Add1
logo
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி || வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, டிசம்பர் 2017 (13:44 IST)
மாற்றம் செய்த நாள் :17, டிசம்பர் 2017 (13:45 IST)


பேஸ்புக், கூகுள் போல இந்தியாவிலும் உருவாக்கப்பட வேண்டும்! - ஜெயந்த் சின்கா

உலகில் உள்ள எந்தவொரு தலைசிறந்த வன்பொருள், மென்பொருள் நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு அளப்பரியதாக இருக்கும். அந்தளவிற்கு உலக நிறுவனங்களுக்கு இந்தியர்களின் உழைப்பு அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஆனால், சர்வதேச நிறுவனங்களைப் போல, இந்தியாவின் பெருமை சொல்லும் இந்தியாவில் அப்படியொன்றும் உருவாகி விடவில்லை.இந்தக் குறை நிவர்த்தி செய்யப்படவேண்டியது என ‘இந்தியா ஐடியாஸ் கான்க்ளேவ் - 2017’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ‘நாம் எப்போது நம் சொந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறோமோ, அப்போதுதான் உலக பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தமுடியும். நாம் முதலில் நம் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், நாம் நம் மக்களுக்காக உருவாக்கும் பொருட்களை, மற்ற பகுதிகளில் இருப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். இந்த 21ஆம் நூற்றாண்டில் சுயல்தொழில் முனைவோரின் பங்கு நாட்டிற்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது. நம்மிடம் மலிவான மற்றும் சிறந்த தொலைத்தொடர்பு சேவை இருக்கிறது. வாகன உற்பத்தியிலும் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். எனவேம் நம் நாட்டிற்குச் சொந்தமான பேஸ்புக், கூகுள் மற்றும் அலிபாபாவை நாம் உருவாக்கவேண்டும். இதற்கு சுயதொழில் முனைவோர் உறுதுணையாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தமிழ் மைந்தன் Country : Australia Date :12/18/2017 1:44:57 PM
அருமையான அறிக்கை ! அந்நிய நாட்டின் தொழிநுட்பத்தை மட்டுமே நம்பி அடிமையாய் வாழ்ந்து வருவது வெட்க கேடு ! இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கான பொறியாளர்கள் பட்டம் பெற்று வெளி வருகிறார்கள் ! கேவலம் ஒரு சமூக வலை தளத்தை கூட நம்மால் உருவாக்க முடியவில்லையா ? இந்திய சுதந்திரத்திற்கு முன் நம் நாட்டிற்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் தான் நம் நாட்டை அடிமை படுத்தினான் ! அது போல் இப்போது தொழிநுட்பம் என்ற வடிவத்தில் நம் நாட்டில் நுழைந்திருக்கும் அனைத்து சமூக வலைத்தளங்களையும் விரட்டி அடிக்க வேண்டும். சீனாவை போல் இந்திய அரசும் நம் இளைஞர்களை நூதன தொழில்நுட்ப தாக்குதல்களிலிலிருந்து அவர்களது கவனத்தை நேர்வழியில் திருப்ப, ஆக்கபூர்வ வழியில் செலுத்த முன்வரவேண்டும். இந்திய அளவில் உள்ள இளைஞர்களிடையே, புதிய மென்பொருள் (computer operating system and mobile operating system) உருவாக்க, போட்டி வைத்து, அதற்க்கு பெரிய அளவில் பரிசு தொகை குறிப்பிட்டு செயல்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தில் நம் நாடு சுயமாக நம் தேவைகளை பூர்த்தி செய்து தன்னிறைவு அடைய வேண்டுமே தவிர, முழுவதும் அந்நிய நாடுகளை சார்ந்து அல்ல !