Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 10, டிசம்பர் 2017 (23:36 IST)
மாற்றம் செய்த நாள் :10, டிசம்பர் 2017 (23:57 IST)கொடூரன் தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு!


சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி தஷ்வந்த் ஜாமீனில் வந்த பின்னர் தாய் சரளாவை கொன்றுவிட்டு நகைகளுடன் தப்பிய வழக்கில் தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டான்.  சென்னை அழைத்து வரப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான் கொடூரன் தஷ்வந்த்.  தஷ்வந்தை டிசம்பர் 22ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் உத்தரவிட்டுள்ளார்.  நீதிபதி உத்தரவை அடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்க கொடூரன் தஷ்வந்தை போலீசார் அழைத்து சென்றனர்.   

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வை
 புறக்கணித்த இந்தியா!

அமைதியை நிலைநாட்டவும், ஆயுத போரை தவிர்க்க நாடுகளுக்கிடையே ஒற்றுமையை பேண நடவடிக்கைகள் எடுத்துவரும் தனி நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் கடந்த பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு அந்த விருது ஆணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஐக்கிய நாடுகள் சபையில் அணுஆயுதங்களை ஒழிக்க சட்டம் நிறைவேற்றி சாதனை படைத்த "ஐகான்" அமைப்பிற்கு வழங்கப்பட்டது.வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை இந்தியா உட்பட அணுஆயுத நாடுகள் புறக்கணித்தன. இந்த நகர்வு இந்தியா இதுவரை கடைபிடித்துவந்த நிலைப்பாட்டிற்கு எதிரானதாக இருப்பதாக சர்வதேச அமைதி செயல்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.

அதிமுகவுக்கு அடிமையாக இருக்க முடியாது: 
தமீமுன்அன்சாரி 

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எந்தகட்சிக்கும் ஆதரவு இல்லை. கடந்த தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக அதிமுகவுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஆதரவும் தர முடியாது. ம.ஜ.கவுக்கு தனி கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளது. கடந்து முறை
போட்டியிட்டது அது தேர்தல் யுக்தி என்று மயிலாடுதுறை அருகே நீடுரில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன்அன்சாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வெண்கலம் வென்றது இந்தியா!
 ஒடிசா முதல்வர் பாராட்டு

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் உலக ஹாக்கி லீக் பைனல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் போட்டிகள் முடிந்து இறுதி போட்டி மற்றும் மூன்றாவது இடத்துக்கான போட்டி  நடந்து வருகிறது. இன்று மூன்றாவது இடத்துக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெர்மனி மற்றும் இந்திய அணிகள் மோதின. இறுதியில், இந்தியா ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது.  ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்தியாவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்தார்.  இந்திய ஹாக்கி அணியில் உள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி கவுரவித்தார்.


7 மணி நேரம் ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடிப்பு- 
மாணவி பரிதாப உயிரிழப்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 10-ம் வகுப்பு மாணவி சரிகா, சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.  இதையடுத்து மாணவி சரிகாவை சென்னை கொண்டு செல்ல பெற்றோர்கள், மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டனர்.  7 மணி நேர தாமதத்திற்கு பின்னரே ஆம்புலன்ஸ் கொடுத்ததால் உரிய நேரத்தில் அனுமதிக்கப்படாததால் மாணவி உயிரிழந்தார்.  

குஜராத்தில் தேர்தலைப் புறக்கணித்த கிராமம்!

குஜராத் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள கஜாதி கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் தேர்தலில் வாக்களிக்க செல்லவில்லை. ஒழுங்கான குடிநீர் விநியோகம், முறையான சாலை வசதிகள் மற்றும் சீரான மின் விநியோகம் என எதையும் செய்து தராத அரசைப் புறக்கணிப்பதற்காக தேர்தலில் வாக்களிக்கவில்லை என அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

சேரன் - விஷால் ஆதரவாளர்கள் மோதல்

நடிகர் விஷால் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக அச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கணக்குகளை காண்பிக்க வேண்டும் என்றும் விஷால் தலைவர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தியும், இயக்குநர் சேரன் தரப்பினர், மைக்குகள் உள்ளிட்டவற்றை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். இதனால், விஷால் ஆதரவாளர்களுக்கும், சேரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சினிமா தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு 
அறிவித்தவர் கைது!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலையை துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆய்வுக்கு சென்ற ஆளுநர் 
கிரண்பேடிக்கு மக்கள் எதிர்ப்பு!

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் அம்மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதும், அதற்கு மாநில அரசு தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுமாக காட்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடி வழக்கமாக வாராந்திர ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றிருந்தார். பிள்ளையார்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது "திட்டங்களை தடுக்கும் ஆளுநர் புதுச்சேரிக்கு தேவையில்லை" என காங்கிரசார் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் விலையில்லா அரிசி  உள்ளிட்ட திட்டங்களுக்கு கிரண்பேடி தடையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி மக்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 


சபர்மதி நதியில் மிதந்த 
ஜஸ்பிரித் பும்ராவின் தாத்தா உடல்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங் (வயது 84). இவர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தனது பேரன் ஜஸ்பிரித் பும்ராவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அவரைப் பார்ப்பதற்கு அவரது வீட்டில் அனுமதி கொடுக்கப்படவில்லை. டிசம்பர் 5ஆம் தேதி ஜஸ்பிரித் பும்ராவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரோடு பேசவும் வாழ்த்து தெரிவிக்கவும் நினைத்த சந்தோக் சிங்கிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜஸ்பிரித் பும்ராவிடம் தொலைபேசியில் பேசுவதற்கும் அவரது தாயார் சந்தோக் சிங்கை அனுமதிக்க மறுத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி சந்தோக் சிங் அவரது மகன் பல்விந்தர் சிங்கிற்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்து, இறந்துபோன உன் தாயைச் சந்திக்கப் போகிறேன் எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன்பிறகு காணாமல் போன அவரைத் தேடிவந்த நிலையில், இன்று காலை சபர்மதி நதியில் சடலமாக மீட்டுள்ளனர் தீயணைப்பு வீரர்கள்.

தொகுப்பு: கதிரவன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :