Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
சிறப்பு செய்திகள்
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (19:21 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (19:22 IST)

மீசை கவிஞனின் ஆசை புகைப்படங்கள்... 

பாரதியின் நினைவுகள்! 

இன்றும்   இளைஞர்களுக்கு  மனதில் கோபம் வந்தால் 'ரௌத்திரம் பழகு' ,காதல் வந்தால் 'கண்ணம்மா என் காதலி',  கண் முன் அநியாயம் நடந்தால் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்று அனைத்து சூழ்நிலைகளிலும்  பாரதி  வாழ்ந்துகொண்டிருக்கிறார். தான் வாழ்ந்த முப்பத்தியேழு ஆண்டுகளுக்குள் நூற்றாண்டுகளை தாண்டி வாழும் வரிகளை விதைத்த மீசை கவிஞரின் சில புகைப்படங்கள் இங்கே... 
பாரதியாரின் நண்பர் ஒருவரின் வற்புறுத்தலினால் 1917 ஆம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. இதில் பாரதியின் தோற்றம் தாடியுடன் காணப்படும்.  அவரது புதுவை நண்பர்களுக்கு  மிகவும் பிடித்த புகைப்படம் இது. தன் காதலையெல்லாம் கண்ணம்மாவுக்கு காணிக்கையாக்கிய பாரதி செல்லாம்மாவுடன் நின்ற புகைப்படம் இது.

அதே நாளில் எடுக்கப்பட்ட மற்றொரு  புகைப்படம் இது.  இதில் இடதுபுறத்தில் அமர்ந்திருப்பது பாரதியின் இளையமகள் சகுந்தலா, வலதுபுறத்தில் அவரது மனைவி செல்லம்மாள். நிற்பவர்கள் பாரதியின் மூத்தமகள் தங்கம்மா பாரதி மற்றும் அவரது இரு நண்பர்கள். இந்த புகைப்படத்தை பார்க்கும்பொழுது அந்த காலத்தில் பெண்கள், ஆண்களின் முன் நின்று பேசுவதே குற்றம் என்றெண்ணிய  சமூகத்திற்கு மத்தியில், தன் மனைவியை அமரவைத்து பாரதி  நின்று கொண்டிருந்தது அர்த்தமுள்ளது.

1919 ஆம் ஆண்டு விக்டோரியா ஹாலில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த புகைப்படத்தில் முண்டாசு கட்டி மீசையை முறுக்கி இருக்கும் இந்த புகைப்படம் பாரதியின் அசல் புகைப்படங்களின் வரிசையில் ஆறாவது புகைப்படமாகும். இந்த புகைப்படம் சிறிது காலத்துக்கு முன்பு டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது.

1920 ஆண்டு பாரதி காரைக்குடிக்கு இரண்டாவது முறை இந்து மதபிமான சங்கத்துக்கு  வந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.  இந்த புகைப்படத்தை   எடுக்கும்பொழுது அவர் கையில் இருந்த கம்பை தனியே வைக்குமாறு  புகைப்படம் எடுப்பவர் கூறியுள்ளார். ஆனால் அதனை மறுத்து தன்னை ஒரு அரசனாகவும் கம்பை செங்கோலாகவும் நினைத்து இந்த புகைப்படத்தை எடுக்க வைத்துள்ளார் பாரதி. கவிராஜன் என்றும்  புவிராஜனாகவே  வாழ்ந்தார். 

இந்த புகைப்படம் 1921 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.  தற்போது வரை மிகவும் பிரபலமான இந்த புகைப்படம், பாரதிதாசனுக்காக சென்னையில் எடுத்துக்கொண்டது.  பார்ப்பதற்கு மிகவும் இயற்கையாகவும் பாரதியின் கம்பீரத்தையும் வெளிக்காட்டும் புகைப்படமாக உள்ளது . இன்று சிலர் பாரதியையும் பாரதிதாசனையும் போட்டியாளர்களாக்கி விடுவார்கள் போல... 

ஹரிஹரசுதன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : BALAJI RADHAKRISHNAN Date :12/14/2017 4:11:33 PM
நல்ல விஷயம் .பாராட்டுவோம்.
Name : சு தனசேகரன் Date :12/12/2017 1:44:34 PM
பாரதியார் முப்பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார்.
Name : G. Madeswaran Date :12/11/2017 11:22:33 PM
கவிஞர் பாரதி பற்றி அருமையான சிறு தொகுப்பு! கண்டதை பார்த்து, கேட்ட மனதிற்கு, பாரதி பற்றிய நினைவு ஓர் புத்துணர்ச்சி!
Name : ondi.udayakumar tamilnadu [coimbatore] Date :12/11/2017 11:14:33 PM
இனபரிமாணத்தில் ஒரு முப்பரிமாணமாம் ,முப்பரிமாணத்தில் ஒரு முழுப்பரிமணமாம், தமிழகம் கண்டெடுத்த முண்டாசு மீசைக் கவியாம் , எங்கள் ஆசைக்கவியாம் , தமிழ் ஓசைக்கவியாம் , தரித்திரங்கள் உன்னை ஆட்க் கொண்டாலும், ,தர்மம் உன்னை காத்து நிக்கின்றதே ,உனது வரிகளுக்கு இன்றும் வயதேது , கவிச்சொல்லின் , உரிச்சொல் நீயன்றோ , கவி இருக்கும்வரை , புரட்சிக் கவியம் நீயன்றோ , முண்டாசு கவி , மண்ணில் நாங்களும் .