Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
தமிழகம்
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
 ................................................................
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
 ................................................................
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்
 ................................................................
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!
 ................................................................
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!
 ................................................................
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
 ................................................................
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, நவம்பர் 2017 (17:6 IST)
மாற்றம் செய்த நாள் :22, நவம்பர் 2017 (17:13 IST)


பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன்



தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பிற மாநிலத்தவர் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என தமிழக முதல்வருக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.
 
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவர் பங்கேற்பது தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதற்கே வழிவகுக்கும். 2017-ஆம் ஆண்டு மார்ச் மாத புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 81.30 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். அதில் 2.45 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள் ஆவார்கள். சென்னையில் உள்ள ஐந்து வேலைவாய்ப்பகங்களில் மட்டும் 9 லட்சம் பேர் வேலை கேட்டுப் பதிவு செய்துள்ளனர். இப்படி தமிழக இளைஞர்கள் வேலையின்றி திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளைப் பிற மாநிலத்தவருக்குத் திறந்துவிடுவது எந்த விதத்திலும் நியாயமானதல்ல.
 
தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள், இரயில்வே உள்ளிட்ட  மத்திய அரசு அலுவகங்களில் ஏற்கனவே வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைத்தான் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையல் மாநில அரசுப் பணிகளையும் பிற மாநிலத்தவருக்குத் திறந்து விடுவது தமிழக மக்களுக்கு செய்யும் தீங்காகவே கருதப்படும்.

மகராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பார்களா? பீகார் மாநிலத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவருக்குத்தான் வேலை தரவேண்டும், அதற்காக சட்டம் இயற்றவேண்டும் என லாலுபிரசாத் யாதவ் போன்றவர்கள் கூறி வருகின்றனர், மும்பையில் நடைபெற்ற மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வை எழுதச் சென்ற பீகார் மாநிலத்தவரை சிவசேனா கட்சியினர் தாக்கியதை நாம் அறிவோம். இந்தச் சூழலில்  பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிப்பதால் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு அவர்களிடம் தேவையற்ற பதற்றத்தையும்தான் உருவாக்கும். இவற்றையெல்லாம்  உணர்ந்து இந்த முடிவை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :