Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
தமிழகம்
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
 ................................................................
ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி
 ................................................................
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல்
 ................................................................
டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை!
 ................................................................
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டடம்
 ................................................................
சமூக நோக்கத்தோடு செயல்படும் அதிகாரிகளுக்கு விருது
 ................................................................
கோவையில் அனுமன் ஜெயந்தி விழா
 ................................................................
கொருக்குப்பேட்டையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்
 ................................................................
ராகுல் காந்திக்கு அன்புமணி வாழ்த்து!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் புகார்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
 ................................................................
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
 ................................................................
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (13:5 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (16:52 IST)

கேரள அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்! ராமதாஸ்

ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எவ்வாறு செய்வது? என்பதை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பேரிடர் காலத்தில் ஓர் அரசு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு திகழ்கிறது. ஒக்கி புயலில் சிக்கிய தமிழக மீனவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க பினாமி தமிழக அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததைப் பார்க்கும் போது அப்படித் தான் நினைக்கத் தோன்றுகிறது.

காணாமல் போன மீனவர்களை மீட்கும் விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது மட்டுமின்றி பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில்  மறியல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் குற்றச்சாற்றுகள் புறந்தள்ளிவிடக் கூடியவை அல்ல. மீனவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது மீனவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாற்றுகள் முழுக்க முழுக்க உண்மை  என்பதை உணர முடிகிறது. ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?  உயிரிழந்த மீனவர்கள் எத்தனை பேர்? என்ற விவரங்களைக் கூட தமிழக அரசு வெளியிட மறுக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காணாமல் போன 294 மீனவர்களில், 220 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாகவும், மற்ற பகுதிகளில் இருந்து 284 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2570 மீனவர்களில், இதுவரை 205 படகுகளும், அவற்றில் இருந்த 2384  பேரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். மீதமுள்ள 79  படகுகளும். அவற்றில் உள்ள 186 மீனவர்களையும், கன்னியாகுமரி  மாவட்டத்திலிருந்து சென்ற 74  மீனவர்களையும்  மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுவரை ஒரே ஒரு மீனவரைக் கூட தமிழக அரசு மீட்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் பொய்யானவை ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் இன்னும் 1013 பேர் கரை திரும்பவில்லை என்று ஆதாரங்களுடன் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

காணாமல் போன மீனவர்கள் எந்தெந்த பகுதிகளில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உள்ளிட்ட விவரங்களையும் ஜி.பி.எஸ் கருவி மூலம் பெறப்பட்ட தகவல்களுடன் இணைத்து தமிழக அரசிடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றின் உதவியுடன் மீனவர்களை அடையாளம் கண்டு மீட்க தமிழக அரசும், இந்திய கடலோரக்காவல்படையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளிடம் மீனவர் சங்க பிரதிநிதிகள் புகார் அளித்த போது, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அதை செய்யாமல்,‘‘மீனவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று ஜெபியுங்கள்’’ என்று கூறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மீனவர்களை மீட்க வேண்டிய அரசு அதன் கடமையைச் செய்யாமல், மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்படி  பிரசங்கம் செய்வதா அரசின் பணி? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

ஒக்கி புயலால் தமிழகம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதோ, அதை விட அதிகமாக கேரள மாநிலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு மீட்புப்பணிகள் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு, இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். ஆனால், தமிழகத்தில் நிவாரணப் பணிகள் ஆமையை விட குறைவாக வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக ஆளுனரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை. புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதை விட ஆர்.கே நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்வது தான் முக்கியமா? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

கேரளத்தில் ஒக்கிப் புயலில் சிக்கி 30 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவியை ரூ.10 லட்சத்திலிருந்து, ரூ.20 லட்சமாக கேரள அரசு உயர்த்தியுள்ளது.  காயமடைந்த மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சேதமடைந்த படகுகளுக்கு பதிலாக புதிய படகு என ஏராளமான சலுகைகளை கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இதுவரை 36 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இருவர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறி ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 4 லட்சம் மட்டுமே  இழப்பீடு வழங்க முடியும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எவ்வாறு செய்வது? என்பதை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரளத்துக்கு இணையாக இழப்பீடு வழங்கவும்  தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :