Add1
logo
உண்மையையே படுகொலை செய்யும் நிர்மலா சீதாராமன்கள்! வேல்முருகன் கண்டனம் || தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது - மு.க.ஸ்டாலின் || நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் ||
தமிழகம்
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (16:27 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (16:27 IST)


ராமேசுவரம் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு? மத்திய அரசின் பாதுகாப்புத்துறை மறுப்பு




ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ராமேசுவரம் அந்தோணிராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் பிச்சை, சாண்ட்ரோ, ஜான்சன், நிஷாந்த், தேவராஜன், சூசையா ஆகிய 6 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். 

ராமேஸ்வரத்தில் இருந்து 3 கடல் மைல் தொலைவில், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல்படையினர் சுட்டதில் 2 மீனவர்கள் காயமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குண்டடிபட்டு கையில் ரத்தம் சொட்டும் நிலையில் தன்னை இந்தி, ஆங்கிலம் பேச வற்புறுத்தியதோடு, கடலோர காவல்படையினர் அடித்து துன்புறுத்தியதாக மீனவர் அந்தோணி பிச்சை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், காயம்பட்ட மீனவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட இந்திய கடலோர காவல்படை கப்பலில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேசமயம், மீனவர்கள் சுடப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடலோரக் காவல்படை கப்பல், எந்த மீனவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும், ரப்பர் புல்லட்டுகளை இந்திய கடலோர காவல்படை பயன்படுத்துவதில்லை என்றும் விளக்கம் அளிப்பட்டுள்ளது. மீன்பிடி படகில் இருந்தவர்கள் குற்றம்சாட்டுவது போல, துப்பாக்கியால் சுட்டோ அல்லது வேறு எந்த வகையிலுமோ கடலோர காவல்படையினர் காயம் ஏற்படுத்தவில்லை என்றும், இரட்டை மடி வலையை பயன்படுத்தியதற்காகவும், நிற்காமல் சென்றதற்காகவும் கடலோர காவல் படையினர் எச்சரித்ததால் கவனத்தை திசைதிருப்புவதற்காக மீனவர்கள் இந்த குற்றச்சாட்டை கூறியிருக்கலாம் எனவும் பாதுகாப்புத்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :