Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
சிறப்பு செய்திகள்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, டிசம்பர் 2017 (17:39 IST)
மாற்றம் செய்த நாள் :14, டிசம்பர் 2017 (17:39 IST)


பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு? 

சென்னை கொளத்தூர் அருகே நகைக்கடை ஒன்றில் கடையின் கூரையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு கொள்ளையர்கள் நகைகளுடன் செல்லும் சிசிடிவி பதிவு கிடைத்தது. அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள், சென்ராம், கோலாராம், சங்கர்லால், தவ்ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.தனது குழுவினருடன் பெரியபாண்டி

தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய நாதுராம், தினேஷ்சவுத்ரி ஆகியோரை பிடிக்க மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, தலைமையில் கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் உள்ளிட்ட 4 பேர் ராஜஸ்தான் சென்றுள்ளனர். நேற்று கொள்ளையர்களை அவர்கள் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெரியபாண்டி உயிரிழந்தார். அவருடன் சென்ற கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ளது ராமாவாஸ் கிராமம். இந்த பகுதியில்தான் கொள்ளையர்கள் தங்கியிருந்துள்ளனர். சுமார் 4 நாட்கள் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி தலைமையில் ராஜஸ்தான் சென்ற காவலர்கள், அங்கு கிடைத்த தகவல்களின் மூலம் கொள்ளையர்கள் இருந்த இடத்தை கண்டறிந்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) அதிகாலை சுமார் 2 மணிக்கு ராமாவாஸ் கிராமத்திற்குச் சென்ற போலீசார் அங்கு ஒரு வீட்டில் இருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் நடந்த மோதலில்தான் கொள்ளையர்கள் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டு கொன்றதாக சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் இருந்து மற்ற 4 போலீசாரும் தப்பிசென்றுள்ளனர்.

இதில்தான் மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது, காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மீது பாய்ந்த குண்டு கொள்ளையர்கள் துப்பாக்கியில் இருந்து பாய்ந்ததா? அல்லது சகபோலீசார் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததா? என்பது ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.கொள்ளையர்கள் தினேஷ் சுவுத்ரி மற்றும் நாதுராம்

மேலும், தமிழக போலீசாருக்கு வந்த தகவல்கள் தவறானது என கூறப்படுகிறது. அதாவது கொள்ளையர்கள் தங்கியிருந்த இடத்தில் 3 பேர் மட்டுமே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், சம்பவ இடத்தில் 10க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருந்துள்ளனர். தமிழக போலீசார் 3 பேர் மட்டுமே அந்த இடத்தில் இருப்பதாக நினைத்து உள்ளே சென்றுள்ளனர். போலீசார் உள்ளே நுழைந்ததும் கொள்ளையர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர்.

இதில் நிலைதடுமாறிய போலீசார் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனால், இதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மட்டும் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளார். அப்போதுதான் பெரியபாண்டியனுடன் வந்த சக தமிழக போலீசார் அவரைக் காப்பாற்ற கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது கொள்ளையர்களை நோக்கி சுடப்பட்ட அந்த குண்டு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மீது பாய்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என ராஜஸ்தான் போலீசார் கருதுகிறார்கள்.

இங்குதான் மேலும் பல கேள்விகள் எழுகின்றன. அதாவது கொள்ளையர்கள் தங்கள் தலைமை காவலரை சுடும்போது, அவருடன் வந்த மற்ற நான்கு சக காவலர்களும் ஏன் கொள்ளையர்களை நோக்கி பதிலுக்கு சுடவில்லை? கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் வரை வந்த தமிழக போலீசார், உயர் அதிகாரிகளிடம் கொள்ளையர்களைச் சுட அனுமதி வாங்கவில்லையா? அப்படி அனுமதி வாங்கியிருந்தால் ஏன் கொள்ளையர்களை நோக்கி திருப்பி சுடவில்லை? கொள்ளையர்கள் இரும்பு கம்பி, கற்களால் போலீசார் மீது கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்திருக்கவில்லை என்றே தெரிகிறது. கொள்ளையர்கள் ஒருவர்கூட சிக்காமல் தப்பியோடியது எப்படி? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தங்களுக்கு தெரியவில்லை என்று ராஜஸ்தான் போலீசார் கூறியிருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.குண்டுக் காயங்களுடன் சடலமாக பெரியபாண்டி

பெரியபாண்டி மரணத்தில், தமிழக போலீஸாரின் டீம் ஒர்க் குறித்து பல உயரதிகாரிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதாவது, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது, அந்த மாநில போலீஸாருடன் தகவல்களை பரிமாறும் அளவுக்கு உயரதிகாரிகள் தலைமையில்தான் போலீஸ் குழு அமைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் மிகச்சிறிய குழுவை எப்படி உயரதிகாரிகள் அனுமதித்தார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

- இசக்கி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : M.santhanakrishnan Country : Indonesia Date :12/15/2017 12:35:20 PM
காவல்துறை காவலாளிகளின் உயிருக்கு எந்த குறை இல்லாமல் குற்றவுளிகளை பிடிக்க அனைத்து உபகரணங்கள் மற்றும் சுடும் உரிமையும் கொடுக்க வேண்டும். போதிய வசதிகள் இல்லையெனில் அந்த operation பின்னர் செய்ய வேண்டும். எங்களை காப்பாற்றும் காவலர்களின் 1000 உயிருக்கு சமம்.