Add1
logo
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார் || அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி : விஷம் குடித்த ரஜினி ரசிகர்! || அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, நவம்பர் 2017 (10:26 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2017 (10:26 IST)


‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் இல்லை!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

பிரதமர் மோடி மற்றவர்கள் நினைப்பது மாதிரி முரட்டுத்தனமானவர் அல்ல என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதியுள்ள கவிதைத் தொகுப்பு ‘எ ஜர்னி’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. உலகத்தலைவர்கள் பலரும் தங்களது சுயசரிதையை எழுதி வருகின்றனர். அதேபோல், மோடியின் சுயசரிதையும் வெளிவந்துள்ளது. இந்நிலையில், அவர் எழுதியுள்ள கவிதைத் தொகுப்பான ‘எ ஜர்னி’ கவிதைத் தொகுப்பை ராஜலெட்சுமி சீனிவாசன் தமிழில் ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் வைத்து நடைபெற்றது. 

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், புத்தகத்தின் முதல் பிரதியை கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், ‘மோடி மற்றவர்கள் நினைப்பது போல் முரட்டுத்தனமாவர் அல்ல. அவர் ஒரு நல்ல உழைப்பாளி. தேவையான நேரத்தில் சீர்திருத்தங்களைச் செய்வார். மக்கள் தன் மேல் இருக்கும் குறைகளைக் குறித்துக் கூறும்போது, அதை உள்வாங்கி தவறுகளைத் திருத்திக்கொண்டு ஆட்சி நடத்துபவர்’ என்றார். புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, ‘மோடி அவர்கள் கலைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது அரசியல் நாகரிகத்தைக் காட்டுகிறது’ என்றார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : PINAKA Country : India Date :11/19/2017 10:51:00 AM
‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் இல்லை!’ என, எந்தமாதிரியான கலையில் என்று விளக்கமாக சொல்லவில்லை......., இந்த பாதுகாப்பு கலையில் காலடி வைத்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள்??? டெல்லியில் விவசாயிகள் மாதக்கணக்கில் சாலையில் போராட, கண்டுக்கொள்ளாத மோடி எல்லாம்.., ஒரு மனிதரா??? கடவுளுக்கே வெளிச்சம்???