Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
முக்கிய செய்திகள்
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, அக்டோபர் 2017 (19:54 IST)
மாற்றம் செய்த நாள் :22, அக்டோபர் 2017 (19:54 IST)


மு.க.ஸ்டாலின் எழுதும்
 ’ஆளுந்தரப்பின் அவல நிலை மடல்!’

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடல்:

என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஆளுந்தரப்பின் அவல நிலை மடல்.

கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்பார்கள். அதுபோல தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.,வினர் மத்திய பா.ஜ.க. அரசுக்கு செய்யும் அடிமைச் சேவகம் குறித்து தி.மு.கழகமும் மற்ற எதிர்க்கட்சிகளும் மட்டுமின்றி பொதுமக்களும்கூட, இன்னும் சொல்லவேண்டுமென்றால் அ.தி.மு.க.,வின் அடிமட்டத் தொண்டர்களேகூட பேசிவந்த நிலையில், இப்போது அ.தி.மு.க.,வின் அமைச்சர்களே அதுப்பற்றி பொது மேடைகளிலேயே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பால் கலப்பட விவகாரத்தில் திடீர் ஞானோதயம் பெற்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து, நீதிமன்றத்தால் வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தங்களுடைய கட்சியும் ஆட்சியும் யாரை நம்பி இருக்கிறது என்ற உண்மையை உரைத்திருக்கிறார். “யாராலும் நமது இயக்கத்தை அழிக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி நமக்கு ஆதரவாக உள்ளார். எல்லாவற்றையும் மேலே உள்ளவர் பார்த்துக்கொள்வார். எனவே எங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும்”, என்று வெளிப்படையாகப் பேசியிருப்பது ஏடுகளில் பதிவாகியுள்ளது.

பிரதமர் மோடியின் தயவில்தான் இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெறுகிறது என்பதுடன், தேர்தல் ஆணையம் தீர்மானிக்க வேண்டிய இரட்டை இலை சின்னம் குறித்த முடிவை, மோடியின் தயவால் பெறுவோம் என்கிற அதிகாரமீறலையும் ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார் அமைச்சர். தேர்தல் ஆணையத்தின் ஒருபக்க சார்பு நிலை குறித்து தி.மு.,கழகம் பல முறை எடுத்துக்கூறியிருக்கிறது. தற்போது குஜராத் மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பினை காலதாமதம் செய்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அந்த மாநிலத்தில் அமலுக்கு வராதபடி செய்து, பிரதமர் மோடி அங்கே பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், திட்டங்களை அறிவிக்கவும் வாய்ப்பு அளித்திருக்கிறது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் என்பதை பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்பதற்கேற்ப செயல்படவேண்டிய தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ச்சியாக எழுகின்ற இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அதன் தன்னாட்சி செயல்பாட்டுக்கு களங்கம் விளைவிப்பதாகவே அமையும் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். தன்னாட்சிமிக்க தேர்தல் ஆணையத்தின் பணியில் பிரதமர் தலையிடுகிறார் எனச் சொல்வதுபோல அமைந்திருக்கிறது மாநில அமைச்சரின் பொதுக்கூட்டப் பேச்சு. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் நலன் சார்ந்த திட்டங்களுக்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என மேடைக்கு மேடை பேசிவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கும் மறுப்பு தெரிவிப்பதுபோல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பதன் மூலம், தங்கள் சொந்தக் கட்சியின் உள்விவகாரங்களைத் தீர்த்துக்கொண்டு, இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காகத்தான் அ.தி.மு.க அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் அடிமையாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திடீர் எம்.எல்.ஏ.,வாகி தற்போது உயர்நீதிமன்ற வழக்கில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஏ.கே.போஸ் மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். “அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் பதவி ஆசை பிடித்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லாம் உடடினயாகக் கட்சியை விட்டு விலகவேண்டும். இந்தக் கட்சியை அழிக்க மோடிக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? யார் அந்த தைரியத்தைக் கொடுத்தது? மோடி என்னென்னவோ செய்து ஆட்டிப்படைக்கிறார்.  இதற்கு காரணம் இங்கே உள்ள சில எட்டப்பர்கள்தான்”, என்று பேசியிருப்பவர் எதிர்க்கட்சியினர் அல்ல, ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.,வின் வார்த்தைகள் இவை.

பதவி ஆசைக்காக பா.ஜ.க அரசிடம் மாநிலத்தை அடகுவைத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சியாளர்களைப் பற்றி அந்தக் கட்சியினரே வெளிப்படையாக சொல்லும் நிலையில், மாநில அரசின் நலனுக்காகவும் மக்களுக்கானத் திட்டங்களுக்காகவும் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக மேடைக்கு மேடை பச்சைப்பொய் சொல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசுடனான இணக்கத்தின் காரணமாக, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடிந்ததா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடிந்ததா? தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சிக்கான நிவாரண உதவியை முழுமையாகப் பெற முடிந்ததா? விவசாயிகளின் துயர்துடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்ததா? ஜி.எஸ்.டி வரியிலிருந்து வணிகர்களையும் மக்களையும் காக்க முடிந்ததா? உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் மாநிலத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டனவா? இப்படி மக்கள் சார்ந்த திட்டங்களில் ஒன்றாவது, மாநில ஆட்சியாளர்களின் இணக்கமானப் போக்கினால் மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தந்திருக்கிறார்களா?

இணக்கம் என்ற பெயரில் அ.தி.மு.க ஆட்சியாளர்கள் செய்கின்ற அடிமைச் சேவகத்தின் காரணமாக மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக, தலைமைச் செயலகம் வரை நடத்தப்பட்ட ரெய்டுகளில் சிக்கிய ஆவணங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக அமைச்சரின் வீட்டில் பிடிபட்ட பட்டியலில் முதலமைச்சரின் பெயரே இடம்பெற்றிருந்தும்கூட உரிய விசாரணை மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கு மத்திய ஆட்சியாளர்களின் தயவு பயன்படுகிறது. குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கு மத்திய அரசுடனான ‘இணக்கம்’ தேவைப்படுகிறது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் கட்சியின் சின்னமான இரட்டை இலையை மீட்கவும்தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதல்வரும் துணை முதல்வரும், ‘உன்னை விட நான்தான் சிறந்த அடிமை’ எனப் போட்டிப்போட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் சுயநலத்திற்கு தமிழகம் அடிமையாக்கப்பட்டிருக்கிறது. சுயமரியாதையை இழந்து நிற்கும் ‘குதிரை பேர’ ஆட்சியை அகற்றும் நாளை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களின் ஒரே நம்பிக்கை, நம்முடைய தி.மு.கழகம்தான். இருளடைந்த தமிழகத்தில் சூரிய ஒளி எப்போது தன் வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மக்களின் மனநிலையை ஆட்சியாளர்களும் அறிவார்கள். அதனால்தான், ஆட்சி நீடிக்கின்ற அவகாசத்திற்குள் அள்ளிச் சுருட்டிவிடவேண்டும் எனத் தீர்மானித்து வாரிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்கு, தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களின் சகோதரனாக, உங்களில் ஒருவனாக செயல்படும் என்னை நோக்கி வீசப்படும் அவதூறு அம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தலைமைப் பொறுப்புக்கு என்னால் வரமுடியவில்லை என்று ஆரம்பித்து, குடும்ப அரசியலின் வாரிசாக இருக்கிறேன் என்பது வரை பலவித அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள். தி.மு.க என்பது அதிமுகவைப் போன்ற அடிமைக் கூடாரமல்ல. ஓர் அடிமையை  கோபுரத்தில் உட்காரவைத்து, அதன்பிறகு அங்கிருந்து குப்புறத் தள்ளிவிடும் ‘அதிர்ஷ்ட’ அரசியலுக்கு தி.மு.க.,வில் இடமில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினராகப் பதிவு செய்து, கிளைக் கழகப் பொறுப்புகளில் தொடங்கி மாநிலப் பொறுப்பு வரை உயர்வதற்கான உழைப்பும் முனைப்பும் மட்டுமே தி.மு.க தொண்டனின் மூலதனம். அதன் மூலம் கிடைக்கின்ற பதவிகளை, பொறுப்பு என்றும், வாய்ப்பு என்றும் உணர்ந்து செயல்படுவதே பேரறிஞர் அண்ணா காலத்தில் தொடங்கி, தலைவர் கலைஞர் காலத்திலும் தொடர்கின்றது. 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்வில், தி.மு.க.,வின் அடிப்படைப் பொறுப்புகளிலிருந்து ஒவ்வொரு படியாக ஏறி, செயல் தலைவர் என்கிற நிலைக்கு வந்திருப்பவன்தான் உங்களில் ஒருவனான நான். ஓர் இரவில் முதல்வர் நாற்காலியை அடைவதோ, இன்னொரு இரவில் அதனைப் பறிகொடுத்துவிட்டு தர்மயுத்தம் நடத்தவேண்டியதோ தி.மு.க.,வில் கிடையாது. ‘இங்கே எல்லோரும் ஒரே குடும்பம். எங்கள் குடும்பத்தின் தலைவர் கலைஞர். குடும்பத்தில் உறவுதான் முக்கியமே தவிர, பதவியல்ல. கலைஞரின் உடன்பிறப்பு என்பதுதான் உன்னதமான உறவு’ என்ற பெருமிதம் ஒவ்வொரு தி.மு.க தொண்டனுக்கும் உண்டு.

அடிமைச் சேவகம் புரியும் அ.தி.மு.க.,வில் என்ன நிலைமை? பதவிக்காக ஒரு நாள் அம்மா என்பார்கள். இன்னொரு நாள் சின்னம்மா என்பார்கள். வில்லாக முதுகை வளைத்து, தரையைத் தொட்டு, யோகாசனத்தை மிஞ்சும் அளவுக்கு விசுவாசம் காட்டுவார்கள். அதன்பிறகு, அந்த அம்மா தன் உயிருக்காக மருத்துவமனையில் போராடும் நேரத்தில், பதவி சுகத்தை மட்டும் நினைத்து பொய் பொய்யாகக் கதை விடுவார்கள். அம்மா போனால், சின்னம்மா… சின்னம்மா.. என்று மறுபடியும் விசுவாச யோகாசனம் செய்வார்கள். சின்னம்மா சிறைக்குப்போனதும் பதவியைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று டெல்லியைத் தேடிச் சென்று புது எஜமானரைக் கண்டடைந்து, மறுபடியும் முதுகை வளைத்து தரையைத் தொடும் விசுவாச யோகாசனத்தை செய்வார்கள்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக குனிந்த முதுகுடன் புதுப்புது எஜமானர்களின் காலைத்தொட்டு அடிமை வாழ்வு வாழும் அ.தி.மு.க.,வினரில் ஒருவருக்கு கூட, ஆலமரம் போல உயர்ந்தும் நிமிர்ந்தும் நிற்கும் சுயமரியாதை இயக்கமாம் தி.மு.க.,வை நோக்கி விமர்சனம் செய்ய அருகதை கிடையாது. தி.மு.கழகம் என்பது சூரியன். அதை நோக்கி குரைப்போரின் குரல் ஒருபோதும் எடுபடுவதில்லை. இருளை நோக்கிப் பாயும் கதிரொளியாக நம் இலட்சியப் பாதையில் எழுச்சி பயணத்தை தொடர்வோம். நமக்கு நாமே உடன்பிறப்புகள். தமிழக மக்கள் அனைவரும் நம் உறவுகள்.’’


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : தமிழன் Country : Australia Date :10/22/2017 11:49:50 PM
பிஜேபி மோடியின் ஆசைகள் எல்லாவற்றிற்கும் ,தகாத திரைமறை ஆட்சி அரசியல் உறவில் 'இணங்கி' இரட்டை இலைச் சின்னத்தையும் , கட்சிப் பெயரையும் பெற்றுக் கொள்வார்கள்.
Name : rajan Date :10/22/2017 10:59:03 PM
மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ் என்ற மொழியே இல்லை. இதுதான் இவர்கள் இணக்கமாக இருந்து சாதித்தது