Add1
logo
உண்மையையே படுகொலை செய்யும் நிர்மலா சீதாராமன்கள்! வேல்முருகன் கண்டனம் || தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது - மு.க.ஸ்டாலின் || நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் ||
தமிழகம்
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (18:24 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (20:20 IST)


டாஸ்மாக் கடைகளை மேலும் திறக்கும் 
விபரீத விளையாட்டு வேண்டாம் !
அதிமுக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கைதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை:
 
“மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்”, என 2016 சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்து விட்டு, பல வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டதைப் போல, இன்று புதிதாக மதுக்கடைகளைத் திறப்பதற்காக, உச்சநீதிமன்றம் வரை ‘குதிரை பேர’ அரசே ஓடோடிச் சென்று வாதிட்டுக் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. “சில்லரை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும்”, “கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்”, “பின்னர் சில்லரை மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும்”, “குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி இருப்போரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும்”, என்றெல்லாம் “மோசடி தேர்தல் வாக்குறுதிகளை” அளித்து தமிழக மக்களை நம்பவைத்து ஏமாற்றியிருக்கின்ற ‘குதிரை பேர’ அரசின் கொடூர மனப்பான்மைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
“பூரண மதுவிலக்கு” என்று தம்பட்டம் அடித்து, குதித்துக் கொண்டிருந்த ‘குதிரை பேர’ அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளுக்கு எதிராக அளித்த தீர்ப்பை முழுமனதுடன் ஏற்று, தமிழக பெண்களின் எதிர்பார்ப்பையும் நிம்மதியையும் கருதி, அனைத்து பகுதிகளிலுமே டாஸ்மாக் கடைகளை மூட முன் வந்திருக்க வேண்டும். இதனை நான் அப்போதே அறிக்கை மூலம் வலியுறுத்தினேன்.
 
ஆனால், அதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவிழக்க வைக்கும் விதத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிகளின் சாலைகளாக வகைமாற்றம் செய்து, மீண்டும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முயற்சிப்பது, சமூகத் தீமைக்கும் - பெண்குலத்தின் போராட்டத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்த அரசின் விபரீத மனநிலையைப் பிரதிபலிக்கிறது. பூரண மதுவிலக்கு என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, “கடைகளின் எண்ணிக்கையை” அதிகரிக்கும் குரோத நடவடிக்கையில் ‘குதிரை பேர’ அதிமுக அரசு ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது.
 
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் விபத்துகளால் பல குடும்பங்கள் தங்கள் எதிர்காலத்தை தொலைத்து விட்டுத் தெருவில் நிற்கின்றன. இந்தக் கடைகளால் தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலையும் ஆபத்தையும் சமாளிக்க முடியாமல் தாய்மார்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில்தான் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து தாய்மார்கள் தன்னெழுச்சியாகக் கடும்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 
பெண்கள் என்றும் பாராமல் இந்த ‘குதிரை பேர’ அரசு காவல்துறையை ஏவி, காது கேட்காத அளவிற்கு அறைந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டாலும், தாய்மார்களின் போராட்டம் தணியவில்லை. தங்கள் பகுதியில் அமைதியும், நிம்மதியும் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்று வெகுண்டெழுந்து கிராம மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் என எதுபற்றியும் துளியும் கவலைப்படாமல், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை எப்படியும் உயர்த்திவிடுவது குறுகிய மனப்பான்மையில், வருமானம் ஒன்றையே கவனத்தில் வைத்து இந்த அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
 
குடிமக்களின் துயரத்தையும், அவர்களின் உடல்நலத்திற்கு விளைவிக்கும் கேடுகளையும் புரிந்து கொள்ள மறுத்து இந்த அதிமுக அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. “குடிப்பழக்கத்தற்கு உள்ளாகி இருப்போரை மீட்போம்”, என்று வாக்குறுதி அளித்து, வஞ்சித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, இன்றைக்கு குடிப்பழக்கத்தை ஊக்குவித்து அதிகரித்திடும் அபாயப் பாதையில் ஆர்வத்துடன் பயணிக்கும் இந்த ‘குதிரை பேர’ அரசை மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். எண்ணற்ற குடும்பங்களை இன்னல் சுழலில் தள்ளிவிடுவதற்காக, ‘எங்கு காணினும் டாஸ்மாக் கடைகள்’, என்ற மதிமயக்க நிலையை ஏற்படுத்தப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மக்கள் விரோத அரசுக்கு கடும் கண்டனத்தை மீண்டும் தெரிவித்து, தான் அடித்த மூப்பில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவை ‘குதிரை பேர’ அரசு உடனடியாகக் கைவிட்டு, ஏழை - எளிய நடுத்தரக் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Paatali Country : India Date :11/15/2017 9:00:17 AM
அய்யா செயல் தலைவர் உங்க மது ஆலைகளை முதலில் மூடுங்கள் பிறகு எச்சரிக்கை விடலாம் .!