Add1
logo
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி || வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! ||
முக்கிய செய்திகள்
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 10, டிசம்பர் 2017 (22:17 IST)
மாற்றம் செய்த நாள் :10, டிசம்பர் 2017 (23:37 IST)

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வை
 புறக்கணித்த இந்தியா! உலக நாடுகள் அதிர்ச்சி!நோபல் விருது குறித்தும், இந்தியாவின் புறக்கணிப்பு குறித்தும் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூறியுள்ளதாவது:

அமைதியை நிலைநாட்டவும், ஆயுத போரை தவிர்க்க நாடுகளுக்கிடையே ஒற்றுமையை பேண நடவடிக்கைகள் எடுத்துவரும் தனி நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் கடந்த பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு அந்த விருது ஆணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஐக்கிய நாடுகள் சபையில் அணுஆயுதங்களை ஒழிக்க சட்டம் நிறைவேற்றி சாதனை படைத்த "ஐகான்" அமைப்பிற்கு வழங்கப்பட்டது.

1985ல் நோபல் அமைதிக்கான பரிசு பெற்ற அணு ஆயுத போர் எதிர்ப்புக்கான சர்வதேச மருத்துவர்கள் அமைப்பால் 2007ல் தொடங்கப்பட்டது ஐகான் (அணு ஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரச்சாரம்) அமைப்பு. கடந்த பத்தாண்டுகளாக இந்த அமைப்பு உலகம் முழுவதுமுள்ள 15,000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு பல பிரச்சாரங்களை முன்னெடுத்தது. கடந்த ஜூலை மாதம் அணு ஆயுதங்களுக்கு எதிராக 122 நாடுகளை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது ஐகான் அமைப்பு.

உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் அணுஆயுதங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அமைப்பிற்கு இன்று நோர்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ நகரத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை இந்தியா உட்பட அணுஆயுத நாடுகள் புறக்கணித்தன. இந்த நகர்வு இந்தியா இதுவரை கடைபிடித்துவந்த நிலைப்பாட்டிற்கு எதிரானதாக இருப்பதாக சர்வதேச அமைதி செயல்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷியாவிற்கும் பணிப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் கூட அணுஆயுதங்களுக்கு எதிராக இந்தியா பல நகர்வுகளை முன்னெடுத்தது. 1988 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஐக்கிய நாடுகள் சபையில், அணு ஆயுத ஒழிப்பிற்கு விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதுவரை விவாதிக்கப்பட்ட அறிக்கைகளில் முழுமையான ஒரு பாதையை அணு ஆயுத ஒழிப்பிற்கு வழிகாட்டுவதாக அறிஞர்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

சர்வதேச களத்தில் இந்தியாவின் இராஜதந்திர வலிமை அதன் தார்மீக அதிகாரமே என்று அதிகாரத்தை கணக்கிடுவதன் மூலம் இராஜதந்திரத்தைத் தொடர விரும்பும் 'யதார்த்தவாதத்தின்' ஆதரவாளர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள். இதன் தொடர்ச்சியாகவே வாஜ்பாய் அரசாங்கம் அணு குண்டுகள் சோதனைகளை நடத்திருந்தாலும் "முதலாவதாக அணு குண்டுகளை பயன்படுத்த மாட்டோம்" என்கிற கொள்கை நிலைப்பாட்டை எடுத்தது. குறைந்தபட்சம் அணுஆயுத ஒழிப்பிற்கு அணுஆயுத நாடுகளுடன் சேர்ந்து பயணிப்போம் என்றும் அறிவித்தது அன்றைய வாஜ்பாய் அரசு. மன்மோகன் ஆட்சி காலத்தில் அணுஆயுத ஒழிப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னர் ராஜீவ் காந்தி அவர்களால் வழங்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மேலும் செழுமைப்படுத்தப்பட்டு அணு ஆயுதங்கள் வைத்திருந்தாலும் அணுஆயுத ஒழிப்பிற்காக, ராஜீய உறவுகளின் மெல்லாம் மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் உரிமையுள்ள ஒரே நாடாக உலகிலேயே இந்தியா விளங்கியது. 

இந்தியாவின் இந்த முன்னகர்வுகள் தான் உலக நாடுகள் இந்தியாவை "பொறுப்புள்ள அணுஆயுத" நாடாக கருதுவதற்கு வழிவகுத்து இந்தியாவிற்கு பல அணுசக்தி தொழிநுட்பங்களை வழங்க அனுமதித்தது. ஆனால் மத்தியில் பா.ஜ அரசு மோடியின் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு நிலைமைகள் மாறத்துவங்கின. "அணு ஆயுதங்களை முதலாவதாக" பயன்படுத்த மாட்டோம் என்ற நிலையிலிருந்து மாற வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் பரிக்கர் உட்பட பல தலைவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இந்தியா தன்னுடைய தார்மீக நிலையை இழக்க துவங்கியது.
  இப்படி பட்ட நிலையில் தான் இந்தியா நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணித்துள்ளது. 

உலகத்திற்கு அகிம்சை என்கிற மகத்தான ஆயுதத்தை வழங்கிய நாடு இன்று விழாவை புறக்கணித்திருப்பது உலக நாடுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தி, புத்தர், மகாவீரர், கான் அப்துல் கபார் கான், அன்னை தெரசா என உலக அமைதியை விரும்பும் மனிதர்கள் உலாவிய மண் இன்று உலக அரங்கில் அவமானத்தை சுமந்து நிற்கிறது.
  உலக அமைதியை நோக்கிய முக்கியமான ஒரு செயல்பாடாக அணு ஆயுத அழிப்பு இருக்கும் என்பதில் மனிதத்தில் நம்பிக்கை கொண்ட யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அத்தகைய செயல்பாடுகளுக்காக மட்டுமே இயங்கி வரும் ஐகானுக்கு 2017க்கான அமைதி நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது, அணு ஆயுத ஒழிப்பு பிரச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு நகர்வு.

இப்படி பட்ட வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை இந்தியா புறக்கணித்திருப்பது வருத்தத்திற்கு உரியது இதை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இந்தியாவின் இந்த தடுமாற்றம் உலகம் அமைதியற்ற நிலையை நோக்கி செல்வதைதான் விரும்புகிறது என்ற தோற்றத்தைதான் தரும்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் "காந்தியின் தேசமான" இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அணு ஆயுத ஒழிப்பில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் கோருகிறோம்.’’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : appu Country : France Date :12/10/2017 11:03:51 PM
பூட்டோவை தூக்கில் போட்டபோதும் ,,இராக்கில் அழிவு ரசாயன குண்டுகள் இல்லை எனும்போதும் ,,,, ஐநா ஒன்றும் செய்ய முடியவில்லை,,, இந்தியா உட்பட்ட நாடுகள் எதிர்த்தும் ,,,ஒரு பயனும் இல்லை ,,,, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் ,,,அடுத்த நாட்டை அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என சொன்னபோது ,,,,,???