Add1
logo
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை || மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம் || திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன்!(படங்கள்) || இந்த ஆட்சி மக்களுக்கானதல்ல - கமிஷனுக்கானது ; மீண்டும் நிரூபித்துள்ளது கட்டண உயர்வு:ஸ்டாலின் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் || தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்) || டெல்லி தீ விபத்தில் 17 பேர் பலி || ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு || சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்! || சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன் || ரயில் பெட்டிகளின் தேவையை உணர்ந்து கொள்முதல் செய்யவேண்டும்; தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஜன.27ல் திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
சாத்தியமாகும் கனவு பயணம்! நல்லதோர் முயற்சியில் நக்கீரன்!
 ................................................................
சப்பையான காரணத்தை கூறி தமிழக அரசு நியாயப்படுத்த முயற்சி செய்யும்: முத்தரசன்
 ................................................................
சுஷ்மாவிடம் கதறிய காரைக்கால் மீனவ பெண்கள்!
 ................................................................
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, டிசம்பர் 2017 (17:27 IST)
மாற்றம் செய்த நாள் :13, டிசம்பர் 2017 (17:28 IST)


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்!சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு வெளியிட்டுள்ள முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் ஆய்வு சார்பில் பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் குழுவினர் இணைந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் முடிவில், ஆர்.கே.நகர் தொகுதியின் இன்றைய சூழலில் மக்கள் வாக்களிப்பதாக இருந்தால் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள டிடிவி தினகரன் மற்றவர்களை விட 35.5% மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதையடுத்து திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 28.5% மக்கள் ஆதரவு பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். அடுத்து, அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 21.3% மக்கள் ஆதரவு பெற்று 3வது இடத்தில் உள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்திருந்தால் பெரும்பான்மையான ஆதரவு யாருக்கு என்றும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதிலும் டிடிவி தினகரனுக்கே மக்கள் அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏப்ரலில் யாருக்கு வாக்களித்திருப்பீர்கள் என்று யூகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிடிவி தினகரனுக்கு 38.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மருதுகணேஷக்கு 27.0% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அப்போது ஓபிஎஸ் தரப்பில் மதுசூதனன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அந்த வகையில் மதுசூதனனுக்கும் 18.3% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேபோல் வேட்பாளரின் சின்னத்தையும் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் பெயரையும் சரியாகப் பொருத்துவதில், பிரஷர் குக்கர் - டிடிவி தினகரன் இணை மிகப் பெரும்பான்மையோரால் (91.6 %) அடையாளம் காணப்படுகிறது.

அதையடுத்து இரட்டை இலை - மதுசூதனன் (81.1 %) மக்களால் அடையாளம் காணப்படுகிறது. அதன்பின் உதயசூரியன் - மருதுகணேஷ் (77.8 %) மக்களால் அடையாளம் காணப்படுகிறது.

தேர்தல் சின்னத்தின் முக்கியத்துவம் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவும் நிலையில், பிரஷர் குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்ட ஓரிரு நாள்களிலேயே ஏறத்தாழத் தொகுதி மக்கள் முழுவதும் அது சென்று சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : anbu Country : India Date :12/14/2017 4:11:50 PM
TTv is best in all aspect in the candidate list since he is the scholar .And if DMK wins again KK genocide is going to rule and he left udaya it will contniue .Moreover let some tamil people will rule if they corrupted also no issues and all known who is genuine in politics .we like the boldness of TTV.
Name : Maatram Munnetram Anbumani Country : India Date :12/14/2017 8:22:15 AM
மதுசூதனன் ஜெயித்தால் பாருங்க மக்கள் அம்மையார் மறைந்தாலும் எங்களையும் ஆதரிக்கிறாங்க என்று மார்தட்டுவாங்க ! திமுக ஜெயித்தால் மக்கள் ஆளும் அரசு மீது ஆத்திரத்தில் இருக்காங்க அதன் வெளிப்பாடு என்பார்கள் ,தினகரன் ஜெயித்தால் பார்த்தீங்க இல்ல நான் தான் உண்மையான அதிமுக என்பார் ஆனால் மக்களுக்கு என்ன நடக்க போகின்றது ? நிர்வாக திறனற்ற எடப்பாடி அரசு ,ஏற்கனவே பலமுறை ஆண்ட அதே திமுக வளர்ச்சி பற்றியும் மாற்றம் பற்றியும் ஐம்பது ஆண்டு காலம் பேசிக்கொண்டு இருக்காங்க ஆண்ட போது செய்திருக்க வேண்டாமா? மக்கள் சிந்திக்காத வரையில் மாற்றி மாற்றி இரண்டு காட்சிகள் ஏமாற்றி கொண்டு தான் இருப்பாங்க மக்கள் மாறனும் 'மாற்றத்தை' நோக்கி 'முன்னேற்றத்தை' நோக்கி .!
Name : pathman Country : United States Date :12/14/2017 12:56:19 AM
ராஜநாயகம் எவ்வளவு பணம் வாங்கினாய்.
Name : Thiru Country : United States Date :12/13/2017 8:14:20 PM
திரும்பவும் சசிகலா குடும்பத்துக்கு ஓட்டு போட்டால் அப்புறம் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது. இதுமாதிரி தப்பான ஆட்களுக்கு ஓட்டு போட்டு மொத்த தமிழ்நாட்டையும் குட்டிசுவரா ஆக்கிடாதீஙக...தினகரன் ஜெயித்தால் அப்புறம் அனைவருக்கும் ஓட்டுரிமை கொடுத்ததை பற்றி யோசிக்கணும். காசை வாங்கிட்டு ஓட்டு போடுபவர்களால் நல்லவர்களும் சேர்ந்து கஷ்டப்படுகிறார்கள்.. தினகரன் திரும்ப ஜெயித்தால் அப்புறம் சென்னை இயற்கை சீற்றத்தில் அழிந்து போனாலும் அதை பற்றி கவலை படக்கூடாது. இது மாதிரி மக்கள் இருப்பதும் ஒண்ணுதான் இல்லாமல் இருப்பதும் ஒண்ணுதான்