காத்திருப்பதாகக் கூறி லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்ற மறுப்பது நியாயமல்ல.

இதற்கெல்லாம் மேலாக மத்திய அரசின் சட்டத்திற்கு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் என்று பெயரிடப்பட்டாலும் அதிலுள்ள பிரிவுகள் லோக்பால் தொடர்பானவை மட்டுமே. லோக் ஆயுக்தா அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?, அதன் அதிகார வரம்பு என்ன? என்பது குறித்தெல்லாம் அச்சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, லோக்பால் சட்டம் நடைமுறைக்கு வந்த ஓராண்டுக்குள் இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படாத மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டு லோக் ஆயுக்தா  ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மட்டும் தான் லோக்பால் சட்டத்தின் 63-ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா மாநில அளவிலான அமைப்பு என்பதால் அதன் அதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதன்படி இயற்றப்படும் லோக் ஆயுக்தா அமைப்பு சட்டம் லோக்பால் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தாலும் கூட அதில் எந்தவித சிக்கலும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது மத்திய அரசு சட்டத்துடன் முரண்பாடு ஏற்படும் வகையில் தமிழக அரசு சட்டம் அமைந்து விடக் கூடாது என காத்திருப்பதாக முதல்வர் கூறுவது கேலிக்கூத்தின் உச்சமாகும்.

அதுமட்டுமின்றி, லோக்பால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக காத்திருக்காமல் அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களை செயல்படுத்தும்படி நீதிபதி ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 27.04.2017 அன்று தீர்ப்பளித்துள்ளது. இவ்வளவுக்குப் பிறகும், 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர பினாமி ஆட்சியாளர்கள் தயங்குகிறார்கள் என்றால், அதற்கு காரணம் லோக் ஆயுக்தா வந்தால் அதற்கு தாங்கள் முதல் பலியாகி விடுவோமோ? என்ற அச்சம் தான் காரணம். ஊழலை மூலதனமாகக் கொண்டவர்கள் ஊழல் ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வருவர் என எதிர்பார்ப்பது சூரியன் மேற்கே உதிக்கும் என்பதற்கு ஒப்பானது தான்.

ஆனாலும், திராவிடக் கட்சிகளின் ஊழல்களுக்கு எதிராக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வராவிட்டால் எந்த நேரமும் மக்கள் புரட்சி வெடிக்கலாம்.  எனவே, அபத்தமானக் காரணங்களை இனியும் கூறிக் கொண்டிருக்காமல் வரும் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற பினாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Paatali Country : India Date :1/13/2018 1:46:23 PM
லோக் ஆயுக்த கொண்டுவந்தால் எடப்பாடியும் பன்னீரும் உள்ளே செல்லுவார்கள் .