Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
முக்கிய செய்திகள்
அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தலைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் அதிமுகவினர்! - வெற்றிவேல் குற்றச்சாட்டு
 ................................................................
வரம்பு மீறி செயல்படும் ஆளுநர்! - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கை - மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு
 ................................................................
85% புகையிலை எச்சரிக்கை படங்களை நீக்கக்கூடாது: சட்டப்பாதுகாப்பு தேவை! அன்புமணி
 ................................................................
மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான் : திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
பணப்பட்டுவாடா - சிறப்பு தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சியினர் ஆலோசனை!
 ................................................................
தஷ்வந்த் நண்பர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை
 ................................................................
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (12:6 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (12:36 IST)


குமரி: ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக்கோரி 5 ஆயிரம் பேர் பேரணி



கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கருப்பு கொடியுடன் ஏராளமான பெண்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி மீனவ அமைப்பினர் கூறும்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்றவர்களில் ஒக்கி புயலில் சிக்கி 254 படகுகள் கரை திரும்பவில்லை. இதில் மீன்பிடிக்கச் சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மாயமான மீனவர்களை இந்திய கடற்படை, கடலோர காவல்படை வீரர்கள் தேடி வந்தனர். இதில் மராட்டியம், கோவா, குஜராத் மற்றும் லட்சத்தீவுகளில் குமரி மீனவர்களின் படகுகள் கரை ஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல கேரள கடல் பகுதியில் இறந்து போன மீனவர்களின் உடல்களும் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இதுவரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல்களும், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

ஆனால் புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. உயிர் தப்பிய மீனவர்கள் பலரும் இதனை உறுதி செய்து வருகிறார்கள். தங்களோடு படகில் வந்த பலரும் கண் முன்பு கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் மூலம் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று மீனவ அமைப்பினர் கூறுகிறார்கள். ஆனால் மாயமான மீனவர்கள் பற்றி அரசு தெரிவிக்கும் தகவல்களில் முரண்பாடு இருப்பதாக மீனவர்கள் கூறினர். 



அண்டை மாநிலமான கேரளாவில் ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. பலியான மீனவர் குடும்பத்திற்கு கேரள அரசு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறது. இதுபோல தமிழக அரசும் நிவாரண நிதி வழங்க வேண்டும், மாயமான மீனவர்களை தேடும் பணியை முடுக்கி விட வேண்டுமென்று மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியபடி, மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும், பலியான மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறந்தவர் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :