Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
தமிழகம்
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
 ................................................................
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
 ................................................................
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்
 ................................................................
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!
 ................................................................
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!
 ................................................................
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
 ................................................................
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (18:17 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (18:23 IST)


நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் விசாரணை நடத்தவேண்டும் என்று கீரமங்கலத்த்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.படத்திறப்பு:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஒரு படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் செங்கோடன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் திருஞானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்ள வந்த முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அக்கரை இல்லாத அரசு: 
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது பெயரால் நடைபெறுகிற ஆட்சி மக்கள் மீது சிறிதும் அக்கரை இல்லாத ஆட்சியாக செயல்படுகிறது. மேலும், மாநில உரிமைகள் பறிபோகிறதை பற்றிக்கூட கவலைப்படாத தங்கள் நலனில் மட்டுமே அக்கரை உள்ள ஆட்சியாக உள்ளது. அதனால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு அக்டோபர் 27ந் தேதி பருவ மழை தொடங்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு வரத்து வாய்க்கால்களை சீரமைக்காமல் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை தண்ணீர் வீணாகிவிட்டது. 

அதனால், தொடர்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்து புதிய விவசாய கடன்களை வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதற்காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்கு மாறாக அனைத்து துறையிலும் ஊழல் அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ. 3 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

பதவி விலகவேண்டும்:

மத்திய அரசின் பாராமுக நடவடிக்கையை எதிர்ப்பதற்கு, மாநில உரிமைகளைக் காப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காத எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பதவி விலகவேண்டும். இந்தப் பதவி விலகலை வலியுறுத்தி இயக்கம் நடத்த உள்ளோம்.

ஆளுநர் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து ஆய்வு நடத்துவது என்பது ஜனநாயக விரோத செயல். மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வரை இது தவறு இல்லை. நல்லதுக்காக செய்கிறார் என்று பேசி வருவது நல்லதல்ல. எதையோ எதிர்பார்த்து இப்படி பேசி வருவதால் மாநில சுயாட்சி பறிபோக வாய்ப்புள்ளது. புதுக்சேரியில் துணை நிலை ஆளுநர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்படவிடாமல் செய்கிறார். அதை காங்கிரஸ் முதல்வர் எதிர்த்து போராடி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். இதற்காக மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உள்ளாட்சி அமைப்பு அவசியம். தேர்தலை நடத்த தமிழக அரசு சாக்குபோக்கு சொல்லாமல் தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.விடுதலை செய்யவேண்டும்:

ராஜிவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 27 பேரையும் விடுதலை செய்யலாம் என்று இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதியே காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, மற்றும் ராகுல்காந்திக்கு நீங்கள் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று வேண்டுகோல் கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்திலேயே ஆயுள்தண்டனை பெற்ற பலர் 6, 7 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல அவர்களையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பொறுப்பற்ற மத்திய அமைச்சர்:

நீண்டகாலமாக பணி செய்யும் செவிலியர்கள் பணி நிரந்தரம் இன்றி பணியாற்றிக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் தொழில், உயிர், உடமைக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலையில் இந்திய கடலோர காவல்படை மீனவர்கள் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். கடலோர காவல் படை அதிகாரிகள் ஆறுதல் சொல்லி மன்னிப்புக்கேட்டு சென்றுள்ள நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடலோர காவல்படை சுடவில்லை. இந்த குண்டு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்று பொறுப்பற்ற முறையில் கூறியது கண்டனத்திற்குறியது. மேலும், நிர்மலா சீத்தாராமன் எப்போதும் பொறுப்பாக பேசியது கிடையாது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய சட்டமன்றத்தில் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பபட்டபோது, நிர்மலா சீத்தாராமன் அந்த கோப்பு எங்கிருக்கிறது என்றே எங்களுக்கு தெரியாது என்று மிகுந்த அலட்சியமாக பதில் சொன்னார். அதேபோல அவசரச் சட்டம் கொண்டுவந்தால் நீட் விலக்கு அளிப்போம் என்று சொன்னார். பிறகு ஏமாற்றினார்கள். அதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு பெரும் பங்கு உண்டு. 

விசாரணை நடத்தவேண்டும்:

வருமான வரி கட்டாமல் சம்பாதித்தவர்களிடம் சோதனை மேற்கொள்வதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால், அரசியல் பழிவாங்களுக்காக மத்திய அரசு வருமான வரித்துறையை பயன்படுத்துவது கண்டனத்திற்குறியது. ஒரு குடும்பத்தை மட்டும் குறிவைத்து சோதனை நடத்தப்பட்ட நிலையில் இறுதியில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டிற்குள்ளும் நுழைந்துவிட்டார்கள். அங்கே என்ன இருந்தது என்பது சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோருக்குத்தான் தெரியும். சசிகலா சிறையில் உள்ளதால் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் விசாரணை நடத்தினால் அங்கு என்ன இருந்தது என்று தெரிய வரும். இவ்வாறு பேட்டியின்போது கூறினார். 

பேட்டியில் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் செங்கோடன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் திருஞானம், கீரமங்கலம் நகரச் செயலாளர் தமிழ்மாறன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

- இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : PINAKA Date :11/20/2017 5:09:16 PM
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசவில்லை என்பது நுனிப்புல் மேயும் பேச்சு..! நிர்மலா சீத்தாராமன்..., தான்.., வாங்கும் சம்பளத்திற்கும்.., எடுத்துக்கொண்ட சத்திய பிரமானத்திற்கும்......., சற்றும் பொருத்தமில்லாமல், அவலட்சணமாக...... அசிங்கமாக.... சைக்கோத்தனமாக நடந்துக்கொள்கிறார்??? (ஓட்டலில் உண்போரை பார்த்துவிட்டு வந்துவிட்டால்.., ஜிஎஸ்டி கட்டவேண்டியது இல்லையாம்??? பாதுகாப்பு அமைச்சர் நீர்மூழ்கி கப்பல்களில் ரப்பர் பொம்மைகளை நோட்டம் விட்டு இருப்பார் போல.....???)