Add1
logo
தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது - மு.க.ஸ்டாலின் || நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் ||
தமிழகம்
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (17:41 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (17:41 IST)

வனத்துறை அலட்சியம் - 82 யானைகள் உயிரிழந்த பரிதாபம்!

கோவை ஆனைக்கட்டி பகுதியில் கொண்டானுர் புதூர் வன பகுதியில் காலில் பலத்த காயத்துடன் உணவு உட்கொள்ளாமல் இருந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்து வந்த நிலையில் நேற்றிரவு இறந்துள்ளது மலைவாழ் மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆனைகட்டி அருகேயுள்ள கொண்டனூர் புதூர் வனப்பகுதியில் இடது காலில் காயம் காரணமாக நடக்க முடியாமல் கடந்த புதன்கிழமை முதல் யானை சுற்றித்திரிந்ததை பார்த்த அந்த பகுதி பொது மக்கள் வன துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத் துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். 

அந்த யானையின் இடது காலில் பெரிய கட்டி காரணமாக நடக்க முடியாமல் உள்ளது என கால் நடை மருத்துவர் உறுதிப்படுத்தினர். இதனை அடுத்து காயம் பட்ட யானைக்கு கடந்த 4 நாட்களாக உணவில் மருந்துகள் கொடுக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று சாடிவயல் பகுதியில் இருந்து பாரி கும்கி யானை பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டது. அடிபட்ட  யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அந்த யானையின் காலில் உள்ள பெரிய கட்டியில் உள்ள சீழ் நேற்று அகற்றப்பட்டது. 

மேலும் யானைக்கு காயம்பட்ட இடத்தில் மருந்துகள் கொடுக்கப் பட்டு உணவில் மருத்துகள் கொடுக்க பட்டது. இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. அங்கு சென்ற யானை மயக்க நிலையில் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. விழுந்த இடத்திலேயே யானை நேற்றிரவு இறந்துள்ளதாக தெரிகிறது.  இதனையடுத்து பிரேத பரிசோதனைக்குப்பிறகு யானை புதைக்கப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 16 ஆம் தேதியன்று மாங்கரை அருகே மின்கம்பத்தில் உரசியதால் மின்சரம் யானையை தாக்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் கடந்த புதன்கிழமை முதல் அடிபட்ட யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் தேடி வந்ததாகவும், கடந்த வெள்ளிக்கிழமைதான் யானைக்கு தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் அலட்சியமே யானை இறப்புக்கு காரணம் என அப்பகுதி பொது மக்கள் தெரிவித்தனர். கோவையில் யானைகளின் உயிரிழப்புகள் 82 ஆக உயர்ந்த போதும், யானைகளுக்கு என பிரத்யோக சிகிச்சை வசதிகள் இல்லை என்பது வருத்தமளிப்பதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

-அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :