Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
தமிழகம்
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
 ................................................................
ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி
 ................................................................
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல்
 ................................................................
டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை!
 ................................................................
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டடம்
 ................................................................
சமூக நோக்கத்தோடு செயல்படும் அதிகாரிகளுக்கு விருது
 ................................................................
கோவையில் அனுமன் ஜெயந்தி விழா
 ................................................................
கொருக்குப்பேட்டையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்
 ................................................................
ராகுல் காந்திக்கு அன்புமணி வாழ்த்து!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் புகார்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
 ................................................................
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
 ................................................................
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, நவம்பர் 2017 (11:16 IST)
மாற்றம் செய்த நாள் :18, நவம்பர் 2017 (11:16 IST)

அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்

ஆட்சியாளர்களின் புகழ் பாடுவதற்காக நடத்தப்படவிருக்கும் அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழாவுக்காக தஞ்சாவூரில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விளையாட்டுத் திடலை சீரழிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சாவூரில் வரும் 29&ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான வாகன நிறுத்தம் அமைப்பதற்காக அங்குள்ள மன்னர் சரபோஜிக் கல்லூரியின் விளையாட்டுத் திடல் சீரழிக்கப் படுகிறது. ஆட்சியாளர்களின் புகழ் பாடுவதற்காக நடத்தப்படவிருக்கும் அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழாவுக்காக அரசுக் கல்லூரியின் விளையாட்டுத் திடலை சீரழிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் பழைமையான, பெருமை மிக்க கல்லூரிகளில் சரபோஜி கல்லூரியும் ஒன்றாகும். அதன் விளையாட்டுத் திடல் மிகவும் பெரியது என்பதால் அதில் அனைத்து வகையான விளையாட்டுகளையும் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் அந்த விளையாட்டுத் திடலை பயன்படுத்தி வருகின்றனர். இப்போது வாகன நிறுத்துமிடம்  அமைப்பதற்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. விளையாட்டுத் திடலில் குறுக்கும் நெடுக்குமாக சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிமிட்டி கலந்த கிராவல் மண் கொட்டப்பட்டு அதன் பெரும்பகுதி கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிந்த பின்னர், லட்சக்கணக்கில் செலவு செய்தாலும் கூட மன்னர் சரபோஜி கல்லூரியின் விளையாட்டுத் திடலை அதன் பழைய பொலிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. விளையாடுத்திடல் சேதப்படுத்தப்படுவதைக் கண்டித்து  மாணவர்கள் போராட்டம் நடத்தினாலும், அதை கண்டு கொள்ளாமல் திடலில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதற்கு முன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த வாகனங்களை நிறுத்துவதற்காக இதே விளையாட்டுத் திடலை  ஒட்டியிருந்த சுற்றுச் சுவர் 3 இடங்களில் இடிக்கப்பட்டது. அப்போது வாகனங்கள் நிறுத்தப்பட்டதால்  சேதமடைந்த விளையாட்டுத் திடல் நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் கிடந்து, ஒரு கட்டத்தில் கல்லூரி நிர்வாகமும், மாணவர்களும் இணைந்து சீரமைத்தனர். இப்போது அதைவிட பலமடங்கு மோசமாக விளையாட்டுத் திடல் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் சொந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் கல்வி நிறுவனங்களை  சேதப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 23 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது.  இவ்விழாக்களால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. மாறாக, ஏராளமான பாதிப்புகள் தான் ஏற்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற விழாக்களுக்கு பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போதிலும், அதை மதிக்காத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த மாவட்டமான சேலத்திலேயே ஆயிரக்கணக்கான மாணவர்களை அழைத்து வரச் செய்தார். பள்ளி நிர்வாகங்களை மிரட்டி அவற்றின் வாகனங்களை கட்டாயப்படுத்தி வாங்கி, பொதுமக்களை அழைத்து வர பயன்படுத்தினார்கள். உயிருடன் உள்ள தலைவர்களின் படத்துடன் கட்&அவுட்டுகள், பதாகைகள் வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் பிறபித்த ஆணையை மீறி திருச்சி மாநாட்டிற்காக ஆயிரக்கணக்கான கட்&அவுட்டுகள் வைக்கப்பட்டன.  

இப்படி சட்டத்தையும் மதிக்காமல், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் மதிக்காமல் எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு செயல்படுவது, அந்த அரசு அழிவை நோக்கி செல்வதையே காட்டுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை மதிக்காமல் கல்லூரிகளின் விளையாட்டுத் திடல்களை சீரழிப்பது, மாணவர்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. எனவே, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக சீரழிக்கப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி  கல்லூரி விளையாட்டுத் திடலை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Vanniya kula kshathriyan Country : India Date :11/18/2017 11:23:57 AM
அய்யா இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த எடப்பாடி அரசு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட இருக்காங்க இருங்க ! இப்ப தான் ஆரம்பிச்சி இருக்கு இன்னும் பாருங்க தமிழக பாஜக அதிமுகவுக்கு காவடி எடுத்துகொண்டாடிய காலம் முடிவுக்கு வந்தது பொன்னார் அவர்கள் தன திருவாய் மலர்ந்து இப்போது கொஞ்சம் கோவம் காட்டி இருக்கார் .எரியரதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.மத்திய பாஜக இந்த ஜோக்கர்களை தாங்கி பிடிப்பதை நிறுத்திக்கொண்டாள் இந்த ஜோக்கர்களின் வண்டவாளம் நிச்சயம் தண்டவாளம் ஏறும் காலம் வெகு தூரத்தில் இல்லை .