Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
சிறப்பு செய்திகள்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (18:16 IST)
மாற்றம் செய்த நாள் :13, டிசம்பர் 2017 (10:35 IST)


சாதியின் பேரால் இன்னொரு கொலை கூடாது இங்கே! 

இந்தியாவையே பதைபதைக்கச் செய்தது அந்தக் கொலை. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள உடுமலைப்பேட்டை சாலையில் வைத்து ஒரு ஜோடியின் மீது, கொடூர தாக்குதலை நடத்திச் சென்றது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல். இதில் கழுத்து, கைகள் என பல இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இளைஞர் மயங்கி விழுகிறார். இன்னொரு புறம் தனது கணவரை காப்பாற்றச் சொல்லி தலையில் வெட்டுக் காயங்களுடன் கதறி அழுது கொண்டிருந்தார் அந்தப் பெண்.2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி காலை நடந்தேறிய இந்த சம்பவத்தில் தனது காதல் கணவர் சங்கரை, சாதி வெறியின் கோரத் தாண்டவத்திற்கு இரையாகக் கொடுத்தார் கௌசல்யா. சாதி ஆணவப் படுகொலையின் உக்கிரத்தை உலகறியச் செய்த அந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் கௌசல்யாவின் சொந்தபந்தங்கள்தான். கூலிப்படையை ஏவி அந்தப் பிஞ்சுகளின் காதலைக் கொன்றது சாதிவெறிக் கூட்டம்.

இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரில், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட ஆறு பேருக்கு தூக்குத்தண்டனை, ஒருவருக்கு இரட்டை ஆயுள் மற்றும் ஒருவருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கியிருக்கிறது திருப்பூர் நீதிமன்றம். குற்றவாளிகளின் தரப்பில் தண்டனையைக் குறைத்து வழங்குமாறு வாதம் முன்வைக்கப்பட்டபோது, எதனடிப்படையில் தண்டனையைக் குறைத்து வழங்கக் கோருகிறீர்கள் எனக்கேட்ட நீதிபதி அலமேலு நடராஜனின் குரலில் படுகொலை செய்யப்பட்ட சங்கர் மவுனமாக வந்துபோகிறார்.

இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே கௌசல்யாவிற்கு உறுதுணையாக இருக்கும், சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் நம்மிடம்,

மரண தண்டனை குறித்து எங்களுக்கும், கௌசல்யாவிற்கும் மாற்றுக்கருத்து உண்டு. நாங்கள் அதை நிச்சயம் எதிர்க்கிறோம். மரண தண்டனையால் குற்றங்கள் ஒழிந்துவிடும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு நியாயமானதுதான். கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்த குற்றவாளிகளின் தரப்பில் இருந்து இதுவரை 58 முறை பெயில் கேட்டு மனு கொடுத்திருந்தனர். நாமும் அதற்கு 58 முறை எதிர்ப்பு தெரிவித்து தள்ளுபடி செய்யவைத்தோம். இந்த விவகாரத்தில் தனி வழக்கறிஞர் இல்லாமல், நான்கு பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு அமைத்து வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் முன்வைக்கப்பட்ட அனைத்து சாட்சிகளும் வலுவான ஆதாரங்களாக அமைந்தன. இதுகுறித்து நேற்றே கௌசல்யாவிடம் ‘நாளை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது. அப்படியில்லை என்றால் நாம் மேல்முறையீடு செய்வோம்’ எனக் கூறியிருந்தோம். இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டவர்களும் குற்றவாளிகளே. அவர்களின் விடுதலையை எதிர்த்தும் நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஏனென்றால், அவர்களால் கௌசல்யாவிற்கோ, சங்கரின் குடும்பத்தாருக்கோ நிச்சயம் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் சாதிரீதியில் நடைபெற்ற ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை 187. இந்த ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும் என தேசிய சட்ட ஆணையம் மசோதா ஒன்றைக் கொண்டுவந்தது. அது இன்னமும் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையமும் தனிசட்டம் இயற்ற கோரிக்கைகள் விடுத்தது. உச்சநீதிமன்றம் இதுகுறித்து அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிட்டு, 22 மாநிலங்கள் சாதி ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருப்பதாக ஒத்துக் கொண்டபோதிலும், தமிழ்நாடு அரசு இன்னமும் ஒத்துக் கொள்ளவேயில்லை. தமிழ்நாட்டில் சாதிய ஆணவக்கொலைகள் நடப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது எவிடென்ஸ் அமைப்புதான். வடமாநிலங்களுக்கு நிகராக இங்கு இதுமாதிரியான கொலைகள் வெகுசாதாரணமாக நடந்துகொண்டிருக்கின்றன. தனிச்சட்டம் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும்” என்கிறார் உறுதியாக.கண்ணெதிரிலேயே தன் கணவருக்கு நேர்ந்த கொடூரத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு, சமூக செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கௌசல்யா, “நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதே நம்பிக்கையோடு இந்த வழக்கை குறிப்பாக, இம்மூவரின் விடுதலையை எதிர்த்து இறுதிவரை சட்டப்போராட்டத்தை மேற்கொள்வேன். சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும் ஒருபோதும் ஓயமாட்டேன். ஏனென்றால், சங்கருக்கான நீதி இந்த வழக்கின் தீர்ப்பில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. சாதிய கெளரவக்கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைப்பதுதான் சங்கருக்கான நீதியாக நான் கருதுகிறேன். அதற்கு இந்த தீர்ப்பு துணைசெய்யும் என்று நான் நம்புகிறேன்” என நீதிமன்ற வளாகத்திலேயே நம்பிக்கையுடன் பேசினார்.
சாதி ஆணவப் படுகொலையின் அடுத்தத் தாண்டவம் தொடங்குவதற்கு முன்பாக அரசு விழித்துக் கொள்ளவேண்டும். இன்னொரு சங்கர் கொலை செய்யப்படக் கூடாது. இல்லையென்றால், அனைத்து மக்களும் ஒன்றுபட்டு கட்டமைக்கப்பட்ட இந்த சமூகத்தில், மனிதங்களை எல்லாம் கொன்றுவிட்டு சாதி மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும்.

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : true Country : France Date :12/15/2017 4:01:52 PM
இதை சாதிய கொடுமை என்று சொல்லுவதற்கு இல்லை. எட்டு மாதங்கள் அந்த பெண் தன் காதலுடன் வாழ்ந்து இருக்கிறார். அப்போது ஒன்று நடக்கவில்லை. பிறகு தான் நடந்து இருக்கிறது. நடந்ததற்கு வேறு எதோ காரணம் இருக்கிறது. அதை ஆராயவேண்டும். உறவினர் ஏசி இருக்கலாம். அல்லது சங்கர் உறவினர்கள் அந்த குடும்பத்தை வெறுப்பு ஏற்றி இருக்கலாம். எதோ ஒன்று நடந்து இருக்கிறது. Name : siva
Name : jaya Country : United States Date :12/14/2017 1:31:43 PM
Reservation is enjoyed by all. BC - 30 % , MBC - 20 % , SC -18% and ST 1 % . It is not only for SC & ST. 30 % & 20 % has been more than 18 % .
Name : anonymous Date :12/14/2017 11:13:01 AM
இன்னொரு சங்கர் கொலை செய்யப்படக்கூடாது என்பது சரியான நோக்கம். ஆனால் இன்னொரு ஹாசினி போன்ற குழந்தைகள் ?! எதுஎதெற்கோ சிங்கப்பூரை மேற்கோள் காட்டும் அரசியல்தலைவர்கள் கடுமையான தண்டனைகள் வழங்குவதில் மட்டும் ஏன் சிங்கப்பூர் போன்ற நாடுகளை குறிப்பிடுவதில்லை. குற்றவாளிகள் செய்யும் பாவம், பாதிக்கப்படும் அப்பாவிகளின் கண்ணீர், சாபம் அத்தனையும், குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பில் இருந்துகொண்டு குற்றவாளிகளை பாதுகாப்பவர்கள் மேல்வரும். சிந்தப்படும் innocent blood ஒவ்வொரு துளிக்கும் இவர்கள் கடவுளிடம் கணக்கு கொடுத்தே ஆகவேண்டும். அதுவும் கடவுளுக்கு சமமான குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு. தலைமை பொறுப்பில் இருப்பது என்பது வெறும் பணம் சம்பாதிக்கும் பொறுப்பு அல்ல. நிகழ்காலத்தில் தங்கள் கடமையை செய்யாமல் குற்றவாளிகளை பாதுகாத்து preserve பண்ணி வினைவிதைக்கும் காவல்துறை, நீதித்துறை, ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், சாதாரணமக்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களின் சந்ததிகள் எதிர்காலத்தில் இதற்கான விலைகொடுக்க வேண்டிய நிலைவரும். குற்ற செயல்களில் innocent victim ஆகும்நிலை ஏற்படலாம். தெய்வம் நின்று கொல்லும்.
Name : tamilvanan Country : United States Date :12/14/2017 6:12:10 AM
இதை சாதிய கொடுமை என்று சொல்லுவதற்கு இல்லை. எட்டு மாதங்கள் அந்த பெண் தன் காதலுடன் வாழ்ந்து இருக்கிறார். அப்போது ஒன்று நடக்கவில்லை. பிறகு தான் நடந்து இருக்கிறது. நடந்ததற்கு வேறு எதோ காரணம் இருக்கிறது. அதை ஆராயவேண்டும். உறவினர் ஏசி இருக்கலாம். அல்லது சங்கர் உறவினர்கள் அந்த குடும்பத்தை வெறுப்பு ஏற்றி இருக்கலாம். எதோ ஒன்று நடந்து இருக்கிறது.
Name : siva Date :12/13/2017 12:31:54 PM
இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் வேண்டும் சாதி! கவுசல்யாவுக்கும் சங்கருக்கும்! திருமணத்திற்கு சாதி பார்க்கக் கூடாது. இது என்ன நிலைப்பாடு? சாதி வேண்டாம் என்று நினைத்தால் கவுசல்யா தனக்கும் தன் குடும்பத்துக்கும் சாதி வேண்டாம் என்று சொல்லி பொதுப் பிரிவில் போட்டி இடட்டும். ! ஆளே மாறி இருக்கிறார்.! திருமண போட்டோவில் இருப்பது போல இவர் பாந்தமாக இல்லை. கூடிய விரைவில் மாவோயிஸ்டுகள் போல ஆக்டிவிஸ்டுகள் கூட்டத்தில் இவரை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
Name : ondi.udayakumar tamilnadu [coimbatore] Date :12/13/2017 1:13:01 AM
அனைத்தும் சாதிகள் அடிப்படை , பெண்ணை தவிர , சாதியின் ஆணவப் படுகொலை , அடிப்படை ,கீலின் சாதி ,மேலியின் சாதி ,பெற்றவனை மறந்த இணைப்பின் செயல் , கொலையின் வடிவம் , இறுகுடும்பம் இருண்டநிலை ,தூக்கின் தண்டனை தீர்வின் அடிப்படையா , சட்டத்தின் பால் தீர்ப்பா,இல்லை மேலும் கொலையின் தூபமா , பெண்ணை பெற்றவன் ,பெண்ணை மறந்து விட வேண்டுமா ,இல்லை பெண்ணின் செயலை ஏற்றுக்கொள்ள வேண்டுமா , இவர்களுக்கு தண்டனை என்றால் ,ஆணவ கொலை தடைபடுமா, ஏன் பெண்ணின் ஆணவ படுகொலை தெரிவதில்லை , தீர்வின் அடிப்படை எங்கே , சாதிகள் அகற்றப்பட வேண்டும் , சாதிகள் அடிப்படை அகற்றப்பட வேண்டும் , காதலின் செயல் இருகுடும்பம் ஏற்றுக்கொள்ள வேண்டும் ,ஏற்றுக்கொண்டால் மட்டுமே , திருமண சடங்கு நடக்க வேண்டும் , இல்லையென்றால் , அதுவரை ஆணவ கொலையின் சொல்லும் ,ஆணவ கொலையின் தூக்கின் தண்டனையின் சொல்லும் ,மறைவின் அடையாளம் தெரிவது அரிதே , எதார்தங்கள் நோக்கி ,தீர்வின் அடிப்படையில் இன்றும் .
Name : jana Country : United States Date :12/13/2017 12:58:06 AM
இந்த உலகில் ஒரு சாதி ,மனித சாதி தான் .சாதி என்ற கேடு கெட்ட இரண்டு எழுத்து உள்ள வரை சாதியும் ஒழியாது ,மனிதனும் திருந்த மாட்டான் ....ஆவணக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கும்....இந்த தூக்கு தண்டனை ஒரு திருப்பு முனை .இனிமேல் ஆவது மனித சாதி திருந்துவார்களா ? ????
Name : S.Govindarajan Country : United Kingdom Date :12/12/2017 6:46:56 PM
அது சரி, காதலிக்க மறுக்கும் பெண்ணை வெட்டுவது, ஆசிட் ஊற்றுவது, உயிரோடு எரிப்பது என்றெல்லாம் செய்கிறார்களே. காதலை ஏற்கவோ மறுக்கவோ ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டல்லவா? நீதியும் நியாயமும் ஒரே மாதிரி இருக்க வேண்டாமா?