Add1
logo
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு! ||
முக்கிய செய்திகள்
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, டிசம்பர் 2017 (10:42 IST)
மாற்றம் செய்த நாள் :13, டிசம்பர் 2017 (10:42 IST)


ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி நாளை குமரி வருகை!



ஒக்கி புயல் பாதிப்புக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள், இதுவரை கரை திரும்பவில்லை என குமரி மாவட்ட மீனவ கிராம மக்கள் கடந்த 10 நாட்களாக ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கேரள மாநிலத்தில் காணாமல் போன மீனவர்களை விரைந்து மீட்ட கேரள அரசு, உயிரிழந்த மீனவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலையையும் அறிவித்தது.

இதேபோல் தமிழகத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்டு தரக்கோரியும், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் வந்து பார்வையிடவேண்டும் என கோரிக்கை விடுத்தும் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பாதிப்பு நேர்ந்து 12 நாட்கள் கழித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார். இதையடுத்து கேரள மாநிலத்தை போல் உயிரிழந்த மீனவர்களுக்கு ரூ.10லட்சமாக அறிவிக்கப்பட்ட மாணியத்தை ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். அதேபோல் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஏற்கனவே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், தங்கமணி ஆகியோரும் குமரி மாவட்ட பாதிப்புகளை பார்வையிட்டு சென்றனர்.

எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மீனவர்களின் சோகத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி குமரி மாவட்டத்திற்கு நாளை வருகை தருகிறார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் ராகுல்காந்தி நாளை காலை 11 மணி அளவில் குமரி மாவட்டம் தூத்தூரில் உள்ள யூதா கல்லூரியை வந்தடைகிறார்.

அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறை மீனவ கிராமத்திற்கு செல்லும் ராகுல் காந்தி அங்கு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும் புயலால் நெற்பயிர்களையும், ரப்பர், வாழை, தென்னை உள்பட பயிர்களை இழந்த விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகளையும் அவர்களது கோரிக்கைகளையும் ராகுல் காந்தி கேட்டறிகிறார். அதன் பிறகு மீண்டும் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். முன்னதாக அவர் திருவனந்தபுரம் பகுதியிலும் புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :