Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்!
 ................................................................
சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன்
 ................................................................
சுஷ்மாவிடம் கதறிய காரைக்கால் மீனவ பெண்கள்!
 ................................................................
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, டிசம்பர் 2017 (11:30 IST)
மாற்றம் செய்த நாள் :15, டிசம்பர் 2017 (12:34 IST)


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி
கடலூரில் ஆளுநர் ஆய்வு!


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தார்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதிலிருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி என பல மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு 
 செய்தார்.

மாநில நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு துளியும் அதிகாரமில்லை என்றும் இதுபோன்ற ஆய்வுகளை ஆளுநர் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு தொடர்ந்தால், திமுகவின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்தி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதனையும் மீறி இன்று ஆளுநர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.இதனிடையே, கடலூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு கொடியுடன் பேரணி நடத்தினர். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றிருந்தனர். இதனால் திட்டமிட்ட பாதையில் ஆளுநர் செல்லாமல் மாற்று பாதையில் சென்றார். ஆனால் அதனையும் கண்டுபிடித்து அவர் வாகனம் செல்லும் வழியில் திமுகவினர் கருப்புக்கொடி காட்டினர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார்.

தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தி.மு.க கடலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மஞ்சக்குப்பம் அஞ்சலகம் அருகே கூடினர். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநிலங்களின் அதிகார உரிமையில் தலையிடும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், தமிழ்நாடு அரசின் கையாலாகதனத்திற்கு  எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அருகிலுள்ள தி.மு.க அலுவலகம் முன்பாக அவர்கள் குழுமியிருந்த போது அவ்வழியே ஆளுநரின் வாகனமும், பாதுகாப்பு வாகனங்களும் வரவே கருப்பு கொடி காட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் உழவர் சந்தை அருகே ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மணிவாசகம் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

- சுந்தரபாண்டியன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :