Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
தமிழகம்
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
 ................................................................
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
 ................................................................
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்
 ................................................................
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!
 ................................................................
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!
 ................................................................
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
 ................................................................
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (18:33 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (18:33 IST)


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் 2வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை நகர்மன்ற அரங்கில் நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழா தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளது. 24ம் தேதி காலை 10 மணிக்கு துவக்க விழா நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்களுக்கான நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 9 மணிவரை பிரபலமான எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர். புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் பொதுமக்கள் அனைவரும்  பங்கேற்கலாம்.

துவக்கவிழா

துவக்கவிழா நவம்பர் 24ம் தேதி காலை 10மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு வரவேற்புக்குழுத் தலைவர் கவிஞர். தங்கம் மூர்த்தி தலைமை தாங்குகிறார். வரவேற்புக்குழு செயலாளர் அ.மணவாளன் வரவேற்புரையாற்றுகிறார். புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்து சிறப்புரையாற்ற மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சி.விஜயபாஸ்கர் அவர்கள் இசைந்துள்ளார். மாணவர்களின் புத்தக ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் இ.ஆ.ப அவர்கள் தொடங்கிவைத்து கருத்துரையாற்றுகிறார். காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு எஸ்.செல்வராஜ்  இ.கா.ப அவர்கள் முதல் விற்பனையை துவக்கிவைத்து பேசுகிறார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் திருமிகு பி.கே.வைரமுத்து அவர்கள் முதல் விற்பனையைப் பெற்றுக்கொள்கிறார். முதன்மைக் கல்வி அலுவலர் திரு செந்திவேல்முருகன், மாநிலச்செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சிறப்பு பேச்சாளர்கள்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் ச.தமிழ்செல்வன், நெல்லை சு.முத்து,விஞ்ஞானி டி.வி.வெங்கடேஷ்வரன், கவிஞர் நந்தலாலா,பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், பத்திரிக்கையாளர் மதுக்கூர் ராமலிங்கம், பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தம், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, கவிஞர் மனுஷி, புதுகை பூபாளம் கலைக்குழுவைச் சேர்ந்த  பிரகதீஷ், செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

மாணவர்களுக்கான நிகழ்வுகள்

தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஒரிகாமி, மந்திரமா தந்திரமா, அறிவியல் விளையாட்டுக்கள்,அறிவியல் உரைகள்,கற்றலில் புதுமை ஆகிய  நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.மதுரைக் கல்லூரி பேரா தினகரன் அறிவியல் இயக்கத்தின் கல்வியாளர்கள்  கருத்தாளர்களாக பங்கேற்க உள்ளனர்.

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா விருதுகள்

இந்த ஆண்டு முதல் புத்தகத்திருவிழாவில்  சிறந்த நூல்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்வு 1.12.2017 அன்று நடைபெற உள்ளது. அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா பங்கேற்று விருது வழங்குகிறார். சிறந்த சிறுகதை, அறிவியல் கதைகள், நாவல், கவிதை என 12 தலைப்புகளில் விருது வழங்கப்படுகிறது.

பதிப்பகங்கள்

பாரதி புத்தகாலயம்,அறிவியல் வெளியீடு, ஆனந்த விகடன், நக்கீரன், நேஷனல் புக் டிரஸ்ட், அன்னம் அகரம், சிவகுரு, சாகித்ய அகடமி, தமிழ் ஹிந்து,டவ் மல்டி மீடியா, முன்னேற்ற பதிப்பகம், நியூ செஞ்சூரி பதிப்பகம், மேன்மை, உட்பட   40 பதிப்பகத்தார் பங்கேற்க உள்ளனர்.
      
நிறைவு விழா

நிறைவு விழாவில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்விச் செயலாளர்  திருமிகு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி  எஸ்.இங்கர்சால் ,பள்ளிக் கல்வி இணை இயக்குநர் திரு பொ.பொன்னையா அவர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் அ.அமலராஜன் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :