Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
தமிழகம்
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
 ................................................................
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
 ................................................................
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்
 ................................................................
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!
 ................................................................
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!
 ................................................................
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
 ................................................................
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, நவம்பர் 2017 (12:55 IST)
மாற்றம் செய்த நாள் :22, நவம்பர் 2017 (13:21 IST)

“அடித்தே கொன்று விட்டது போலீஸ்..”
-இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்!

“எய்தவன் இருக்க அம்பை நோவதா?” என விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் – நடுசூரங்குடியைச் சேர்ந்த மக்கள், காவல்துறையினருக்கு எதிராக  கொந்தளித்து, சாலை மறியல் செய்தனர். 

விவகாரம் இதுதான் –

வேப்பிலைப்பட்டி அருகில், அர்ஜுனா ஆற்றில் மணலை அள்ளி லாரிகளில் கடத்துவது வாடிக்கையாக நடந்து வருகிறது. மாமூலான கவனிப்பால், பெரும்பாலான நேரங்களில்,  இந்த மணல் திருட்டை காக்கிகள் கண்டுகொள்வதில்லை. ஆனாலும், திருட்டு மணல் லாரி உரிமையாளர்களுக்கும், காக்கிகளுக்கும் அவ்வப்போது மனக்கசப்பு ஏற்படுவது உண்டு. இதுபோன்ற நேரங்களில், மணல் திருட்டுக்கு எதிராக கடுமையாக நடந்துகொள்வார்கள் காக்கிகள். 

திலகராஜ், ஞானசேகர், எஸ்.பி. ராஜராஜன்

வழக்கம்போலவே, தங்கள் லாரி முதலாளி கோவிந்தராஜுவுக்காக, நடு சூரங்குடியைச் சேர்ந்த திலகராஜ், ஞானசேகர், பாஸ்கரன், மாரிமுத்து உள்ளிட்ட 9 பேர், இரவில் மணல் அள்ளச் சென்றார்கள். அப்போது டார்ச் அடித்து, லத்திகளை வீசியிருக்கிறார்கள் திருட்டு மணல் தடுப்புப் பிரிவு காக்கிகள். மணல் அள்ளியவர்கள் ஆளுக்கொரு திசையில் ஓடிவிட, திலகராஜ், ஞானசேகர், மாரிமுத்து ஆகிய மூவரும் மாட்டிக்கொண்டனர். இவர்களில் மாரிமுத்து மட்டுமே கிராமத்துக்குத் திரும்பினார். 

திலகராஜுவும், ஞானசேகரும் என்ன ஆனார்கள் என்ற பதைபதைப்பில், திலகராஜுக்கு போன் செய்திருக்கிறார் அவரது அண்ணன் பாஸ்கரன்.  அந்த போன் காலை அட்டென்ட் பண்ணிய வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீஸ்காரர். “ரெண்டு பேரும் இங்கே ஸ்டேஷன்லதான் இருக்காங்க.” என்றிருக்கிறார். அடுத்த சில மணி நேரத்தில், “இருட்டில்  மணல் அள்ளியபோது, அந்த மணல் மூடி செத்துட்டாங்க. இருவரின் உடலும் கண்ணாயிரம் தோட்டத்தில் கிடக்கின்றன.” என்று காக்கிகள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. “இருவரது உடலிலும் காயங்கள் உள்ளன. வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து இரவில் கடுமையாக அடித்திருக்கிறார்கள். அப்போது மணல் திருட்டு தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் அய்யனார் கட்டையால் அடித்தே இருவரையும் கொன்றுவிட்டார். லாரி முதலாளியை விட்டுவிட்டு,  மணல் அள்ளும் கூலித்தொழிலாளர்களைத் தாக்கி உயிரைப் பறித்தது கொடுமையாக இருக்கிறது.   இவர்களின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று சொல்லி,   விருதுநகர் அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மணல் திருட்டு தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் அய்யனாரை தொடர்பு கொண்டபோது, அவரது போன் ஸ்விட்ச்-ஆப் நிலையில் இருந்தது. விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் “மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீஸ் விரட்டியது. தப்பி ஓடியபோது, கண்ணாயிரம் என்பவரின் தோட்டத்தில்    மின்வேலியில் சிக்கி, இருவரும் இறந்துவிட்டார்கள். இதை தடயவியல் துறை உறுதி செய்திருக்கிறது.” என்றார். 

இறந்தவர்களின் உறவினர்களோ, “போலீஸ் நினைத்தால்,  யாரை வேண்டுமானாலும் கொல்ல முடியும். கொலை செய்துவிட்டு,  அவர்கள் செய்த குற்றத்தை மறைப்பதற்கான ஆதாரங்களை உருவாக்க முடியும்.” என்கிறார்கள் நடுசூரங்குடி கிராம மக்கள்.  

-சி.என்.இராமகிருஷ்ணன்  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :