Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
முக்கிய செய்திகள்
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார்
 ................................................................
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி
 ................................................................
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (16:56 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (16:57 IST)

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும்! - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இன்று சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் ஊழல், லஞ்சம் பெருகி உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.3,000 கோடிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோடம்பாக்கத்தில் இருந்து சேத்துப்பட்டு வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு ஒரு மேம்பாலம், உஸ்மான் ரோடு மேம்பாலம், தி.நகர், மயிலாப்பூர், எழும்பூர், பாரிமுனை ஆகிய இடங்களில் பலஅடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் என பல கட்டுமானப்பணிகள் நடத்தப்படும் என அறிவித்தார்கள்.

ஆனால், ஒரு திட்டம் கூட நடந்ததாக தெரியவில்லை. சென்னை மாநகராட்சி பல ஆயிரம் கோடி கடனில் மூழ்கி கிடக்கிறது. சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளுக்கும் இதே நிலைதான் உள்ளது.

ஜெ. முதல்வராக இருந்தபோது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதற்கும் நிதி ஒதுக்கவேயில்லை. அதற்காக மட்டும் தற்போதைய சூழலில் ரூ.1.50 லட்சம் லோடி செலவாகும். இந்த மொத்த நிதியையும் திரட்டவே 10 ஆண்டுகள் ஆகிவிடும். 

போக்குவரத்துக் கழக சொத்துகள் ரூ.11 ஆயிரம் கோடிக்கு அடமானத்தில் உள்ளது. தமிழக அரசு ரூ.3.14 லட்சம் கோடி கடனில் உள்ளது. இதற்கான வட்டியாக மட்டும் ஆண்டொன்றுக்கு ரூ. 25 ஆயிரத்து 982 கோடி செலுத்தப்படுகிறது.

இந்தக் கடன் வளர்ச்சிக்கு உதவாது. தமிழக அரசு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமான எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். பா.ம.க தலைமையிலான அரசு ஆட்சியமைக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு பேசியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Maatram Munnetram Country : India Date :11/20/2017 11:14:21 AM
திரு Pinaka அவர்களே பலம் ஒரு நாள் பாலில் விழும் என்று சொன்னது நாங்க இல்ல ! கூட்டணி குறித்து கூப்பாடு போடும் தக தக என்று எரியும் இதே சூரியன் தான் .பலம் அரியணை ஏறியவுடன் குடிசை எல்லாம் குடிசையாகவே இருக்க வேண்டும் மச்சு வீடாக ஆக கூடாது என்று கொளுத்திவிடும் கூட்டமெல்லாம் ஓடிப்போகும் அப்போது குச்சி வீடும் ஏறியது வைக்கோல் போறும் ஏறியது .கயிறு திருப்பத்தை விட்டுவிட்டு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வேலையே செய்யுங்க ! வாய் மட்டும் இருந்தால் போதாது வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்த தெரியாத செயல் தலைமை என்று பெயரில் மட்டும் இருந்தால் போதாது .
Name : PINAKA Country : India Date :11/19/2017 8:18:09 PM
பா.ம.க தலைமையிலான அரசு ஆட்சியமைக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்த........., இந்த "பழம்" மட்டும் எப்படி அனைத்தையும் சீர் செய்துவிடும் என எவரேனும் கேட்கலாம்..!!! குட்.. கொஸ்டியன்..!!! ரொம்ப சிம்பிள்.....??? அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளித்தால்....., எதிர்க்கட்சி தொல்லை இருக்காது..!!!, அதனை சாதகமாக வைத்துக்கொண்டு.., தமிழகத்தில் உள்ள அனைத்து அற்ப குடிசைவாசிகளையும் குடிசையோடு கொளுத்தி களைந்து விட்டால்.., அரசால் அவர்களுக்கு ஆகும் செலவினங்கள் குறையும்.., இலவசங்கள் குறையும்.., எருவும் கிடைக்கும்?!?!?! அதன் பிறகு தமிழகம் தக தகா என சுடர்விடும்??? அவ்வளவு தான்.......!?!?!?! சிபிஐ துரத்தும்... சின்ன அய்யா'வையும் காப்பாற்றிவிடலாம்..,!!! மோடி இருக்க பயமேன்???