Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
முக்கிய செய்திகள்
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (13:35 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (17:13 IST)

தமிழிசை சவுந்தரராஜனின் பதவியை பறிக்க வேண்டும்: வி.சிறுத்தைகள் சாலை மறியல்

‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசை குறை கூறியிருப்பதாக விஜய்யை பா.ஜ.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த படம் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவந்து உள்ளது. தணிக்கை குழுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டியவர்களே உறுப்பினர்களாக உள்ளனர். எனவே அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களை வளைத்துப் போட்டு அவர்கள் மூலம் தமிழகத்தில் கால் ஊன்ற பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என தெரிவித்தார். 

இதற்கு, கட்ட பஞ்சாயத்து நடத்தி நிலத்தை அபகரிப்பவர் திருமாவளவன் என்றும், அவரது அலுவலக இடமும் வளைத்து போடப்பட்டது தான் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக சாடினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.இந்த நிலையில் இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்லத்துரை தலைமையில் 100க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அப்போது தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் செல்லதுரை போலீஸ் துணை கமி‌ஷனர் பிரவேஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தார். 

பின்னர் நக்கீரன் இணையதளத்திடம் பேசிய ந.செல்லத்துரை, சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் தமிழிசை சவுந்தராஜனுக்கு எதிராக புகார் அளித்துள்ளோம். மெர்சல் படத்தில் பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறாரே என செய்தியாளர்கள் திருமாவளவனிடம் கருத்து கேட்டுள்ளனர். 

ஒரு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தில் வரும் காட்சிகளை நீக்கச் சொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அப்படி செய்தால் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று பதில் அளித்தார் திருமாவளவன். 

இதுபோன்ற பதில்களை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழிசை சவுந்தரராஜன், உரிய பதில் கருத்து அளிக்காமல் தனி நபர் தாக்குதல் தொடுக்கும் விதமாக, திருமாவளவன் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார் என்றும், தனது கட்சிக்காரர்களை வைத்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கிறார் என்றும், ஒரு அபாண்டமான சிறிதும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை பொது இடத்தில் பதிவு செய்திருக்கிறார். 

இது திருமாவளவனின் 30 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்க்கைக்கு ஏற்பட்ட களங்கமாக நாங்கள் கருதுகிறோம். அடிப்படை ஆதாரமற்ற, அபாண்டமான இந்த குற்றச்சாட்டை உடனடியாக தமிழிசை சவுந்தரராஜன் பொது இடத்தில் ஊடங்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் பொதுமன்னிப்பு கேட்டு வாபஸ் பெற வேண்டும் எனறு கோரிக்கை விடுக்கின்றோம். 

இதுபோன்ற புரிதல் இல்லாத அரசியல் கட்சித் தலைவராக இருக்கக் கூடிய தமிழிசை சவுந்தரராஜனை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு அகில இந்திய பாஜகவுக்கும் கோரிக்கை விடுக்கிறோம்.

மேலும் எங்களுடைய கோரிக்கையை ஏற்று மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து வைக்கவில்லை என்றால் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம். 

தாழ்த்தப்பட்ட மக்களுடைய தலைவராக அடையாளப்படுத்தப்பட்ட திருமாவளவனை களங்கப்படுத்தியதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பிற சாதி வெகுஜன மக்களுக்கும் இடையே ஒரு மோதலை, வன்முறையை உருவாக்கக் கூடிய, ஊக்குவிக்கக் கூடிய செயலாக பார்க்கிறோம். ஆகவே இதுபோன்று தனி நபர் தாக்குதல் தொடுக்கும் விதமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

-வே.ராஜவேல்
படங்கள்: குமரேஷ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : S.Govinarajan Date :10/23/2017 11:05:28 PM
திருமா தன ஜாதிக்கு ஒரு நியாயம் , மற்றவர்களுக்கு ஒரு நியாயம் பேசுகிறார்.தன இனத்தவர் கொல்லப்பட்டால் ஆணவ கொலை, கௌரவக் கொலை என்பார்.மற்றவர்கள் என்றால் ஆதிக்க சக்திகள் என்பார், ஸ்வாதி கொலை விவகாரத்தில் இதை கண்கூடாகப் பார்த்தோம் .எந்த பிரச்னை என்றாலும் எதிர்ப்பது என்ற கொள்கை உடையவர். இங்கு சிலர் குறிப்பிட்டு இருப்பது தவறு. பி.ஜெ.பி.தாழ்த்தப்பட்டவரை குடியரசுத் தலைவராக நியமித்துள்ளது.கன்னியா குமரி மாவட்டத்தில் நடந்த உள் ஜாதி சண்டைநடந்த காலத்தில் திராவிடக் கட்சிகள் தான் ஆட்சியில் இருந்தன.எதற்கெடுத்தாலும் பி.ஜெ.பி.மீது பழி போட ஒரு கூட்டம் காத்துக்கொண்டு இருக்கிறது.ராம் விலாஸ் பாஸ்வான் பி.ஜெ.பி.அணியில்தான் உள்ளார் என்பது இந்த கூட்டத்திற்குத் தெரியுமா?
Name : arasar Country : Australia Date :10/23/2017 10:32:07 PM
ப்ரீயா விடுங்க ! தமிழ்நாடு இன்னும் பார்க்க வேண்டிய தமாஷ் இன்னும் பாக்கியிருக்கு ! ரசிப்போம் !
Name : ராஜகோபாலன். Date :10/23/2017 8:14:17 PM
தமிழக பாஜக தலைவர் தமில்இசை அவர்கள்.... அரசியலில் அடிச்சுவடே.... தெரியாமல் இருப்பதால்...... பலவகையில், பாஜகவிற்கு சேதாரங்கள் அதிகமாகி, பாஜக தமிழகத்தில், பிடிமண்அளவும் இல்லாத அளவுக்கு சென்றுவிட்டது??? இதனை வடபுல மக்கு நிர்வாகிகள் தான்..... மூளை இருந்தால்... பாஜக வளரும் வகையில், ஒரு தலைவரை கொண்டுவரவேண்டும்??? இப்போதுள்ள தலைவர்களாகிய பொன்னும், இசையும், ராஜாவும், கணேசனும் இருந்தாலே போதும்.... தமிழகத்தில் ஒருக்காலும்..., பாஜக தலை எடுக்காது??? இந்த நிலை தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைத்த வரப்பிரசாதமாக எண்ணி,,,, குதூகலிக்கவேண்டும்??? வேஸ்ட்டாக... போராட்டம் எதற்கு??? எந்த அளவிற்கு எச ராஜா அவர்கள், கேன..... கோமாளியாக இருந்தால், திருட்டுத்தனமாக மெர்ஸில் சினிமாவை பார்த்தேன் என கூறுகெட்டு போய்.... கூறுவார்??? இவரெல்லாம் அகில இந்திய அளவில் அரசியலில் பெரிய ஆள் என்றால்...., எவராக இருப்பினும், பாஜகவை காரி துப்பத்தான் செய்வார்கள்?!?!?! மோடி அவர்களுக்கு அவருடைய கட்சியின் குணமாறாட்டமுள்ள முக்கியஸ்தர்களே..., குழி வெட்டுகிறார்கள்!!!
Name : ராஜகோபாலன். Date :10/23/2017 8:12:05 PM

Name : குடிமக்கள் Country : Australia Date :10/23/2017 3:30:35 PM
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பெரும்தாக்குதலை நடத்த பிஜேபி பல எட்டப்ப-BC தலைவர்களை பலவருடங்களுக்கு முன்பே விலைக்கு வாங்கிவிட்டது. மேலும் ஒரே ஜாதிக்குள் மதப்பிரிவினையுண்டாக்கி, கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்சாதி சண்டையுண்டாக்கி வெற்றிபெற்றது போல பிற மாவட்ட-BC மக்களில் உள்சாதி மோதல்களை உண்டாக்கத்திட்டமிட்டுள்ளது. சரியான தருணம் நோக்கி இந்த நரிகள் காத்திருக்கின்றன. ஜல்லிக்கட்டு இளைஞர்கள் இந்த இனக்கலவரத்திட்டங்களை உடைத்தெறிய மிகக்கவனமாக இருக்கவேண்டும்.
Name : Chelladurai N Date :10/23/2017 2:59:31 PM
மிகவும் அருமையான பதிவு. எங்கள் கருத்துக்களை சரியாக பதிவு செய்துள்ள விதம் பாராட்டுக்குரியது. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
Name : பின்தள்ளப்பட்டவன் BC Country : Australia Date :10/23/2017 2:47:57 PM
பிஜேபியின் அடித்தளம் ஜாதிவெறியின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது. அதற்கு இந்துமதபக்தியை முகமூடியாக உபயோகிக்கின்றனர். ஜாதிகளுக்குள் சண்டையுண்டாக்கி, அவர்களை வளரமுடியாமல் ஆக்கிக்கொண்டிருக்கும் வேலையை காலாகாலமாகச்செய்துவந்தனர். சில தலைமுறைகளாக மதத்தை ஆயுதமாகப்பயன்படுத்தி சண்டையுண்டாக்குகிறார்கள். இப்போதுள்ள பெரும்பாலான பின்தங்கிய மக்களையும் அன்று இழிசாதியாகத்தான் வைத்திருந்தனர். பெண்கள் கூட மேலே துணிபோடக்கூடாத நிலை இருந்தது. இழிசாதியினர் என்று அவர்களால் பட்டம் சூட்டப்பட்டவர்கள் தெருவில் சாமி சிலைகளை ஊர்வலமாகக்கொண்டு செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் சாமி தீட்டப்பட்டுவிடுமாம். அன்றைய பக்தி அது. அதுதான் சாமிக்கும் மரியாதையாம். இப்போது அவர்கள் மதம்மாறிவிட்டதனால்,சாமி சிலைகளை அவர்கள் தெருவில் ஊர்வலமாக மேளதாளத்துடன் கொண்டு செல்கிறார்கள். இப்போது சாமி சிலைகள் தீட்டுப்படாதோ? இப்போது சாமியை அவர்கள் தெருவில் கொண்டுபோனால் பரிசுத்தமடைகிறதா? அன்றுள்ளது பக்தியா? அல்லது இன்று செய்வது பக்தியா? மோதலையுண்டுபண்ணுவதுதான் அவர்கள் நோக்கம். இப்போது தமிழிசை போன்ற எட்டப்பர்கள் உதவியுடன் மோதல் உண்டாக்கிவருகிறார்கள்
Name : gaandupillai Country : United Kingdom Date :10/23/2017 2:21:58 PM
இவர் துறையா அல்லது DURAIYA ?