Add1
logo
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி || வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, டிசம்பர் 2017 (16:30 IST)
மாற்றம் செய்த நாள் :17, டிசம்பர் 2017 (16:30 IST)


முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை!

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் தனது நண்பர்களால் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கன்ச் பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாஜ் கட்சியின் மூன்னாள் எம்.எல்.ஏ பிரேம் பிரகாஷ் திவாரி. இவரது மகன் வைபவ் திவாரி தாமோரியாகான்ச் பகுதியில் பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டு வருகிறார். மேலும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.

இவருடன் சேர்ந்து தொழில் செய்துவந்த சுக்லா என்பவர், சில காலங்களாக தனியாக தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் வைபவ் திவாரியின் வீட்டிற்கு வந்த சுக்லா, வைபவ்வின் வீட்டு வாசலில் வைத்து அவரோடு பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சுக்லாவுடன் வந்திருந்த விக்ரம் சிங் என்பவர் தான் கொண்டுவந்த துப்பாக்கியால் சுட்டதில் காயம்பட்ட வைபவ் சுருண்டு விழுந்துள்ளார். பின்னர், அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் ஏற்கனெவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர் இந்தக் கொலைக்கு தொழில்போட்டி காரணமா, அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :