Add1
logo
உண்மையையே படுகொலை செய்யும் நிர்மலா சீதாராமன்கள்! வேல்முருகன் கண்டனம் || தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது - மு.க.ஸ்டாலின் || நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் ||
தமிழகம்
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (18:49 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (20:18 IST)


தமிழரின் தலைவருக்கு இப்படிப்பட்ட கொடுமை புரிவதா?
 20ம் தேதி சென்னையில் கி. வீரமணி கண்டன ஆர்ப்பாட்டம்



இலங்கைத் தீவில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற சவுமிய தொண்டைமான் பெயரில் இருந்த நிறுவனங்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. இந்தத் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

’’இலங்கையில் தற்போது ஆளும் சிறீசேனா தலைமையிலான அரசு தமிழர்கள் - ஈழத் தமிழர்கள் - மலையகத் தமிழர்கள் உட்பட பலரும் வாக்களித்ததால்தான், அவர் ராஜபக்சேயைத் தோற்கடித்துப் பதவிக்கு வர முடிந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
ஆனால் இந்த அரசு வந்தும் தமிழர்களின் நியாயமான மனித உரிமைகள் இன்னும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

அய்.நா.வின் மனித உரிமைக் குழுவின் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கை

போர்க் காலத்தில் நிகழ்ந்த அதீதக் கொடுமைகளை விசாரிக்க அய்.நா.வின் மனித உரிமைக் குழுவின் நடவடிக்கைகள் ஏதோ ஒப்புக்கு, உலகத்தாரின் கண்களில் மண்ணைத் தூவுவது போல, அக்குழுவின் பணியையே - விசாரணையையே - நீர்த்துப் போகுமாறு செய்து விட்டது உலகறிந்த உண்மை. தமிழர்கள் வாழும் பகுதிகளைச் சுற்றி நிற்கும் இராணுவம் இன்னமும் திரும்ப அழைக்கப்படவில்லை. அவர்களின் நிலங்களில், காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை சட்ட பூர்வமாக, அரசு செய்து வருகிறது.

தமிழர்களின் பண்பாட்டு  அடையாளங்களை அழிப்பதா?

யாழ்ப்பாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, தமிழர் (திரு. விக்னேசுவரன்) ஒருவர் தலைமையில் உள்ளதால், அது  அதிகாரங்கள்  வழங்கப்படாத அரசாக - ஏதோ பெயரளவுக்கு உள்ள ஓர் அரசாகவே நீடிக்கும் நிலை உள்ளது!

இதோடு தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள கிராமங்கள், ஊர்களில் உள்ள தமிழ்ப் பெயர்களை மாற்றி சிங்களப் பெயர்களையே சூட்டிடும் கொடுமை, இராஜபக்சே ஆட்சிக் காலத்தில் துவங்கியது  - இன்னமும் தொடருகிறது.

தமிழர், தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் இவற்றின் அடையாளச் சுவடுகளையே அழித்து அடுத்து வரும் தலைமுறைகளுக்குத் தமிழர்களின் பங்களிப்பு, உரிமைகள், பாரம்பரிய பண்பாட்டுத் தடங்கள் அழிக்கப்பட வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்த அந்நாட்டு அரசே செய்து வருகிறது.

மேனாள் அமைச்சர் சவுமிய தொண்டைமான் பெயர் நீக்கம்

அண்மையில் நெஞ்சு கொதிக்கும் ஒரு செய்தி. அரசு நிறுவனங்களுக்குச் சூட்டப் பெற்று பல்லாண்டுகளாக இருந்த தமிழர் முன்னாள் அமைச்சர் திரு. சவுமியமூர்த்தி தொண்டைமான் அவர்களின் பெயரை நீக்கி விட்டு வேறு பெயர்களை வைப்பது மேலே கூறியதற்கு ஆதாரமான அண்மைக்கால அரசின் நடவடிக்கை.
இதை இந்திய அரசு வேடிக்கைப் பார்த்து இருப்பதா? பெரு மதிப்பிற்குரிய தொண்டைமான் அவர்கள் மலையகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக வாழ்நாள் இறுதிவரை (30.8.1913 - முதல் 30.10.1999 வரை) இருந்த தலை சிறந்த அரசியல் ஞானி - தொண்டறச் செம்மல்.

இலங்கையின் (1947) முதல் நாடாளுமன்றத்தில்  தொண்டைமான்  தலைமையில்  இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள், ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது வரலாறு அல்லவா?
1948இல் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட பின், ஏறத்தாழ 40 ஆண்டுகள் தொடர் போராட்டத்தினை நடத்தி மீண்டும் 1987இல் மலையகத் தமிழர்களுக்கு குடிஉரிமை கிடைக்க அரும்பாடுபட்ட வரலாறு படைத்தவர்  சவுமிய தொண்டைமான்.

நாடாளுமன்ற வளாகத்திலும், தொண்டைமான் சிலை உள்ளதே!
அவரது அளப்பரிய தொண்டினைப் பாராட்டி - வருங்கால சந்ததியினரும் உணர வேண்டி தொண்டைமான் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.  அங்கே நிறுவப்பட்ட ஒரே தமிழன் சிலை அய்யா தொண்டைமானின் சிலைதான்.

தொண்டைமான் தொழிற் பயிற்சி மய்யம், தொண்டைமான் மைதானம் தொண்டைமான் கலாச்சார மன்றம் என்று அவரது பெயர்  சூட்டப் பெற்று, பல ஆண்டுகளாக புழக்கத்திலிருந்த அந்த வரலாற்றுச் சின்னங்களின் பெயர்களை இப்போதுள்ள இலங்கை அரசு  தொழிற் பயிற்சி மய்யம்,  மைதானம், கலாச்சார மன்றம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்!
என்னே கொடுமை! தமிழரின் தலைவருக்கு இப்படிப்பட்ட கொடுமை புரிவதா?

20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

நமது இந்திய வெளியுறவுத் துறையும், பிரதமரும் இதில் தலையிட்டு மீண்டும் அப்பெயர்கள் இடம் பெற முழு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

இதனை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன் பிடித்தலிலும், அடிக்கடி கைதுகள், படகுகள் பறிமுதல் என்பதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஓர் ஆர்ப்பாட்டத்தை 20.11.2017 அன்று காலை 11 மணியளவில் சென்னையில் திராவிடர் கழகம் நடத்துகிறது.  திராவிடர் கழகத்தினரும், ஒத்த கருத்துடையோரும், மின்னஞ்சல்களை பிரதமருக்கும், வெளியுறவுத் துறைக்கும் குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.’’


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :