Add1
logo
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி || வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! ||
தமிழகம்
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
 ................................................................
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ)
 ................................................................
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
 ................................................................
பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்!
 ................................................................
வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான்
 ................................................................
வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி!
 ................................................................
அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்!
 ................................................................
எலுமிச்சைப் பழங்களின் வரத்து அதிகம் - விலையோ வீழ்ச்சி.. அதிர்ச்சியில் விவசாயிகள்!
 ................................................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடங்கிய "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"
 ................................................................
சென்னையில் ராணுவ பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
 ................................................................
மொத்த சனத்துக்கும் அல்வா கொடுத்துவரும் மோடி: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
பட்டப் பகலில் ரசீது அடித்து கொள்ளை: உரிமையை கேட்டால் ரவுடிகளை ஏவி மிரட்டும் திரையரங்குகள்!
 ................................................................
எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்
 ................................................................
டி.டி.வி. பேனரை தூக்கி எறிந்த போலீசார்
 ................................................................
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தை 700 தொழிலாளர்கள் முற்றுகை (படங்கள்)
 ................................................................
தினமும்தொந்தரவு! கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!
 ................................................................
டெல்லியில் தமிழக உயர்கல்வி மாணவர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லை: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (17:49 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (17:55 IST)


எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின்

“புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் - எம்.ஜி.ஆர் விழா கொண்டாட்டத்திலும், ஆர்.கே.நகர் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டிருக்கும் கல்நெஞ்சம் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

“கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 623 மீனவர்கள் இன்னும் காணவில்லை”, என்று அம்மாவட்ட ஆட்சி தலைவர் சாஜன் சிங் சவான் அவர்கள் அறிவித்திருப்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் சோகங்களை எல்லாம் கண்டு கலங்கி இருப்போரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. “197 மீனவர்கள் காணவில்லை”, என்று தலைமைச் செயலாளரும், “260 பேரை காணவில்லை”, என்று முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும் முரண்பாடாகத் தெரிவித்திருந்த நிலையில், இப்போது மாவட்ட ஆட்சி தலைவரே 623 மீனவர்கள் காணவில்லை என்று கூறியிருப்பது, “ஓகி புயல்” தாக்குதல் முடிந்து 13 நாட்கள் கடந்த பிறகும், எத்தனை மீனவர்கள் மீட்கப்படவில்லை என்பது குறித்த துல்லியமான கணக்கீடு கூட இந்த ‘குதிரை பேர’ அரசிடம் இல்லை என்ற வெட்கக்கேட்டை வெளிப்படுத்தியுள்ளது. 

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கியுள்ள 2124 மீனவர்களை இன்னும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது”, என்று மீன் வளத்துறை அமைச்சர் திரு. ஜெயகுமார் அறிவித்தார். துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வமோ, “2384 மீனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்”, என்றார். முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி, “2570 மீனவர்களை மீட்க வேண்டியதிருக்கிறது”, என்றார். அரசு செயலாளர் திரு. டி.கே.ராமச்சந்திரனோ, “3117 மீனவர்களை இன்னும் மீட்க வேண்டியதிருக்கிறது”, என்று டிசம்பர் 10 ஆம் தேதி அறிவித்தார். ஆக, வேறு மாநில கடற்கரையோரங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்களின் எண்ணிக்கையும் இந்த அரசுக்குத் தெரியவில்லை, காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையும் தெரியவில்லை. 

இதன் மூலம், ஒகி புயலால் பாதிக்கப்பட்டு வேறு மாநில கடற்கரையோரங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்களையும், ஆழ்கடலுக்குச் சென்று இதுவரை திரும்ப முடியாமல் போன மீனவர்களையும் மீட்கும் பணியில் மத்திய - மாநில அரசுகள் மிக மோசமான வகையில் அலட்சியம் காட்டுகின்றன என்பது வெளிப்படுகிறது. ஆயிரம் மீனவர்களுக்கும் மேல் காணவில்லை என்று மீனவ தாய்மார்கள் குமுறி, ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். தங்கள் குடும்ப தலைவர்களை, சகோதரர்களை, பிள்ளைகளைக் காணாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், நடுக்கடலில் மிதக்கும் பிணங்கள் என்று வெளிவந்த செய்திகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த செய்தியைப் பார்த்துக் கண்கலங்கிக் கதறும் தாய்மார்களின் போராட்டம் மனதை வேதனைத் தீயில் ஆழ்த்துவதாக உள்ளன. 

ஆனால், ஒகி புயல் பாதித்த பகுதிகளை இதுவரை நேரில் சென்று பார்வையிடாமல், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் ஆறுதல் சொல்லாமல், காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியையும் நேரடியாகக் கண்காணிக்காமல், ‘எம்.ஜி.ஆர் விழா கொண்டாட்டத்திலும்’, ‘ஆர்.கே.நகர் வாக்கு சேகரிப்பிலும்’, ஈடுபட்டிருக்கும் கல்நெஞ்சம் கொண்ட அலட்சிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த மாநிலத்தை ஆளும் தகுதியையும், தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார். 

பேரிடர் ஏற்பட்ட பிறகும் மக்கள் படும் அடுக்கடுக்கான துன்பங்களை ரசிப்பது போல், இப்படி கொண்டாட்டங்களில் ஈடுபடும் திரு. எடப்பாடி பழனிசாமிக்கு மனித நேயம் அறவே அற்றுப் போய்விட்டது. அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதைப் போல, “உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் பள்ளம்தான் இருக்கிறது”. இப்போது மட்டுமல்ல, அனிதா மரணம், கதிராமங்கலம் போலீஸ் தடியடி, நெடுவாசல் போராட்டம் என்று மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம், ஒருமுறை கூட முதலமைச்சர் மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. துயரத்தில் இருக்கும் மக்களை வேடிக்கை பார்க்கும் ஒரு வினோதமான முதலமைச்சர் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில், அதுவும் சட்டவிரோதமாக அமர்ந்திருப்பது அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடாகவே அமர்ந்துள்ளது. 

மக்களைப் பார்க்கும் எண்ணமே வறண்டு போன முதலமைச்சர், இனியும் கோட்டையில் இருந்து என்ன லாபம் என்ற கோபக்கனல் கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களுக்கு, குறிப்பாக தாய்மார்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கோபத்தின் எரிமலை உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரு. எடப்பாடி பழனிசாமியோ, அவரை ஆட்சியில் தொடர அனுமதித்து அழகு பார்த்து வரும் மத்திய பா.ஜ.க. அரசோ, காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்பதில் வரலாறு காணாத அலட்சியத்தையும், அக்கறையற்ற போக்கையும் கடைப்பிடித்து வருகின்றன. 

“கடைசி மீனவர் மீட்கப்படும் வரை கடற்படை மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்படும்”, என்று கூறும் மத்திய பா.ஜ.க. அரசு, மற்ற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களையும், காணாமல் போன மீனவர்களையும் மீட்டுக் கொண்டு வந்து மாவட்டத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? தங்களின் ரத்த சொந்தங்களை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஜனநாயகரீதியில் போராடினால், ரயில்வே போலீஸும், ‘குதிரை பேர’ அரசும் அவர்கள் மீது வழக்குப் போடுவது ஏன்? மீட்புப்பணியில் காட்டாத அக்கறையை மீனவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான அடக்குமுறை அராஜகத்தில் ‘குதிரை பேர’ அதிமுக அரசு ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

ஆகவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்கவும், ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாகச் சீரமைக்கவும், இறந்துபோன மீனவ குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, கூடுதல் நிதியுதவி ஆகியவற்றை வழங்கக் கோரியும், மீட்புப்பணிகளில் மத்திய - மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், திராவிட முன்னேற்றக் கழக மீனவரணி சார்பில் நாளை (12.12.2017) சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட்டம் என் தலைமையில் நடைபெறும் என்றும், இது மீனவர்களுக்கான பிரச்னை என்று கருதாமல் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பாகக் கருதி, அனைத்துத் தரப்பு மக்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்தில் என்னுடன் பங்கேற்று, மத்திய - மாநில அரசுகளுக்கு தங்களுடைய கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :