Add1
logo
உண்மையையே படுகொலை செய்யும் நிர்மலா சீதாராமன்கள்! வேல்முருகன் கண்டனம் || தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது - மு.க.ஸ்டாலின் || நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் ||
தமிழகம்
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (23:35 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (23:35 IST)


மு.க.ஸ்டாலின் கடிதம்: 
சுஷ்மா சுவராஜிடம் நேரில் வழங்கிய
 டி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின்  இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்களுடைய பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடிதத்தை கழக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., இன்று (14-11-2017) மாலை 6.30 மணி அளவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினார்.

அக்கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:-
மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் அவர்களுக்கு,  வணக்கம்,
 
இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய, திரு.சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்களுடைய பெயரை, அரசு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் இருந்து நீக்கி வரும் இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இலங்கை அரசின் இந்த கண்டனத்துக்குரிய நடவடிக்கைகள் மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு இந்தியத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 

பல ஆண்டுகளாக இந்தியத் தமிழர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், அவர்களுடைய பங்களிப்பையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்களின் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து நீக்கியிருக்கிறது.

 மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், கண்ணியத்துக்காகவும் திரு.சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்கள் பாடுபட்டார் என்ற உண்மையை உணர்ந்திருப்பீர்கள். திரு.சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கவாதியாக குரல் கொடுத்தார், இலங்கை அரசியலமைப்புச் சட்டத் திருத்தக்  குழுவின் தேர்வுக் குழு உறுப்பினராகவும் இருந்ததோடு, இலங்கையின் அதிபர்கள் பலரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி இந்தியத் தமிழர்களின் நலனுக்காக பங்காற்றியிருக்கிறார்.

என்னதான் இலங்கையை, இந்தியா நட்பு நாடாக கருதினாலும், அதனுடைய வளர்ச்சிக்கு பொருளாதார உதவிகளை செய்தாலும், இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு மாறாகவே இலங்கை செயல்பட்டு வருகிறது என்பதை ஏமாற்றத்துடன் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இலங்கை அரசு ஒருபுறம் ஈழத் தமிழர்களுக்கு உரிய, அவர் ஏற்றுக்  கொள்ளும்படியான அதிகாரங்களை பகிர்ந்தளிக்காமலும், மறுபுறம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களை விசாரித்து தண்டிக்க நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் சுதந்திரமான விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மேற்கொள்ளுவதற்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறது. தற்போது, மலையகத் தமிழர்களின் அன்புக்குரியத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்களின் பெயரை அகற்றி, அவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இந்த தொடர் நடவடிக்கைகள், ஒரு நட்பு நாட்டின் சமரசமிக்க, பொறுப்புமிக்க எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை.

எனவே, சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்களின் பெயரை நீக்கும் உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதோடு, அந்த பெருமைமிக்கத் தலைவரின் பெயருக்கும் புகழுக்கும் எந்தவகையிலும் களங்கம் ஏற்படாமலும், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வகையில் அவருடைய பெயரை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தங்களை கேட்டுக் கொள்கிறேன்.’’



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :