Add1
logo
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் ||
முக்கிய செய்திகள்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி
 ................................................................
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, நவம்பர் 2017 (15:40 IST)
மாற்றம் செய்த நாள் :22, நவம்பர் 2017 (15:40 IST)

புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை அதிமுக அரசு கைவிடாவிட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆதரவுடன் அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் 70 மணல் குவாரிகளை புதிதாய் திறக்க அதிமுக அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்த 35-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை மணல் மாஃபியாக்கள் சூறையாடி, நிலத்தடி நீருக்குக் கேடு விளைவித்து வருவதை எதிர்த்து விவசாயிகளும், கிராம மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் உள்ள குவாரிகளில் பொதுப்பணித்துறையின் விதிமுறைகளுக்கு மாறாக மணல் படுபாதாளம் வரை தோண்டியெடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மணல் குவாரிகளுக்கு நீதிமன்றங்களும் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் கடந்த 5.5.2017 அன்று மணல் குவாரிகளில் தமிழக அரசே மணல் விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அரசு உருவாக்குவதாகக் கூறிய மணல் விற்பனை நிலையம் முழு வீச்சில் செயல்படாமல் வேண்டுமென்றே முடக்கப்பட்டு, செயற்கை மணல் பயன்படுத்துவதற்கும் போதிய ஊக்கமளிக்காமல், வெளிநாட்டு மணலையும் விற்கவிடாமல், ஒரு செயற்கையான விலை ஏற்றத்திற்கு வித்திட்டுள்ள அதிமுக அரசு இப்போது மணல் விலையை கட்டுப்படுத்த, 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்திருப்பது நிச்சயமாக தொலை நோக்குப் பார்வையில் மக்களின் சிரமங்களை போக்குவதற்காக எடுத்த நடவடிக்கை அல்ல என்பதும் இது முழுக்க முழுக்க சுத்த சுயநோக்குப் பார்வையில் எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு என்றும் தெளிவாகிறது.

தமிழகத்தைச் சிறிது சிறிதாகப் பாலைவனமாக்க முயற்சிக்கும் இந்த அறிவிப்பு, விவசாயத்திற்கான நீர் ஆதாரங்களை முழுவதும் சீர்குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் குறிப்பாக கட்டுமானத் தொழில்களை முடக்கும் விதத்தில் மணல் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கிய அதிமுக அரசு கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கிய கையோடு, 70 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை எடுத்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

புதிய மணல் குவாரிகளை திறப்பதில் திடீர் ஆர்வம் காட்டுவது முழுக்க முழுக்க முறைகேடுகளுக்கும் ஊழலுக்குமே வழிவகுக்கும். அதுமட்டுமின்றி சுற்றுப் புறச்சூழலுக்கும், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பேராபத்தாக முடியும். தமிழக நலன் கருதி புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும். அப்படி கைவிடத் தவறினால், புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படும் இடங்களில் ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் திமுக சார்பில் அறவழியில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :