Add1
logo
நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்! || சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! || பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம் || வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு || விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு! || ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் || ஜெ. பற்றி முக்கிய அறிவிப்பு - தேடிப் பிடித்தார் பிரதமர் மோடி || ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (19:56 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (19:56 IST)



புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை குறைக்க குழு அமைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் பேருந்துகளுக்கான கட்டணம் சமீபத்தில் இரண்டு மடங்காக உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க, மற்றும் அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி, பா ம க, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு பொது நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

இந்நிலையில் பேருந்து கட்டணத்தை வரை முறைப்படுத்துவது குறித்த அனைத்து கட்சிகள் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் பேருந்து கட்டணத்தை வரை முறைப்படுத்த போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜஹான் தலைமையில் எம்.எல்.ஏ க்கள், பேருந்து உரிமையாளர்கள் கொண்ட குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரை படி கட்டணம் நிர்ணயம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,  புதுச்சேரியை பொறுத்தவரையில் கடந்த 6 வருடமாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் ஒரு மாதத்துக்கு வருமானம் ரூ.3 கோடிதான். ஆனால் செலவு ரூ.4.5 கோடி.  டீசல் விலை, வாகன விலை உயர்ந்து விட்டதாக பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையில் முடிவு செய்து கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசு கண்டிப்பாக கட்டணம் குறித்து பரிசீலனை செய்வோம்" என்றார்.

- சுந்தரபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :