Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (18:5 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (18:5 IST)


மத்திய அரசிடம் கடன் கேட்கிறது ஏர் இந்தியா!

உடனடி செலவுகளுக்காக குறுகிய கால கடனாக ரூ.1, 500 கோடி வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியா விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதுடன் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருப்பதுடன் விமானப் போக்குவரத்திலும் தனியார் நிறுவனங்களிடையே ஏர் இந்தியா கடும் போட்டியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ஏர் இந்தியா ஒரு மாதத்துக்கு முன்பு குறுகிய கால கடனாக ரூ.3,250 கோடியை திரட்டியது. மேலும் குறுகிய கால கடனை ஏர் இந்தியா எதிர்நோக்கியுள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது....

அரசு உத்தரவாதத்துடன் கூடிய ரூ.1,500 கோடி கடன் தொகையை, உடனடி செலவுகளுக்காக நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது. இந்தக் கடன் ஜூன் 27, 2018 அடைக்கப்படும்.  இந்தத் தேதி, தேவையென்றால் நீட்டிக்கப்படும். அரசு அளிக்கும் உத்தரவாதம் ஜூன் 27, 2018 வரையோ, அல்லது நிறுவனத்தை தனியார் மயமாக்குவது வரையோ நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : rajagopalan. Country : India Date :10/21/2017 9:12:10 PM
இந்தியாவின் மந்திரிகள் விமானப் பயணம் செய்த வகையில்.... வரவேண்டிய கடனே பல கோடிகள் இருக்குமே???