Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
சிறப்பு செய்திகள்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, டிசம்பர் 2017 (12:36 IST)
மாற்றம் செய்த நாள் :13, டிசம்பர் 2017 (12:36 IST)


பெற்றோரை விட சங்கர் ஏன் முக்கியம்?

கௌசல்யா பகிரும் எட்டு மாத  நினைவுகள்  
தமிழகத்தில் மனசாட்சியுள்ள ஒவ்வொருவரையும் உலுக்கியது, உடுமலையில் நிகழ்ந்த சங்கர் படுகொலை. தன் மகள் விருப்பப்பட்ட வாழ்க்கையை விட, தன் மகளின் உயிரை விட, சாதி முக்கியம் என்றெண்ணிய பெற்றோரின் வெறி அது. நேற்று (12டிசம்பர்17), இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய் மாமன் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் பேசிய கௌசல்யா, தன் தாய்  விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக உறுதியுடன் கூறினார். சாதி, அரசியல், பெண்ணியம் எதுவும் தெரியாமல் இருந்த அந்த இளம் மனதின் மீது நடந்த சாதி  வெறியாட்டம் தான் அதை இத்தனை உறுதியாக்கியிருக்கிறது. தன் பெற்றோரை விட சங்கரும் அவரது குடும்பமும் தனக்கு ஏன் முக்கியம் என, சில மாதங்களுக்கு முன்பு  கௌசல்யா நம்மிடம் பகிர்ந்த நினைவுகள் இங்கே...     

"நான் எங்கள் வீட்டில் ஒரே பெண். சின்ன வயசுல இருந்தே எனக்கு எது பிடிச்சாலும் வாங்கித் தருவாங்க, செல்லமா தான் வளர்த்தாங்க. ஆனா, சங்கரை எனக்கு பிடிச்சதுக்கு காரணத்தை கூட அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அவர்கள் பேசியதெல்லாம், நான் அவனை விட்டுட்டு வந்துறணும் என்பதற்காக மட்டும் தான்.

எங்க வீட்டுல, எங்க உறவினர்கள் வீட்டுல என்று எங்கேயுமே பெண்களுக்குனு தனி வாழ்க்கை, விருப்பமெல்லாம் இல்லை. எப்பவும் அடுப்படியிலதான் இருப்பாங்க. எங்க அப்பா ஒரு தடவை கூட எங்கம்மாவுக்கு உதவி நான் பாத்ததில்லை. ஆனா, சங்கர் கிட்டேயும் சங்கர் வீட்டுலயும் அந்த சுதந்திரத்தை நான் முழுசா உணர்ந்தேன். துணி துவைத்து தருவதாலயும், சமைப்பதாலயும், நான் சாப்பிடும் தட்டை கழுவுவதாலும் அது  காதலா, சங்கர் முக்கியமாகிட்டானான்னு கேட்டா, எனக்கு அந்த விஷயமே பெருசாத்தான் இருந்தது.  


படிக்கும்போதே  கல்யாணம் பண்ணிக்கணும் என்பது கூட எங்க விருப்பமில்ல. படிக்கணும், வேலை பாக்கணும், நல்லா வந்து ஒன்னா  வாழனும் என்பது தான் எங்க கனவு. ஆனால், எங்க வீட்டுல இந்த விஷயம் தெரிஞ்ச உடனே, எனக்கு வேற மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க. அதுனால தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்க தள்ளப் பட்டோம்.    

சங்கர் என்னை 'பாப்பா'னு தான் கூப்பிடுவான். அவன் குடும்பத்துல, எல்லாரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. துணி துவைக்கும்போது , நான் சோப்பு போட்டு கொடுத்தா, அதை சங்கர் அலசுவான், அவன் தம்பி காயப்போடுவான். எல்லா வேலையிலும், எல்லா தருணத்திலும் சமமா உணர்ந்தோம். ஆனால், இது தான் பெண்ணியம், சமநிலை இப்படி எந்த அரசியலும் தெரியாமலேயே நாங்க அப்படி வாழ்ந்தோம்.    


எட்டு மாசம் அவன் கூட வாழ்ந்தேன். சங்கர், என்னை தன் பிள்ளை போல பாத்துக்கிட்டான். வீட்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்திருந்தால், நான் ஒரு அடிமை போலத்தான் வாழ்ந்திருப்பேன். எனக்கு நல்லா தெரியும்.  ஒரு போதும் என்னை அவன் அடிமையாக உணர வைத்ததில்லை. காலையில் எழுந்து சமைப்பது, துணி துவைப்பது எல்லாம் அவன் செய்தான். இது பெண் செய்யும் வேலை, இது ஆண் செய்யும் வேலை என்று அவன் பிரித்து பார்த்ததே இல்லை. என்னை ஒரு போதும் அப்படி உணரவைத்ததில்லை. என் அம்மாவிடம் இருந்த தாய்மையை விட அதிகமான தாய்மையை அவனிடம் உணர்ந்தேன்.       

சங்கர் என்னுடன் இருந்திருந்தால், இதே தைரியம், துணிச்சல் எனக்கு இருந்திருக்கும். ஆனால், சமூகத்துக்காக வாழ்ந்திருக்க மாட்டேன். இப்போ, நான் சமூகத்துக்காக வாழுறேன். சாதி இல்லாத சமூகத்தை உருவாக்க அடுத்த தலைமுறையை தயார் செய்வேன்."

- வசந்த் 
சந்திப்பு : ஃபெலிக்ஸ்     

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(13)
Name : PINAKA Date :12/15/2017 8:23:27 AM
காதல் என்பது ஏதோ ஒரு மாயையான.., ஈர்ப்பால் வரும் இயற்கை உந்துதல். (பிரபஞ்சத்தில் அனைத்தும்.., இப்படித்தான், ஒருவரும் அறியாமல்... அது தானே நடப்பதாக இருக்கிறது) இதற்கு ஒரே வழி எதனையும்.., அன்பால் மட்டுமே நோக்குவது தான்..!!! எல்லா மத வேதங்களும்.., தமிழும்.., இதைத்தான் கூறுகின்றன..!!! தாழ்த்தபட்ட மக்களுக்கு தரப்படும் சலுகைகளை காதலோடு ஒப்பிடுவது எப்படி என தெரியவில்லை? ஐயாயிரம்.., வருடங்களாக அடிமைகளை போல.., ஒரு பிரிவினரை பாகுபடுத்தியதற்காக..., தரப்படும் பெனால்டி சலுகை தான் இது என.., ஏன் நமக்கு புரியவில்லை.., தெரியவில்லை? சலுகை பட்டியலில் அல்லாதோர், தற்போது, சலுகை பெறுவது பெருமளவு, அதிகரித்து வருகிறது, என்பதே உண்மை? ஒருவரை கொல்வதும்,., திட்டமிட்டு கொல்வதும்.., பலர் அறிய சாலைகளில் வைத்து கொல்வதும்.., சகிக்கமுடியாத, மனித நேயமற்ற, ஆண்மையற்ற, மிருகச்செயல்??? ஜெயாவின் தாயாரின் போக்கு, பல மாதிரியாக இருந்ததால், விலக்கி வைத்தனர். ஜெயாவோடு ஒரு மாதிரியாக சேர்ந்து விட்ட, சோபனை எம்ஜிஆரும், சசியிடமிருந்து நடராஜனும், இவிகேஎஸ் இளங்கோவன் தன் தாயையும், விட்டு விலகினர்..!!! வெட்டி சாய்க்கவில்ல.., முடியவில்ல???
Name : paul vijayakumar Country : Indonesia Date :12/14/2017 11:21:57 PM
சாதி என்பது எப்படிப்பட்ட பெரிய கொடிய பிசாசு என்பதிற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை. மனிதர்கள் சாதி மதத்திற்காக வாழாமல் மனிதநேயத்திற்காக வாழ்வதுதான் நல்லது. எந்த ஒரு அரசும் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஒட்டு வங்கிக்காக சாதி மத பிரிவினைகளை சேவை அல்லது திட்டம் என்ற பெயரால் ஊக்குவிப்பது துளியும் அழகல்ல. சாதி மதம் என்னும் விஷ விதைகளை அப்பாவி மக்களிடத்தில் விதைக்கும் சாதி மத சார்புடைய அரசியல்வாதிகள் இனியாவது மனம் திரும்ப வேண்டும். பெற்றவன் சிறையில் கணவன் குழியில் இதுதான் கவுசல்யாவிற்கு சாதி என்னும் பிசாசு கொடுத்த பரிசு.
Name : MUTHU Date :12/14/2017 6:30:39 PM
இப்டியே பேசி பேசி இன்னும் எத்தனி பேரு சாக போறாங்களோ.ஆமா அடுப்படி உதவத்தான் புருஷனா? போங்கடா போங்கத்தவனுகளா.ஆம்பிளை எப்போதுமே பொருள் ஈட்டுவதில் இருக்கணும் விடுமுறையில் குடும்பத்துடன் கழிக்கணும் இதை ஐரோப் காரனுக மட்டுமே ஒழுங்கா செய்கிறானுக.இங்கே காதல் கல்யாணம் பண்ணாலே பெரிய இதை சாதிச்சமாறி ஒரு பிம்பம் சினிமா முதல் இதுபோன்றவர்கள் தவறான உதாரணம்.இதில் சாதி விட்டுட்டு பார்த்தால் இந்த 2 குடும்ப தலைமுறையே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கு.
Name : Thamilan Country : Indonesia Date :12/14/2017 2:00:48 PM
கௌசல்யாவின் கருத்தை முழுமாயாக வரவேற்க்கிறேன், ஐயாயிரம் ஆண்டு பழமையான சாதி ஒழிய காதல் திருமணம் ஒன்று தான் ஒரே வழி. இதே கௌசல்யா ஒரு மேல் தட்டு வர்க பையனை திருமணம் செய்திருந்தால் இதே வாசகர்கள் காதல் புனிதம் என்று போற்றுவார்கள், வருநாசாரமத்தின் விளைவு, வாசகர்களின் சிந்தனையை குறுக்கிவிட்டது.
Name : G. Madeswaran Country : Australia Date :12/14/2017 1:53:00 PM
கல்யாணத்துக்கு மட்டும் சாதி மறுப்பு என்று புதிய சொல்லில் கூறி நேரா ஏன் ஏரோபிளானில் ஸ்ட்ரெயிட்டா பறக்க பார்க்குறீர்கள்?! ஸ்கூல், காலேஜ் அப்ப்ளிகேஷன் இல் இருந்து அது தொடங்கவேண்டும், அப்போதுதான் அடுத்த தலைமுறைக்கு நிரந்தர சமூக மாற்றம் வரும்,ஆனா அத மட்டும் யாரும் தப்பி தவறி கூட செய்ய மாட்டார்கள். சாதியோ, இல்லையோ...கஷ்டப்பட்டு அதீத பாசத்துடன் பெண்களை வளர்த்த பெற்றோரின் மன நிலை, எவனோ ஒருவன் அவர்கள் சம்மதம் இல்லாமல் கோழிக்குஞ்சு போன்று கொத்திக்கொண்டு போகும்போது இப்படித்தான் தாறு மாறாக போகும். தாய் யானை, தாய் நாய், தாய் பூனைக்கு கூட தன் குட்டிகளின் மேல் பாசம், கரிசனம் உண்டு, குட்டிகளுக்கு இது எல்லாம் உண்மையில் உணர ஏது நேரமும், வயதும்?! வயசு அப்படி! தெரிந்தோ தெரியாமலோ, முதல் காரணமாகிய உன்னால் இவ்வளவு கஷ்டத்தை தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும், உன் பெற்றோருக்கு கல் நெஞ்சத்தை விட்டு ஆறுதல் கூறி, கலாச்சார நாகரீகமாக நீங்கள் முதலில் மாறி, சமுக மாற்றத்திற்கு அப்புறம் கிளம்புங்க! குடும்ப உறவு, சம்மதம், பாசம் இல்லாத உணர்ச்சியற்ற சமூக மாற்றத்தினால், வெறுமை தான் பின்னாட்களில் மேலோங்கும் பதுமையே!
Name : Palani Date :12/14/2017 12:00:54 PM
இதுவெள்ளம் oru காரணமா.
Name : SR Date :12/14/2017 11:23:37 AM
இப்படி படிக்கிற காலத்துல எல்லாவற்றையும் பண்ணிட்டு பெத்தவர்கள் பத்தி குறை சொல்ல வேண்டியது . செய்யிற தப்புக்கு நியாயம் கற்பிக்க வேண்டியது ?உன் பெத்தவர்களு பண்ணின பெரிய குற்றம் உன்னை மேற்படிப்பு படிக்கச் வச்சது!
Name : SR Date :12/14/2017 11:23:21 AM
இப்படி படிக்கிற காலத்துல எல்லாவற்றையும் பண்ணிட்டு பெத்தவர்கள் பத்தி குறை சொல்ல வேண்டியது . செய்யிற தப்புக்கு நியாயம் கற்பிக்க வேண்டியது ?உன் பெத்தவர்களு பண்ணின பெரிய குற்றம் உன்னை மேற்படிப்பு படிக்கச் வச்சது!
Name : anonymous Date :12/14/2017 10:25:37 AM
வெற்றிபெற்ற ஆணுக்குபின்னால் ஒருபெண் இருக்கிறாள் என்ற கூற்று உண்மையோ பொய்யோ தெரியாது.ஆனால் தவறுசெய்யும் அல்லது கொடூர குற்றங்களை செய்யும் எந்தஒரு பெண்ணின் பின்னாலும் நிச்சயமாக ஒரு ஆண் இருப்பான்.இருக்கிறான்.அது பெற்றுவளர்த்த தாய்தந்தையை உதறிவிட்டு ஓடிபோவதில் இருந்து விபச்சாரம்,கொலை எதுவாகவும் இருக்கலாம்.ஒத்துழைக்காத பெண்களுக்கு ஆசிட்வீச்சு, படுகொலை போன்ற பரிசுகளும் உண்டு.பிஞ்சுகுழந்தைகளை சீரழிப்பவனுக்குகூட மரண தண்டனையை நிறைவேற்றாத ஆணாதிக்கவர்க்கம் இந்தியாவில். வாய்ப்பு கிடைத்தால் ஒருவர் பாக்கிஇல்லாமல் அத்தனை ஆண்களும் இந்த குற்றங்களை செய்யதயார் என்பதுதான் ஒரேகாரணமாக இருக்கமுடியும். . அதனால்தான் தவறுசெய்யும் ஆண்களை தண்டிக்கமறுத்து, தையல்மெஷின் கொடுத்து உற்சாகப்படுத்துவதும்,சிறையிலடைத்து பாதுகாப்பதும். ஜாதி,மதம்,மொழி எதுவானாலும் உயிராகவளர்த்த பெற்றோரின் அன்பை துச்சமாக தூக்கி எறிந்துவிட்டு,தலைநிமிர்ந்து நடக்கமுடியாத அவமானத்தை ஏற்படுத்தி ஓடிபோகும் ஒருபெண்ணால் அந்தஆண்மகனை மட்டும் எப்படி ஆத்மார்த்தமாக சிநேகிக்கமுடியும். வாய்ப்புகிடைத்தால் அவனையும் தூக்கிஎறிய தயங்கமாட்டாள் என்பதுதான் உண்மை.
Name : tamilvanan Country : United States Date :12/14/2017 6:00:00 AM
பிழையான கருத்து. உலகிலே ஆணவக்கொலைகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தான் அதிகம் என்பது அவருக்கு தெரியாது போலும். ஆகவே இந்த மாதிரி கொலைகளுக்கும் சாதிக்கும் தொடர்பு இல்லை. எட்டு மாதங்கள் அவர்கள் சேர்ந்து தானே வாழ்ந்தார்கள். அப்போது ஒன்றும் நடக்கவில்லையே? பிறகு என் எட்டு மாதங்களுக்கு பிறகு நடந்தது? இதெற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். மேலும் திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் எல்லா கணவர்களும் முதலில் இப்படித்தான் அனுசரணையாக நடப்பார்கள். பிறகு மாறுவார்கள். காதலும் கசக்கும். முதலில் கல்வியை முடித்து வேலை தேடிக்கொள்ளுவதே பெண்களுக்கு சிறந்தது. காதல் அல்ல. இருபது வருடம் பாசத்துடன் வளர்த்தது பெற்றோர்கள் தான். அப்போது அவரை குடும்ப சுமை தெரியாமல் வளர்த்து இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு தான்தான் வீட்டு வேலை செய்யவேண்டும் என்று பயமா? ?
Name : prema Country : Australia Date :12/13/2017 10:36:19 PM
நீயெல்லாம் தமிழ் பெண் அல்ல. இளம் வயதில் உன்னை படிக்க பெற்றோர் அனுப்ப , நீயோ தரமற்ற காதலை செய்துள்ளாய் . உன்னால் உன் குடும்பம் இப்போது நடுத்தெருவுக்கு வந்துள்ளது . பெற்றோரை விட காதல் சுகம் பெரியது என சாலையில் திரியும் நாயுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்.இந்த திருமா என்பவன் , நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலைகாரனுக்கு அவன் ஜாதி என்பதால் மாலை போட்டு மரியாதையை செலுத்தினான் . ஸ்வாதிக்கு என்ன செய்தன? நீயும் உன் நாயமும் ?
Name : SIVA Date :12/13/2017 1:19:12 PM
கேட்டதை எல்லாம் வாங்கிக் கடுத்த செல்லமான மகளுக்கு தன பெற்றோருக்கு செய்யும் கடமைகள் என்று எதுவும் இல்லையா? உன் குடும்பத்தில் பெண்கள் எல்லோரும் அடிமைகள் என்றால் உன்னையும் சாணி தட்ட அல்லவா அனுப்பி இருப்பார்கள்? ஆனால் உன்னை இளவரசி போலத்தானே நடத்தினார்கள்?? நீயே ஒத்துக் கொள்கிறாயே! நீயாக உன் குடும்பத்தை பற்றி தப்பார்த்தம் கற்பித்துக் கொண்டு உன் குடும்பத்தில் இல்லாத பிரியம் சங்கரிடம் மட்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டாய்! உன் அப்பா எத்தனை முறை உன்னை குடித்து விட்டு அடித்திருக்கிறார்?? இல்லைதானே!! நல்ல தந்தையாகத்தானே இருந்திருக்கிறார்?? உன் அம்மா உன்னை படிக்க வைக்காமல் கூலி வேலைக்கு அனுப்பினார்களா? படிக்க வைத்ததால்தானே இந்த பேச்சு பேசுகிறாய்?? தாயையும் தூக்குக்கு அனுப்புவேன் என்று சொல்கிறாய்? ஆனால் உன்னை வேலைக்கு அனுப்பிய சங்கர் குடும்பம் மட்டும் ரொம்ப பாசக் கார குடும்பமா?
Name : siva Date :12/13/2017 1:06:21 PM
வெரி குட்! பாப்பா! கவுசல்யா! உனக்குத்தான் சாதி வேண்டாமே!! நீயும் படித்து இருக்கிறாய்! உன்னால் உன் புதிய சொந்தங்களை நன்றாகவே படிக்க வைக்க முடியும் எனவே உன் உறவினர்களுக்கு உன் கணவரின் தம்பிகளுக்கு தலித் இட ஒதுக்கீடு தேவை இல்லை! நீதான் மத்திய அரச பணியில் இருக்கிறாயே!! உனக்கு எதற்கு தலித் ஒதுக்கீடு? நீ வளர்த்து படிக்க வைக்கும் உன் கணவரின் தம்பிகளுக்கு பொது (general category } பிரிவில் படிக்க வைத்து வேலை வாங்கிக் கொடு!திருமணத்திற்கு சாதி வேண்டாம் என்றால் கல்வி வேலைவாய்ப்புக்கும் சாதி வேண்டாம்தான் என்ற நிலைப்பாடுதானே சரி? வேலை தேடும்போது நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒத்துக் கொள்ளும் நீங்கள் திருமணத்தில் மட்டும் எப்படி தீண்டப் படுபவர்கள் ஆவீர்கள்? என்று நான் கேட்கவில்லை,! நீ படித்து மத்திய அரசில் வேலை பார்க்கிறாய் அல்லவா? உனக்கும் நீ புதிதாக தத்து எடுத்த குடும்பத்துக்கும் சலுகைகள்தேவை இல்லை! ஒத்துக் கொள்கிறாயா?யாரிடம் கதைக்கிறாய்? தேவர் இனத்தில் பெண்கள் அடிமை என்று?? அது அந்தக் காலம்! இப்போது நிறைய மாறியுள்ளது! நீ அவசரபட்டு படி தாண்டியது உன் விருப்பம்! மற்றவரைகுறை சொல்லாதே!