Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
முக்கிய செய்திகள்
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார்
 ................................................................
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி
 ................................................................
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (23:5 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (23:5 IST)


மோடியை அவதூறாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் தற்காலிக நீக்கம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் மோடி குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, இந்திய அரசியலமைப்பில் அம்பேத்கரின் பங்கு இன்றியமையாதது. ஆனால், அவரது புகழை ஒரு குடும்பம் இருட்டடிப்பு செய்துவிட்டது. இருப்பினும், அவரது புகழ் அனைத்து மக்களின் மனதிலும் நீங்காத இடம்பிடித்துள்ளது என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர், மோடியை ‘நீச் ஆத்மி’ என விமர்சித்தார். ‘நீச்’ என்றால் இந்தியில் நேரடியாகவே தீண்டத்தகாதவன் என்று அர்த்தப்படும். இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜக மூத்த தலைவர்கள் உட்பட பலரும் மணி சங்கர் ஐயரின் கருத்தை விமர்சித்திருந்தனர். லல்லு பிரசாத் யாதவ்  மணி சங்கர் ஐயருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றே தெரிவித்தார்.

இதற்கிடையில், குஜராத் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, என்னைத் தீண்டத்தகாதவன் என விமர்சிக்கிறார்கள். முதல்வராகவும், பிரதமராகவும் நான் என்ன தீண்டத்தகாத வேலைகளைச் செய்துவிட்டேன். இதற்கு குஜராத் மக்கள் பதில் சொல்வார்கள் என்று நம்புகிறேன் என பேசினார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் மீது பாஜகவினர் அவதூறான வார்த்தைகளில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். ஆனால், காங்கிரஸின் பாரம்பரியமும், கலாச்சரமும் முற்றிலும் மாறுபட்டது. மோடி குறித்து மணி சங்கர் ஐயர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தக் கருத்துக்கு மணி சங்கர் ஐயரும், காங்கிரஸும் மன்னிப்பு கூறவேண்டும் என எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டிருந்தார்.

மிகப்பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் இந்தக் கருத்தை வெளியிட்ட மணிசங்கர் ஐயர், நான் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் இல்லை. மோடி கீழ்த்தரமான அரசியலை செய்து வருகிறார் என்றுதான் தெரிவித்திருந்தேன். எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், மணி சங்கர் ஐயர் கூறிய இந்த கருத்தின் காரணமாக அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : ராஜகோபாலன். Date :12/8/2017 9:18:51 PM
எமது "இட்டார் மேல் குலத்தார்..!!! இடாதார் கீழ் குலத்தார்..!!!" என்று வெளியான கருத்தில், "இந்திரா என்ற இடத்தில்....., சோனியா கான்'டி" என்று படிக்கவும். நன்றி.
Name : ராஜகோபாலன். Date :12/8/2017 11:51:40 AM
இட்டார் மேல் குலத்தார்..!!! இடாதார் கீழ் குலத்தார்..!!! என்றார்., மாபெருமாட்டி அவ்வை. இங்கே முற்றுப்பெறுகிறது குல கோத்திர வகைகள். இல்லையா..??? இருப்பினும்... இந்திரா பிறக்கும் முன்.., இந்திராவின் தந்தை ஜெயிலில் இருந்தார்.., அவரின் தாய் சாராயகடைமுன் 'சாக்னா' கடைபோட்டு பிழைப்பை நடத்திக்கொண்டு இருந்தார், என கண்டுபிடித்து அறிவித்தவர் மாமா சுப்பிரமணியம் சாமி அவர்கள்..!!!, காந்தியும் பணியா!!! மோடியும் பணியா??? என்று உலகுக்கு அறிவித்தவர்... மாமா அமித்ஷா அவர்கள்..?!?!?!, (மனு தர்மப்படி, மணி சங்கர் ஐயரும்., சுப்பிரமணியம் சாமி., அமித்ஷா.., மற்றும் பெங்களூரு பிம்ப் மாமா.., காஞ்சி ஜெயேந்திரர்.., போன்றவர்களுக்கு, காந்தியும் மோடியும் தீண்டத்தகாதவர்கள் தானே??? இதில் ஏதேனும் சந்தேகம் உண்டா??? விழிப்போடு இருப்பது அவரவர் பொறுப்பு ஆகும்) பணியா மோடியை தவிர., சுப்பிரமணியம் சாமி., அமித்ஷா., போன்ற, வேறு எவரேனும் எதிர்ப்பு தெரிவித்தார்களா??? ஜாதியற்ற தமிழ் கலாச்சாரத்தை அழித்து.., வர்ணங்களை உண்டாக்கிய.., "வர்ணம் பேசும்", பஞ்சம் பிழைக்க வந்தவர்களை.., தமிழர்கள், தம் அறிவால், இனம் கண்டுக்கொள்ளவேண்டும்???
Name : Mohamed halid Country : Indonesia Date :12/8/2017 11:28:07 AM
மோடி நம் நாட்டின் பிரதமர் என்பாதல் அவரது கட்சி யினர் சோனியா காந்தி குடும்பம் பற்றிய பல வகையான கருத்தை பதிவு செய்யப்படும் போது மணி சங்கர் ஐய்யர் சொன்ன கருத்தில் என்ன தவறு?... மணிசங்கர் அய்யர் சொன்ன கருத்துத்தில் என்ன தவறு இருக்க முடியும் ? காரணம் ' நீச் ஆத்மி' தான் ஆகையால் தான் மாநிலங்கள் தோறும் சாதி அரசியல் செய்கின்றார்.மணிசங்கர் மீது வேறு காரணம் இல்லாத நிலையில் காங்கிரஸ் இதையே சாக்காக வைத்து அவரை கட்சியில் இருந்து எடுத்து இருப்பதாகவே தெரிகின்றது காரணம் பாஜகவில் அங்கம் வகிக்கும் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் பாஜகவை பல முறை விமர்சித்து இருக்கார் காங்கிரஸ் சோனியாவை கடுமையாக வெளிநாட்டு காரர் என்றும் விமர்சித்து இருக்கார் அதற்காக பாஜக அவரை கட்சியில் இருந்து தூக்கியதா இல்லையே ?! மோடி செய்யும் பிரிவினை வாத அரசியலை சுட்டி காட்டியது தவறில்லை என்று தான் நான் நினைக்கின்றேன்.
Name : Kaavi bayangaram Country : India Date :12/8/2017 8:20:05 AM
மணிசங்கர் அய்யர் சொன்ன கருத்துத்தில் என்ன தவறு இருக்க முடியும் ? காரணம் ' நீச் ஆத்மி' தான் ஆகையால் தான் மாநிலங்கள் தோறும் சாதி அரசியல் செய்கின்றார்.மணிசங்கர் மீது வேறு காரணம் இல்லாத நிலையில் காங்கிரஸ் இதையே சாக்காக வைத்து அவரை கட்சியில் இருந்து எடுத்து இருப்பதாகவே தெரிகின்றது காரணம் பாஜகவில் அங்கம் வகிக்கும் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் பாஜகவை பல முறை விமர்சித்து இருக்கார் காங்கிரஸ் சோனியாவை கடுமையாக வெளிநாட்டு காரர் என்றும் விமர்சித்து இருக்கார் அதற்காக பாஜக அவரை கட்சியில் இருந்து தூக்கியதா இல்லையே ?! மோடி செய்யும் பிரிவினை வாத அரசியலை சுட்டி காட்டியது தவறில்லை என்று தான் நான் நினைக்கின்றேன்.
Name : Jeyam Date :12/7/2017 11:44:47 PM
Yes you are ....... by cheating Indians !
Name : S.Govindarajan Country : United Kingdom Date :12/7/2017 11:29:43 PM
இங்குள்ள சில ஆட்களும் மோடி மீது வசை மாறி பொழிந்து கட்டுரைகளை நக்கீரனில் எழுதுவது கண்டிக்க தக்கது.நக்கீரன் இந்த ஆட்களை வெளியேற்ற வேண்டும்.