Add1
logo
தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது - மு.க.ஸ்டாலின் || நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் ||
தமிழகம்
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (12:38 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (12:54 IST)

அழுகிய பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 25000ம் இழப்பீடு வழங்குமாறு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

மழையால் அழுகிய பயிருக்கு ஏக்கர் 1க்கு ரூ. 25000ம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று முதல் அமைச்சருக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, 

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்கள் காலம் கடந்து மேட்டூர் அனை திறக்கப்பட்டதால் தமிழக அரசின் ஆலோசனையை ஏற்று பருவம் மாறி அக்டோபர் 10ந் தேதிக்கு மேல் ஒரு போக சம்பா சாகுபடி பணிகளை துவக்கினர். 

பெரும் பகுதியான விவசாயிகள் நேரடி விதைப்பும், வாய்ப்புள்ளவர்கள் நடவு பணிகளும் மேற்கொண்டனர். 

துவக்கத்திலேயே வட கிழக்கு பருவ மழை வழக்கத்தை விட அதிகமான மழை பொழிவும் ஓரிரு மாதங்கள் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு ஓரிரிரு நாட்களிலேயே கொட்டி தீத்ததால் 20 தினங்களுக்கு மேலாக நீரில் மூழ்கி அனைத்து பயிர்களும் அழுகி விட்டது. இனி மறு உற்பத்திக்கு வாய்ப்பில்லை.

 புதிதாக குறைந்த கால நெல் ரகங்களை விதைத்தாலும் மார்ச் மாதம் வரையில் தண்ணீர் தேவை உள்ளது. மேலும் பருவமழை தொடரும் என ஆய்வாளர்கள் எச்சரித்து வரும் நிலையில் விவசாயப் பணிகளை துவங்க இயலாது. 

ஜனவரி மாதத்திற்கு பிறகு தண்ணீர் திறப்பிற்க்கு வாய்ப்பு இல்லாத நிலையில் அடுத்தாண்டாவது ஜூன் 12ல் தண்ணீரை திறக்கும் வகையில் மேட்டூரில் சேமித்திட வேண்டும் என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

 எனவே தமிழக அரசு காலம் கடத்தாமல் அழுகிப் போன பயிர்களுக்கு ஏக்கர் 1க்கு ரூ25000/-ம் வீதம் நிவாரணம் வழங்கிட வேண்டும். வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் மூ5000/-ம் வீதம் உதவி தொகை வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்க்கொள்ள வேண்டும்.

 வடிகால்கள் தூர் வாரததால் பாசண ஆறுகள் வறண்டு கிடக்கும் நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், கடலுர் மாவட்டங்களில் பெய்த மழை நீர் வயலிலேயே தேங்கி கடல்போல் காட்சியளிப்பதும், பயிர்கள் அழுகி வருவதும் வேதனையளிக்கிறது. 

எனவே காலத்தில் குடி மராமத்து திட்டம், பராமரிப்பு தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளை கொண்டு வடிகால்கள் தூர் வாரி இருந்தால் பெரும் பாதிப்பு தவிர்த்திருக்க முடியும். இந்நிலையில் தற்போது பேரிடர் கால பாதுகாப்பு நிதியினையும் தூர் வாரி தண்ணீரை வடிய வைப்போம் என்று சொல்லுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். முழுத்தொகையும் ஊழல் முறைகேடுகளுக்குத் தான் வழி வகுக்கும்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தற்ப்போது அடையாளம் கண்டு வரும் பிப்ரவரி மாதமே விவசாயிகள் கொண்ட குழுக்கள் மூலமே தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தூர் வாருவதற்க்கென்று  நிரந்தர அரசானை வழங்கி பிப்ரவரி மாதமே தூர் வாரும் பணிகளை துவக்கி டுவதை சட்டமாக்கிட வேண்டும். பாசனத்திற்க்கென தனி அமைச்சகத்தை உருவாக்கிட வேண்டும்.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பொதுப்பணித் துறையில் அனைத்து உயர் பதவிகளுக்கும் பொறியாளர்கள் நியமிக்கும் போது  சுய நல வருவாயையும், பொருளாதார வளர்ச்சி கொண்டவர்களை மட்டுமே தகுதியாக கொள்ளாமல், பாசனப் பிரிவில் முன் அனுபவம் பெற்றவர்களை தகுதியாக கொண்டு நியமனம் செய்து காவிரி டெல்டாவையும், விவசாயிகளையும் பாதுகாத்திட வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் மன்றாடி வேண்டுகிறேன். மேற்கண்டவாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :