Add1
logo
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் || சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE) ||
தமிழகம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (20:34 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (20:34 IST)


வேளாண்துறையையும் மத்தியப் பட்டியலுக்குக்
 கொண்டு போவதா?- கி.வீரமணி 

 மத்திய அரசின் அதிகாரப் பட்டியல் அளவுக்கு அதிகமாக இருக்கும்பொழுது, வேளாண் துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போகச் செய்யும் திட்டத்தை மாநில அரசுகள் தடுக்கவேண்டும்; குறிப்பாக மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்துள்ள அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் அண்ணா தி.மு.க. அரசு இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு உடனடியாக எழுதவேண்டும் என்று   திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திட்டக் கமிஷனைக் கலைத்த மோடி அரசு, அதற்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கியது; அதன் உறுப்பினர்களில் ஒருவர், (அவர்கள் எல்லாம் உள்ளத்தில் காவியேற்றிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவாளர்களும்) தற்போது மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மை அதிகாரத்தையும் அப்படியே மத்திய அரசின் ஏகபோக அதிகாரமான மத்தியப் பட்டியலுக்கே மாற்றவேண்டும் என்று கூறியுள்ளது - முழுக்க முழுக்க பிரதமர் மோடி அரசின் ஆழம்பார்க்கும் (திமீமீறீமீக்ஷீ விட்டுப் பார்க்கும்) ஒரு வித்தையாகும்.

இந்த நச்சு அதிகார ஆசை - எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் முன்வரவேண்டும். பொதுவாக பரவலான அதிகாரங்களே உண்மையான மக்கள் ஆட்சியின் சரியான அடையாளங்கள் ஆகும்!

அரசியல் சட்டத்தில் மூன்று பட்டியல்கள்

அரசியல் சட்ட கர்த்தாக்கள் வகுத்த மூன்று பட்டியல்களில்-
1. மத்தியப் பட்டியல் - 97 அதிகாரங்களைக் கொண்ட நீண்ட கொழுத்த அதிகாரக் குவியல் பட்டியல்
2. மாநிலப் பட்டியல் - 66 அதிகாரங்களைக் கொண்ட இளைத்த பட்டியல்
3. மாநிலங்களின் இசைவு பெற்றே மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டிய (கன்கரண்ட் லிஸ்ட்) பட்டியல் - 47 அதிகாரங்களைக் கொண்டது.

இப்பட்டியல்கள் உருவாகும்போதே அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஒரு எச்சரிக்கை விடுத்தார். மாநிலப் பட்டியலைச் சுருக்கி, மத்தியப் பட்டியலுக்கு அதிகாரங்களைக் குவிப்பதில் ஒரு பெரும் ஆபத்து உள்ளது. அதிகமான சுமை - கனம் மத்திய அரசின் அரசு இயந்திரத்தில் ஏற்றப்பட்டால், அந்த சுமை தாங்கும் இயந்திரம் முறியும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்தார்.

வேளாண் துறை மத்தியப் பட்டியலிலா?
திருக்குறள் தந்த பேரறிஞர் திருவள்ளுவர் இந்த தத்துவ உண்மையை ஒரு அருமையான குறளில் கூறினார்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் (குறள் 475)
மயில் இறகு போன்றவை லகுவானவைதானே என்று கருதி அளவுக்கு அதிகமாக ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு முறிந்து வீழும் என்பதே அக்குறளின் கருத்து.

வேளாண்மை - தற்போது மாநிலப் பட்டியலில் 14 ஆம் பொருளாக உள்ள மாநில அதிகாரம் - அதனை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற ஒரு திட்டத்தினை ஏன் இப்போது அறிவிக்கிறார்கள்? வேளாண்மை என்ற பொருளின்கீழ் அரசியல் சட்ட மாநிலப் பட்டியலில் 14 ஆவது அம்சமாக, ‘‘Agriculture, including agricultural, education and research protection against pests, and prevention of plant diseases’’ 
என்று உள்ளது.

வேளாண் துறைக் கல்லூரியில் சேர்வதற்கு நீட்டைக் கொண்டு வரத் திட்டமா?
வேளாண்மைக் கல்லூரிகளை, வேளாண்மைப் பல்கலைக் கழகங்களை, ஆய்வுக்கூடங்களை, ஆராய்ச்சிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அங்கும் நீட் தேர்வு நடத்துவதற்கும், இதில் ஒரு சூழ்ச்சி மிகுந்த திட்டம் புதைந்துள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அரசியல் சட்டம் வகுத்த அம்பேத்கர் கூற்றுப்படியும், பல்வேறு மாநில அதிகாரங்கள்பற்றிய பங்கீடு சம்பந்தமான ஆய்வுக் குழுக்கள் டாக்டர் ராஜமன்னார் குழு, சர்க்காரியா குழு போன்றவைகளின் பரிந்துரைகளின்படி தற்போது மத்தியப் பட்டியலிலும், பொதுப் பட்டியல் என்று தவறாக அழைக்கப்படும் மாநிலங்கள் இசைவு பெறவேண்டிய பட்டியலில் உள்ளவைகளை, மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வருவதுதான் இன்றைய தேவையாகும்!
ஆனால், மத்திய (டில்லி) அரசின் போக்கோபின்னோக்கிச் செல்லும் பிற்போக்காக உள்ளது!

அதிகச் சுமையை தூக்க முடியாமல் தூக்கிடும் நிலையில் உள்ளவர்கள், சுமையை ஏன் தேவையற்று சுமந்து, நொந்து நூலாகப் போகவேண்டும்!

ஒற்றை ஆட்சியையே கொண்டு வந்து, தற்போதுள்ள அரைகுறை கூட்டாட்சி முறையையும் அறவே பறிக்கவே, இந்த ஆபத்தான யோசனைத் திட்டத்தைக் கூறுகிறார்கள்.

அறிஞர் அண்ணா அன்று எழுப்பிய வினா!

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்களைப் பரவலாக்கவேண்டும் என்று பேசும்போது, இந்த வேளாண்மைத் துறையை உதாரணத்திற்குக் கூறி, மாநிலத்தில் வேளாண் அமைச்சர் உள்ளபோது, மத்தியில் ஏன் தனியே ஒரு வேளாண் அமைச்சர் என்றே கேட்டார்!

நிதி ஆயோக்கின் இதே உறுப்பினர் தனியார்த் துறை இட ஒதுக்கீட்டை எதிர்த்துள்ளார். அதனை திராவிடர் கழக பொதுக்குழு கண்டித்துத் தீர்மானமே போட்டுள்ளது. இவர்கள் யார் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு?

அ.தி.மு.க. அரசு என்ன செய்யவேண்டும்?

அண்ணாவைக் காற்றில் பறக்கும் கொடியாக மட்டுமே பறக்கவிடும் இன்றைய அ.தி.மு.க. தமிழக அமைச்சர்கள், இதனை உடனடியாக எதிர்த்து மத்திய அரசுக்கு எழுதவேண்டாமா?
அந்தோ, தாழ்ந்த தமிழகமே! உன் நிலை இப்டியா இருப்பது?









தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : rajan Date :10/23/2017 9:46:37 PM
அரசு பள்ளிகளை தனியார்வசம் ஒப்படைக்கவேண்டும். அப்போதுதான் கல்வித்தரம் உயரும் என்று கூறிய முட்டாள்கள்தான் இந்த நிதி ஆயோக் என்ற அமைப்பின் உறுப்பினர்கள்