Add1
logo
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் || சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE) ||
முக்கிய செய்திகள்
ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா
 ................................................................
தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா
 ................................................................
தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை!
 ................................................................
துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம்
 ................................................................
ராகுல் காந்தி புதிய தலைவராகிறார்
 ................................................................
சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE)
 ................................................................
காட்டிக்கொடுப்பதற்காகவே காலடியை தேடுபவர்கள்... : நாஞ்சில் சம்பத் (EXCLUSIVE)
 ................................................................
இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி
 ................................................................
ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம்
 ................................................................
தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ்
 ................................................................
பிரதமர் மோடியின் கவிஞர் அவதாரம்!
 ................................................................
மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை
 ................................................................
‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து
 ................................................................
என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த்
 ................................................................
ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது வேதனையளிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
 ................................................................
கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி: டிடிவி தினகரன்
 ................................................................
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி
 ................................................................
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
ஜெ.வின் கைக்குட்டையிலும் உரிமை இருக்கிறது: தீபா ஆவேசம்
 ................................................................
ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன்
 ................................................................
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, அக்டோபர் 2017 (12:51 IST)
மாற்றம் செய்த நாள் :17, அக்டோபர் 2017 (12:51 IST)

வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை
செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஒரு ஆட்சி அமைந்து, சட்டமன்றத்தில் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டு விட்டால், பிறகு ஐந்து வருடம் கழித்து மக்களிடம்தான் செல்ல வேண்டும் என கூறியுள்ள இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, தமது உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாராளுமன்ற பணிகளில் பழுத்த அனுபவம் பெற்று, இந்திய நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள மேதகு வெங்கய்யா நாயுடு அவர்கள், சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் மாண்புமிகு வித்யாசகர் ராவ் அவர்கள் எழுதிய ‘Those Eventful Days’ என்ற புத்தகத்தை வெளியிட்டு - உரையாற்றி, அது இன்றைய செய்தி தாள்களில் வெளியாகி இருக்கிறது.

“அரசியல் சட்டப்படி ஆளுநர் நடக்க வேண்டும்”,என்றும்,“தமிழகத்திற்கு நிலையான அரசு வேண்டும்”,என்றும் அவர் கூறியிருப்பது தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் குடியரசுத் துணைத் தலைவருக்கு இருக்கும் உயர்ந்த மதிப்பினை, மரியாதையை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது. அதற்காக குடியரசுத் துணைத் தலைவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அதே விழாவில், ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது”,என்றும், “ஒரு ஆட்சி அமைந்து, சட்டமன்றத்தில் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டு விட்டால், பிறகு ஐந்து வருடம் கழித்து மக்களிடம்தான் செல்ல வேண்டும். அரசியல் சட்டத்தை மீறி ஆளுநர் நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது”,என்றும் கூறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன், “நான் இனி எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல”, என்று அறிவித்து, அப்பதவிக்குரிய கண்ணியத்தைக் காப்பாற்ற முன்வந்த மேதகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள், சென்னை ராஜ்பவனில் அரசியல் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதுதானா என்று கேட்க முனைந்தால், அது அந்தப் பதவி மீது நான் வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் சிறுமைப்படுத்துவதாக அமைந்து விடும் என்பதால், அதுபற்றி குடியரசுத் துணைத் தலைவர் அவர்களே சுயபரிசோதனை செய்து கொள்வார் என்று நம்புகிறேன்.

ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க மறுத்து, 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கும் ‘குதிரை பேர’ அரசு உடனே சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளாலும் எடுத்து வைக்கப்பட்டு, முந்தைய பொறுப்பு ஆளுநர் அவர்களிடம் முறையிடப்பட்டு, அதற்குத் தீர்வு ஏதும் கிடைக்காத நிலையில், இன்றைக்கு அதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும்போது, அரசியல் சட்டப்படி உயர்ந்த பதவியிலிருக்கும் மேதகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பது அரசியல் சட்டத்தின் மீதும், ஆளுநருக்கு உள்ள கடமைகள் மீதும், குடியரசுத் துணைத் தலைவர் பதவியின் கண்ணியத்தின் மீதும், நம்பிக்கை வைத்திருக்கும் என் போன்றோரை மட்டுல்ல, தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

“ஒரு அரசு மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டால் ஐந்து வருடங்கள் கழித்து மக்களிடம்தான் செல்ல வேண்டும்”, என்று மேதகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்து, கட்சி தாவல் சட்டத்தின் நோக்கத்திற்கும், அரசியல் சட்டப்படி ஒரு அரசு நடைபெற வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ள நாட்டின் அரசியல் சட்டத்திற்கும், நிச்சயமாக வலு சேர்ப்பதாக இல்லை என்பதை நினைக்கும்போது, வேதனை மேலும் அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல, “அம்மாவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்”,என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் இதுபோன்ற கருத்தை வெளியிட்டு இருப்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள இயலாதது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேதகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் தமிழகத்தின் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், “பா.ஜ.க.விலிருந்து விலகிவிட்டேன். இனி நான் எந்தக் கட்சியிலும் இல்லை”,என்று அறிவித்தபடி, தனக்கான கடமைகளை உறுதியுடன் மேற்கொள்வதோடு, ஆளுநர் மாளிகையை இனிவரும் காலங்களில் அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தமாட்டார் என்றும் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ramesh Country : United States Date :10/17/2017 5:29:35 PM
தாமரையை எப்படியாவது மலர வைக்க நினைக்கிறார் அவ்வளவுதான். விரைவில் தமிழக அம்மாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே ஒப்பற்ற தலைவர் இந்தியாவின் அம்மாதான், எனவே தாமரையை மலர வையுங்கள் என கூறுவார்.
Name : Paatali Country : India Date :10/17/2017 1:32:22 PM
செயல் தலைவர் இன்னும் தன் அரசியல் நடவடிக்கையை துரித படுத்தினால் ஒழிய நடுவண் அரசோ மாநில அரசோ தங்கள் எண்ணப்படி தலைமை அற்ற மத்திய அரசின் அடிவருடியாக அவர் அவர் பதவியை மட்டுமே கண்ணும் கருத்துமாக காப்பார்கள் வருவாயையும் பெருக்கி கொள்வார்கள் செயல் தலைவர் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று அரசியல் நகர்வை செய்தால் ஒழிய தமிழகத்தில் இந்த எடுபிடி ஆட்சிக்கு முடிவு கட்ட முடியாது.ஆளுநரிடம் அளிக்கும் மனுக்களும் நீதி மன்றத்தில் கொடுக்கும் மனுக்களும் கடைசியில் மோடியின் கட்டளைக்கு அமைதியாகின்றது என்பது திண்ணம்.