Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
சிறப்பு செய்திகள்
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (13:10 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (13:10 IST)

ஜல்லிக்கட்டு வகைகளும், விதிகளும்

கடந்த வருட பொங்கலை யாராலும் மறக்கமுடியாது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்திய மற்றும் மாநில அரசுடன் போராடி ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடையை நீக்கினர். ஜல்லிக்கட்டுக்கு மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஜல்லிக்கட்டு என்றால் வாடிவாசலில் திறக்கப்படும் மாட்டை ஒருவன் பிடிக்க வேண்டும் அவ்வாறுதான் நகரவாழ் மக்களுக்கு தெரியும். படங்களில் கூட அதிகம் இதுபோன்ற ஜல்லிக்கட்டைதான் காட்டுகிறார்கள். ஜல்லிக்கட்டு போன்றே இருக்கும் மற்ற விளையாட்டுகள் பற்றியும் அதன் விதிமுறைகள் என்னவென்றும் பார்ப்போம்.

வாடி மஞ்சுவிரட்டு (அல்லது) ஜல்லிக்கட்டு

இந்த வகை மஞ்சுவிரட்டு மதுரை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இது மக்களிடையே நன்கு தெரியப்பட்ட ஒன்றாக இருக்கிறது காரணம் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் இந்த வகை விளையாட்டையே அதிகம் காட்டப்படுகிறது. "வாடிவாசல்" எனும் வாயில் வழியாக காளை திறந்துவிடப்படும். திறந்தவுடன் சீறிக்கொண்டு ஓடும் காளையை வீரர் ஒருவர் மட்டும் தாவி அதன் திமிலை பிடித்து கோர்த்து குறிப்பிட்ட தூரம் செல்லவேண்டும் அப்படி சென்றால் அந்த வீரர் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் செல்வார். காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும். காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை ஆகும்.

வேலி மஞ்சுவிரட்டு இந்த வகை மஞ்சுவிரட்டு மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பிரபலமாகும். திறந்தவெளியில்  காளையின் மூக்குக்கயிறை அவிழ்த்து விடுவார்கள், அது எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் ஓடலாம், வீரர்கள் அதை அடக்கவேண்டும்.  இந்த விளையாட்டு ஐந்து நிமிடங்களில் இருந்து ஒரு மணிநேரம் கூட நடைபெறும்.  

வடம் மஞ்சுவிரட்டு வடம் என்றால் தமிழில் "கயிறு" என்று பொருள்படும். காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. 7 அல்லது 8 பேர் கொண்ட அணி அந்த காளையை 30 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டின் விதிமுறைகள்:
  • போட்டியாளர்கள் இருவரும் (காளை, வீரர்கள்) மருத்துவ பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவர்.

  • வாடிவாசலில் இருந்துதான் காளைகள் போட்டிக்கு அவிழ்த்துவிட வேண்டும்.  

  • போட்டியாளர் மாட்டின் திமிலை மட்டும்தான் பிடிக்க வேண்டும்.  கழுத்து, கொம்பு, வால் ஆகியவற்றை  பிடித்தால் போட்டியாளர் ஆட்டத்தை விட்டு நீக்கப்படுவார்.

  • போட்டியாளர் மாட்டின் திமிலை  எல்லைக்கோட்டை மாடு தாண்டும் வரை பிடித்திருக்க வேண்டும். அப்படி பிடித்திருப்பவர் வெற்றியாளர் ஆவார்.

  • காளை, பிடியாளரை எல்லைக்கோடு தாண்டும் முன்பே தூக்கி வீசிவிட்டாலோ, அல்லது எல்லையை தாண்டும்வரை யாரும் பிடிக்கவில்லை என்றாலோ காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

  • காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும். எல்லோரும் பிடித்தால் காளை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.
  •  
  • காளையை அடிக்கவோ அல்லது எந்தவிதத்திலும் துன்புறுத்தவோ கூடாது.

-சந்தோஷ் குமார் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :