Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, டிசம்பர் 2017 (12:12 IST)
மாற்றம் செய்த நாள் :14, டிசம்பர் 2017 (12:14 IST)


மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தோனி ‘லைக்’ செய்த ட்வீட்டால் சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லைக் செய்த ட்வீட்டினால் புதிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது ட்விட்டர் கணக்கைத் தொடங்கினார். இந்த 8 ஆண்டுகளில் 68 லட்சம் பேர் தோனியை பின் தொடர்ந்தாலும், வெறும் 45 ட்வீட்டுகளை மட்டுமே தோனி பதிவிட்டுள்ளார். மேலும், இதுவரை வெறும் மூன்று முறை மட்டுமே மற்ற ட்வீட்களை அவர் லைக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

பத்திரிகையாளர் ராஜ்தீப் சரேதேசாயின் ட்வீட்டினை 2013ஆம் ஆண்டு லைக் செய்ததுதான் முதல்முறை. அதன்பிறகு, ஐதராபாத் - சர்வீஸ் அணிகளுக்கிடையிலான 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை குறித்த பிசிசிஐ பதிவிட்ட ட்வீட்டை லைக் செய்தது இரண்டாவது முறை. 

இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை தோனி லைக் செய்த மூன்றாவது ட்வீட்தான் சர்ச்சைகள் கிளம்பியிருப்பதற்குக் காரணம். இன்கபார் என்ற செய்தித் தளத்தின் ட்விட்டர் பக்கம் வெளியிட்ட ட்வீட்தான் அது.



அதில், ‘2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பைப் போட்டியில் கோலி தலைமையிலான அணி நிச்சயம் வெற்றிபெறும். மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டுவிட்டது’ என குறிப்பிட்டிருந்ததுதான் அந்த சர்ச்சைக்கு காரணம். மேலும், கோலி, ரவிசாஸ்த்ரி, கங்குலி உள்ளிட்ட இந்திய அணியைச் சேர்ந்த முக்கியமானவர்களின் பெயர்களும் அந்த ட்வீட்டில் டேக் செய்யப்பட்டிருந்தது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :