Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (17:42 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (17:42 IST)


யோகி பேரணியில் தேசியக் கொடிக்கு மேல் பறந்த பா.ஜ.க கொடி!

யோகி ஆதித்யநாத் கலந்துகொண்ட பேரணியில் தேசியக்கொடிக்கு மேலாக பா.ஜ.க கட்சிக் கொடி பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பா.ஜ.க தலைமையிலான பேரணி ஒன்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் முதல்வர் யோகி கலந்துகொண்டு உரையாற்றினார். யோகி அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்பாக, கட்டிடத்தில் பறந்துகொண்டிருந்த தேசியக்கொடிக்கு மேல், பா.ஜ.க-வின் கட்சிக் கொடி ஏற்றப்பட்டிருந்துள்ளது. இதனை அங்கு கூடியிருந்தவர்களும், பத்திரிகையாளர்களும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறித்தியதை அடுத்து அவசர அவசரமாக பா.ஜ.க கொடி இறக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கு முன்பாகவே சர்ச்சைக்குரிய இந்த நிகழ்வினை பலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டனர். தற்போது வரை இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

தேசிய மரியாதை பாதுகாப்புச் சட்டம் பிரிவு 2-ல் தேசியக் கொடிக்கு மேலாகவோ அல்லது பக்கவாட்டிலோ மற்ற கொடிகள் பறக்கக்கூடாது; அப்படி செய்வது தேசவிரோதச் செயல் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : தமிழன் Country : Australia Date :11/20/2017 12:02:41 AM
உண்மையான தேச விரோதிகள் எல்லாம் அவர்களேதான் கடந்த காலங்களில் தேசியக் கோடியை அவமதித்ததும் தேசியகீதத்திற்கு எதிராக பேசியதும்,இவர்கள் தான். இப்போது ,சூழ்நிலைக்கேற்ப பொய் பேசுவதும் , பித்தலாட்ட- நாடக- அரசியல் - சூழ்ச்சி செய்வதெல்லாம் அவர்களுடைய பரம்பரியத்தத்துவங்களாகும் .
Name : rajagopalan. Country : India Date :11/19/2017 7:02:18 PM
முதல்வர் யோகி கலந்துகொண்டு உரையாற்றிய, உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பா.ஜ.க தலைமையிலான பேரணி செல்லும் பாதையில்.., கட்டிடத்தில் பறந்துகொண்டிருந்த தேசியக்கொடிக்கு மேல், பா.ஜ.க-வின் கட்சிக் கொடி ஏற்றப்பட்டிருக்க.., அவசர அவசரமாக பா.ஜ.க கொடியை இறக்கிய கயவனை.., கைகளை வெட்டி.., நாடு கடத்தவேண்டும்??? பா.ஜ.க யோகியா கொக்கா???