Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
தமிழகம்
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ
 ................................................................
பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்
 ................................................................
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது!
 ................................................................
பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள்... பேருந்து கட்டண உயர்வுக்கு செல்லூர் ராஜூ பதில்
 ................................................................
தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
 ................................................................
பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலாமானார்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது! மஜக கண்டனம்!
 ................................................................
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (19:53 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (19:53 IST)கரும்பு நிலுவைத் தொகை பொங்கல் பண்டிகைக்கு  வழங்க ஏற்பாடு - சர்க்கரை ஆலை ஆட்சியர் உறுதி 

கடலூர் மாவட்டம்  சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆலை அரவை துவங்குவதற்கான விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

 சர்க்கரை ஆலையின் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆட்சியர் மணிமேகலை தலைமை தாங்கினார். விவசாய முன்னேற்ற சங்க தலைவர் முத்துசாமி, செயலர் தங்கஆனந்தன், பாட்டாளி விவசாயிகள் சங்க தலைவர் தேவதாஸ் படையாண்டவர், கரும்பு விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் சிட்டிபாபு, தமிழக வாழ்வுரிமை சங்க ஆண்டவர் செல்வம், வீரசோழன், விஎன்ஜெயராமன், சபாநாயகம், விவசாய அணி செயலர் வால்கரமேடு பாலு, ஆலம்பாடி மதியழகன், வழக்கறிஞர் பழனிமனோகரன், செந்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆதிமூலம், வாஞ்சிநாதன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். 

கூட்டத்தில், அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2014–15 மற்றும் 2015–16 ஆண்டு மாநில அரசின் கூடுதல் விலை ரூபாய் 27 கோடி நிலைவையில் உள்ளதை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துப் பேசினர். இதற்கு பதிலளித்த ஆட்சியர் மணிமேகலை, கடந்த 2014–15 ஆண்டு மாநில அரசின் கூடுதல் விலையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதமும், 2015–16 ஆம் ஆண்டு நிலுவையில் உள்ள மாநில அரசின் கூடுதல் விலையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதம் 5 கோடி 2 லட்சம் வழங்க துவக்கப்பட்டுள்ளது. வரும் 21 ஆம் தேதி நடைபெறும் இளஞ்சூடேற்று விழாவில் விவசாயிகள் சங்க நிர்வாகிகளும், விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு தருமாறு ஆலை ஆட்சியர் கூறினார். 

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் ரூபாய் 5 கோடி 2 லட்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள நிலுவைத் தொகை வரும் பொங்கல் பண்டிகைக்கு அரசிடம் கேட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்வதா விவசாயிகளிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். இதில், விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆலையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

- சுந்தரபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :