Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
சிறப்பு செய்திகள்
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (14:26 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (14:26 IST)


நீதித்துறையில் மோதல் வெடித்தது ஏன்? 

இந்திய நீதித்துறை மீது எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிராமணர்களுக்கு தண்டனை இல்லை என்ற வர்ணாசிரம கோட்பாட்டை இந்திய நீதித்துறையும் பின்பற்றுவதாக கூறப்படுவதுண்டு.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக 8 ஆண்டுகள் பணியாற்றிய நீதிபதி கர்ணன் மேற்குவங்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்ணன் உச்சநீதிமன்ற பணியிட மாற்றத்துக்கு தானே தடைவிதித்தார். உடனே, அவருடைய தடை உத்தரவை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. அவருக்கு வழக்குகளை விசாரிக்கவும் தடைவிதித்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அந்தக் குற்றச்சாட்டுகளை பிரதமருக்கும், உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதிக்கும் அனுப்பி வைத்தார்.

இந்த விவகாரத்தில் நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது. அந்த வழக்கில் நீதிபதி கர்ணன் தனக்காக ஆஜராகி வாதாடினார். முடிவில் அவருக்கு சிறைத்தண்டனையும் வழங்கியது.இந்நிலையில், இன்று திடீரென்று உச்சநீதிமன்றத்தின் நீபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகுர், குரியன் ஜோஸப் ஆகியோர், இந்திய வரலாற்றில் முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

இவர்களில் தலைமை நீதிபதியின் கொல்லேஜியம் உறுப்பினர்களாக இருப்பவர்களும் உள்ளனர். எனவே, இந்த நிகழ்வு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்த பின்னர் மேலும் இரண்டு நீதிபதிகள் அவர்களுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற நிர்வாகம் சீர்கெட்டிருப்பதாகவும், தலைமை நீதபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகளிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வழக்குகளை பிரித்துக் கொடுப்பதில் இவர் விருப்பு வெறுப்புடன் நடந்துகொள்கிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதிக்கு தாங்கள் ஏற்கெனவே கடிதம் எழுதியிருப்பதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். தற்போது 25 நீதிபதிகள் பணியில் உள்ளனர். நீதிபதிகளின் இந்தக் குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இவர்களுடைய பேட்டியைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் பரபரப்பானார். பிரதமரைச் சந்திக்க விரைந்தார்.

இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது. நேற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா என்ற பெண் வழக்கறிஞரை கொல்லேஜியம் நியமித்தது. இவருடைய நியமனம் ஏற்கப்பட்டால், நான்கு ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்ற முடியும். ஏற்கெனவே இந்தியா முழுவதும் பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சீனியாரிட்டி வரிசையில் இருக்கும்போது, வழக்கறிஞராக பணியில் இருப்பவரை எப்படி நீதிபதியாக நியமிக்கலாம் என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே நீதிபதிகளின் இந்த போருக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.நீதிபதிகளை தேர்வு செய்யும் கொல்லேஜியம் அமைப்பில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் இரண்டு நீதிபதிகளும், சட்டத்துறை அமைச்சர், மற்றும் பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பரிந்துரைப்படி நியமிக்கப்படும் இரண்டு முக்கிய பிரமுகர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின அல்லது பிற்படுத்தப்பட்டவராக இருப்பார். ஒருவர் பெண்ணாக இருப்பார்.

ஆக, இந்து மல்கோத்ரா நியமனம்தான் நீதிபதிகளின் எதிர்ப்புக்கு காரணமா என்பது இனிதான் தெரியும்...

- ஆதனூர் சோழன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : S.Govindarajan Date :1/16/2018 5:01:41 PM
நீதிபதிகளும் அரசு ஊழியர்களே. தலைமை நீதிபதியைப் பற்றி புகார் கூற விருப்பினால் ,சட்ட அமைச்சகத்துக்கு எழுத வேண்டும்.அல்லது குடியரசுத் தலைவருக்கு முறையீடு செய்ய வேண்டும்.அதை விட்டு நிருபர்களை அழைத்து பேட்டி கொடுப்பது விதிமுறைகளுக்குப் புறம்பானது.
Name : ராஜகோபாலன். Date :1/15/2018 6:19:54 AM
இங்கேயும் ஆண்டாளா...??? நீதி துறையே இவ்வாறு வழிந்தவாறு இருப்பின்.., கடினம் தான்...???
Name : pathman Country : United States Date :1/13/2018 8:02:48 PM
அரசியல் வாதிகளின் தலையீடு தான் காரணம்.பலவருடம் ஆண்ட காங்கிரஸ் செய்த வேலை. ராஜிவ் கொலை வழக்கையே தங்கள் இஸ்ரப்படி நடத்தி உண்மை குற்றவாளிகள் தப்பிக்க உதவினார்.இது போல் பல வழக்குகள்.ஜெயலலிதாவின் ஊழல் வழக்கை பலவருடங்கள் இழுத்து அடித்து ஜெயலலிதாவை காப்பற்ற துடித்தனர்.காவிரி தீர்ப்பை நடை முறை படுத்தாமல் தடை செய்தனர்.அதே வேலையை பிஜேபி அரசும் செய்கின்றது.
Name : M Murugan Date :1/12/2018 8:10:49 PM
Sake all the four Judges to avoid further damages in Judiciary in future.